ஈரோட்டில் படுத்த படுக்கையாக இருந்த தனது அக்கா அவதிப்படுவதை பார்க்க சகிக்காத தம்பி அவரின் கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். ஈரோடு காசிபாளையம் அருகே உள்ள கல்யாண சுந்தரம் வீதியில் வசித்தவர் பர்வதம்(75). அவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பர்வதத்துக்கு தமிழ்செல்வன், அமுதன், ராஜு ஆகிய மகன்களும், புஷ்பா என்ற மகளும் உள்ளனர். புஷ்பாவை பர்வதத்தின் தம்பி மூர்த்தி(70) தான் திருமணம் செய்து கொண்டார். பர்வதம் தனது தம்பியின் ஆதரவில் இருந்து வந்தார். முதுமையால் உடல் நலம் பாதிக்கப்பட்ட பர்வதம் படுத்த படுக்கையாகிவிட்டார். அவர் அவதிப்படுவதைப் பார்க்க சகிக்காத மூர்த்தி அக்காவை கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். இதையடுத்து அவரின் உடலை அருகில் உள்ள தனது தோட்டத்தில் புதைத்துவிட்டு தாலுகா போலீசில் மூர்த்தி சரணடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் பர்வதம் வீட்டுக்கு…
Read More அக்காவை கருணை கொலை செய்த தம்பி காவல் துறையில் சரண்ஜெயலளித்தாவின் புகை படத்தை கை துண்டால் மறைத்த மத்திய அமைச்சர்
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி துண்டால் மறைத்து காரில் பயணம் செய்துள்ளார் மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன். மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தமிழக அரசின் காரில் பயணம் செய்தபோது அதில் இருந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் காங்கிரஸ் கட்சி துண்டால் மறைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டைக்கு வரும் அமைச்சர்களை அழைத்துச் செல்ல தமிழக அரசு கார் உள்ளது. அந்த காரின் முன் இருக்கைகளின் முன்பு முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் ஒன்று உள்ளது. தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் புதுக்கோட்டை செல்லும் போதெல்லாம் மாநில அரசின் காரை தான் பயன்படுத்துவார். இந்நிலையில் புதுக்கோட்டைக்கு நேற்று சென்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மிரட்டுநிலைக்கு சென்றுவிட்டு அங்கிருந்து காரைக்குடி செல்ல தமிழக அரசின் கார் கொண்டு வரப்பட்டது. அந்த காரின் முன் இருக்கைகளுக்கு முன்பு…
Read More ஜெயலளித்தாவின் புகை படத்தை கை துண்டால் மறைத்த மத்திய அமைச்சர்மழையில் மிதக்கும் சென்னை- திணறும் சென்னை மாநகராட்சி
வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வரும் நிலையல் 2நாட்கலாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் மழை தீவிரம் அடைந்து உள்ளது. மழை காரணத்தால் சென்னை தண்ணீரில் மிதக்கிறது எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் இல்லாமல் அரசு இருந்ததால் வடபழனி போரூர் போன்ற நகரங்கள் தண்ணீரில் மிதக்கிறது மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது சாலையின் நடுவே தண்ணீர் வேகமாக ஓடுவதால் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துள்ளது என வடபழனி மக்கள் வருத்தப் படுகின்றனர். வருடம் வருடம் மழை நேரத்தில் சாலையில் நீர்தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பதிக்கப்படுவது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது were ever in chennai rain watter only
Read More மழையில் மிதக்கும் சென்னை- திணறும் சென்னை மாநகராட்சிசென்னையில் கன மழை பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
schools and colleges closed today சென்னை மாவட்டம் முழுதும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. நேற்று இரவில் இருந்து சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் , திருவள்ளூர் , வேலூர் மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும் அவர் +1 மற்றும் +2 மாணவர்களுக்கு மட்டும் காலாண்டு தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்தார். English summary: schools and colleges closed today Due to heavy rain schools and colleges closed today in chennai district. From last night heavy rain in chennai. Holiday for schools and colleges in thiruvallur and kanchipuram districts.
