மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: மேற்கு வங்காளத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கடந்த 10-ந் தேதி இறந்தார்.பிறகு நோயாளியின் உறவினர்கள் 2 பயிற்சி மருத்துவர்களை தாக்கினார்கள் .இதனால் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நேற்று கொல்கத்தாவில் மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் மம்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Related posts