Japan conducts the olympic game 2 time in 2020
ஜப்பானில் 2 ஆவதுமுறையாக 2020-ல் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை கேட்டவுடன் ஜப்பான் நாட்டு மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் பல கொண்டாட்டங்கள் நடத்தினர் .ஆர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் 125 வது கூட்டம் நடைபெற்றது. இதில் 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நகரத்தை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.
2020 -ல் ஒலிம்பிக் போட்டியை நடத்த இஸ்தான்புல் (துருக்கி) மாட்ரிட் (ஸ்பெயின்) டோக்கியோ (ஜப்பான்) ஆகிய நகரங்களில் நடத்த அந்தந்த நாடுகள் உரிமை கோரின.இதனால் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
முதல் சுற்றில் டோக்யோ 42 வாக்குகளும் இஸ்தான்புல், மாட்ரிட் தலா 26 வாக்குகளும் பெற்றன. வெற்றிக்கு தேவையான 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் கிடைக்காததால் இஸ்தான்புல், மாட்ரிட் ஆகிய நகரங்களில் எதனை வெளியேற்றுவது என்பதற்கு மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது . இதில் இஸ்தான்புல் 49 வாக்குகளும் ,மாட்ரிட் 45 வாக்குகளும் பெற்று இருந்தனர் .இதனால் மாட்ரிட் வெளியேற்றப்பட்டது.அதன் பின் டோக்கியோ, இஸ்தான்புல் இடையே நேரடி போட்டி நடத்தப்பட்டது .இதில் இஸ்தான்புல் 36 வாக்குகளும் டோக்கியோ 60 வாக்குகளும் எடுத்திருந்தனர் . ஜப்பான் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஒலிம்பிக் போட்டியை நடத்துகிறது.
Japan conducts the olympic game 2 time in 2020
English summary:
On September 7 th International olympic committe announced that olympic games 2020 will be conducted in Tokyo. Jacques Rogge, the president of the IOC had barely finished uttering the city’s name thousands of miles away in Buenos Aires when thousands of people began celebrating.