Read More சென்னையில் கன மழை பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைபூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு செல்ல மக்கள் விருப்பம்
People wish to go to Mars from Earth செவ்வாய் கிரகத்தில் ஒரு நிரந்திர தளத்தை அமைக்க மார்ஸ் ஒன் என்ற அமைப்பு ஒரு திட்ட குழுவை நியமித்துள்ளது . இவர்கள் 2023 ஆம் ஆண்டு சுமார் நாற்பது பேரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர் .அதற்கான செலவு வர்த்தக அனுசரணைகள் மற்றும் தொலைக்காட்சி உரிமங்கள் மூலம் பெறப்படவுள்ளன.இருப்பினும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறும் வகையில் ஒரு குடியிருப்பை ஏற்படுத்துவதற்கு உண்டான தொழில்நுட்பம் இதுவரை இல்லை என்றும் விண்வெளி அமைப்புகள் கூறுகின்றன. இது நாள் வரை செவ்வாய் கிரகத்துக்கு ஆளில்லாத விண்கலன்களே அனுப்பப்பட்டுள்ளன என்றாலும் அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா இன்னும் இருபது ஆண்டுகளில் தமது விண்வெளி ஆய்வாளர்களை அங்கு அனுப்பும் திட்டம் உள்ளது என்று தெரிவித்தனர் . செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக தங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.உலகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர்…
Read More பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு செல்ல மக்கள் விருப்பம்ஜப்பானில் 2 ஆவதுமுறையாக 2020-ல் ஒலிம்பிக் போட்டி
Japan conducts the olympic game 2 time in 2020 ஜப்பானில் 2 ஆவதுமுறையாக 2020-ல் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை கேட்டவுடன் ஜப்பான் நாட்டு மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் பல கொண்டாட்டங்கள் நடத்தினர் .ஆர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் 125 வது கூட்டம் நடைபெற்றது. இதில் 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நகரத்தை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. 2020 -ல் ஒலிம்பிக் போட்டியை நடத்த இஸ்தான்புல் (துருக்கி) மாட்ரிட் (ஸ்பெயின்) டோக்கியோ (ஜப்பான்) ஆகிய நகரங்களில் நடத்த அந்தந்த நாடுகள் உரிமை கோரின.இதனால் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதல் சுற்றில் டோக்யோ 42 வாக்குகளும் இஸ்தான்புல், மாட்ரிட் தலா 26 வாக்குகளும் பெற்றன. வெற்றிக்கு தேவையான 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் கிடைக்காததால் இஸ்தான்புல், மாட்ரிட் ஆகிய நகரங்களில் எதனை வெளியேற்றுவது என்பதற்கு மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது . இதில் இஸ்தான்புல்…
Read More ஜப்பானில் 2 ஆவதுமுறையாக 2020-ல் ஒலிம்பிக் போட்டிவிண்வெளிக்கு ஈரான் தொடர்ந்து குரங்குகளை அனுப்ப முடிவு
Iran to send another monkey into space இரண்டாவது முறையாக விண்வெளிக்கு ஈரான் விண்வெளி மையம் மீண்டும் குரங்கை அனுப்ப முடிவு செய்திருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் ஈரான் விண்வெளி மையதின் சொந்த தயாரிப்பான பிஷ்கம் ராக்கெட்டில் ஒரு குரங்கை முதன்முதலில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. ஈரான் விண்வெளி மையம் அனுப்பிய குரங்கு விண்வெளியில் இருந்து பூமிக்கு பத்திரமாக திரும்பியது. இந்நிலையில், மற்றொரு குரங்கை இன்னும் 45 நாட்களுக்குள் பிஷ்கம்-II ராக்கெட் மூலம் அனுப்பும் திட்டம் ஒன்று இருப்பதாக ஈரான் அரசின் முக்கிய அதிகாரி தெரிவித்தார். இது சம்பந்தமாக தகவல் தெரிவித்த, ஈரான் விண்வெளி மையத்தின் இயக்குநர் ஹமித் பசெலி முதலில் அனுப்பப்பட்ட ராக்கெட் திட எரிபொருளில் இயங்குவதாகும் என்றார். ஆனால் இப்போது அனுப்ப இருப்பது திரவ எரிபொருளை கொண்டு இயங்ககூடியதாகும். மேலும், ஈரான் விண்வெளி மையம் நஹித், தட்பிர், மற்றும் ஷரிப்…
