தலைவா படத்தினை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு விஜய் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
பல சிக்கல்களை சந்தித்து வந்த தலைவா படமானது 20ம் தேதி தமிழகத்தில் வெளியிடப்படவுள்ளது.
இது குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட்டு 9ம் தேதி வெளிவர வேண்டிய ‘தலைவா’ திரைப்படம், சில அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகளல் திரையிட முடியவில்லை.
கடந்த பத்து நாட்களாக நான், தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், திரையரங்கு அதிபர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் இந்த பிரச்சனையானது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.
மீடியாக்களில் வந்த பல கட்டுக்கதைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதலமைச்சர் ஜெயலலிதா இந்த பிரச்சினையில் தலையிட்டு ‘தலைவா’ திரைப்படம் சுமூகமாக வெளிவர நடவடிக்கை எடுத்துள்ளார்.
பல வேலைகளுக்கு மத்தியில் இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் என்னோடு பொறுமை காத்த அத்தனை ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு ‘தலைவா’ திரைப்படத்தை குடும்பத்தோடு தியேட்டரில் பார்த்து ரசிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று அறிக்கையில் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
actor vijai thanks to chief minister
இதையும் படியுங்கள்
- கச்சத்தீவை தரமுடியாது: இலங்கை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்
- 2023-ல் செவ்வாய் கிரகம் செல்ல பெங்களூர் வாசிகள் முன்பதிவு
- ஐக்கிய முற்போக்கு கூட்டணி நாட்டை 100 வருடம் பின்னோக்கி தள்ளிவிட்டது: பாஜக
- செயல்படாத பொறியியல் கல்லூரிகள்: அடையாளம் காண அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவு; 24 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை
- அண்ணன் சீர் திட்டம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கக் காசு, பட்டுப் புடவை பெற ஆதார் கட்டாயம்; ரூ.812 கோடி ஒதுக்கீடு
- குழந்தைகள் இணைய உரிமை: இணையத்தைப் பயன்படுத்துவது குழந்தைகள் உட்பட அனைவரின் அடிப்படை உரிமை; முழுத் தடை சரியல்ல என உச்ச நீதிமன்றம்
- கொடைக்கானல் ஆன்லைன் டிக்கெட்: பில்லர் ராக்ஸ், குணா குகை உள்ளிட்ட வனத்துறை சுற்றுலாத் தலங்களுக்கு முன்பதிவு கட்டாயம் அறிமுகம்
← முந்தைய செய்தி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி நாட்டை 100 வருடம் பின்னோக்கி தள்ளிவிட்டது: பாஜக
அடுத்த செய்தி →: கச்சத்தீவை தரமுடியாது: இலங்கை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்
