பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு செல்ல மக்கள் விருப்பம்

People wish to go to Mars from Earth

People wish to go to Mars from Earth
People wish to go to Mars from Earth

செவ்வாய் கிரகத்தில் ஒரு நிரந்திர தளத்தை அமைக்க  மார்ஸ் ஒன் என்ற அமைப்பு ஒரு திட்ட குழுவை நியமித்துள்ளது . இவர்கள் 2023 ஆம் ஆண்டு சுமார் நாற்பது பேரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர் .அதற்கான செலவு வர்த்தக அனுசரணைகள் மற்றும் தொலைக்காட்சி உரிமங்கள் மூலம் பெறப்படவுள்ளன.இருப்பினும் செவ்வாய் கிரகத்தில்  மனிதர்கள் குடியேறும் வகையில் ஒரு குடியிருப்பை ஏற்படுத்துவதற்கு உண்டான தொழில்நுட்பம் இதுவரை இல்லை என்றும் விண்வெளி அமைப்புகள் கூறுகின்றன. இது நாள் வரை செவ்வாய் கிரகத்துக்கு ஆளில்லாத விண்கலன்களே அனுப்பப்பட்டுள்ளன என்றாலும் அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா இன்னும் இருபது ஆண்டுகளில் தமது விண்வெளி ஆய்வாளர்களை அங்கு அனுப்பும் திட்டம் உள்ளது என்று தெரிவித்தனர் .

செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக தங்க  மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.உலகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக குடியிருக்க விண்ணப்பித்துள்ளனர். இதில் முதல் 10 நாடுகள் பட்டியிலில் அமெரிக்கர்கள் (47,654)  இந்தியர்கள் (20,747) சீனா (13,176)  பிரேசில் (10,289)பிரிட்டன் (8,497)  கனடா (8,421)  ரஷ்யா (8,197) மெக்சிகோ (7,464) பிலிப்பைன்ஸ் (4,365) ஸ்பெயின் (3722) என உலகம் முழுவதும் 2 லட்சத்து 2 ஆயிரத்து 586 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

English summary:

People wish to go to Mars from Earth

Since April thousands of people have applied to take a one way trip to mars.  The plan is for the first four astronauts to lift off in 2022.After a seven-month journey they will settle permanently on the red planet to conduct scientific experiments and do whatever it takes to survive.Existing research suggests that the colonists will face at least four major psychological challenges. Individually each of these is serious enough to raise a red flag. In combination they are a disaster waiting to happen.

Related posts