Read More விண்வெளிக்கு ஈரான் தொடர்ந்து குரங்குகளை அனுப்ப முடிவுஅம்மா உணவகங்களில் செப்டம்பர் 15-ந்தேதி முதல் சப்பாத்தி கிடைக்கும்
Soon, chapatis to be on menu of Amma canteens in Chennai ஏழை, எளிய மக்களிடத்தில் அமோக வரவேற்பை பெற்றுள்ள அம்மா உணவகத்தில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் 3 ருபாய்க்கு 2 சப்பாத்திகள் வழங்கப்படவுள்ளது. அம்மா உணவகத்தில் காலை 7 மணி முதல் 10 மணி வரை 1 இட்லி 1 ரூபாய்க்கும், மதிய உணவாக நண்பல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்த அம்மா உணவகங்கள் மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, வேலூர், ஈரோடு ஆகிய 9 மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.சென்னை மாநகராட்சியில் உள்ள 200 உணவகங்களிலும்…
Read More அம்மா உணவகங்களில் செப்டம்பர் 15-ந்தேதி முதல் சப்பாத்தி கிடைக்கும்தென் அமெரிக்கவில் மலை உச்சியில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 43 பேர் பலி
Guatemala bus crash kills dozens, About 43 people killed and many other injured தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கவுதமாலாவின் தலைநகரின் அருகே அமைந்துள்ள சான் மார்டின் ஜிலோட்பெக் எனும் மலைப்பாதை வழியே நிரம்பி வழிந்த பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. சிமால்டனாங்கோ என்னும் இடத்தில இருந்து சான் மார்டின் ஜிலோட்பெக் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த பேருந்தில் சுமார் 90 பேர் பயணம் செய்தனர். அந்த மலைப்பாதை வழியே சென்று கொண்டிருந்த போது, அந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 மீட்டர் பள்ளத்தாக்கில் பாய்ந்து ஆற்றின் கரையில் விழுந்தது. இதில்3 குழந்தை உள்பட 43 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்து நடந்த ஆற்றில் தண்ணீர் மிக வேகமாக சென்று கொண்டிருப்பதால், மீட்புப்பணிகளில் கால தாமதம் ஏற்பட்டு, பின்னர் ஆற்றின் கரையில்…
Read More தென் அமெரிக்கவில் மலை உச்சியில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 43 பேர் பலி130 கிலோ தென் ஆப்பிரிக்கருக்கு நியூசிலாந்து அரசு விசா புதுப்பிக்க மறுப்பு
Visa not extended just because of obesity. A South African chef facing threat of deportation from New Zealand due to his weight and has not granted visa extension. உடல் எடை குறைய வேண்டும், குறையாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்று நியூசிலாந்து அரசு தென் ஆப்பிரிக்கருக்கு 23 மாத இறுதி கெடு விதித்து இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்கது என்னெவென்றால் உலகத்திலேயே நிறைய குண்டான மனிதர்கள் உள்ள நாடு அமெரிக்க, இரண்டாவது மெக்சிகோ, மூன்றாவது நியூசிலாந்து ஆகும். திரு.ஆல்பர்ட் புடேன்ஹஸ் தென் ஆப்பிரிக்க நாட்டை சார்ந்தவர், இவரும் இவருடைய மனைவியும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வேலை நிமித்தமாக நியூசிலாந்தில் உள்ள கிரிஸ்ட்சர்ச் பகுதியில் குடியேறினர். திரு.ஆல்பர்ட் புடேன்ஹஸ் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவரது உடல் எடை மிக அதிகமாக இருந்துவந்தது. ஒவ்வொரு ஆண்டும் குடியேற்ற…
Read More 130 கிலோ தென் ஆப்பிரிக்கருக்கு நியூசிலாந்து அரசு விசா புதுப்பிக்க மறுப்பு

