100 killed in Central African Republic clash மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டு அதிபராக பிரான்காய்ஸ் போசிசீ இருந்தார். கடந்த 2013 மார்ச் மாதம் மிகேல் ஜோடோடியா, அதிபர் பிரான்காய்ஸ் போசிசீ அரசை கவிழ்த்தார். அதன் பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி மிகேல் ஜோடோடியா இடைநிலை அரசின் புதிய அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். இது சதி போன்று உள்ளது என கூறி கண்டனம் எழுந்து, பிரான்காய்ஸின் ஆதரவாளர்களுக்கும், மிகேலின் ஆதரவாளர்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது.இந்நிலையில் கடந்த சனிக்கிழமை முதல் ஏற்பட்ட பயங்கர மோதல்களில் 100க்கு மேற்பட்டோர் பலியாகினர், 50 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த மோதல்களினால் இந்நாட்டின் தலைநகர் பாங்குய்யின் வடமேற்கு பகுதியான பௌகா மற்றும் பொஸ்ஸாங்கோ உள்ளிட்ட பல பகுதிகள் மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. முன்னால் அதிபர் பிரான்காய்ஸின் ஆதரவாளர்கள் தங்களது தலைவரை மறுபடியும் அதிபராக ஆக்க…
Read More மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் மோதல்:100பேர் பலி! 50பேர் படுகாயம்!ஜேம்ஸ்பாண்ட் திரைபடத்தில் பயன்படுத்திய கார் ரூ.5.47கோடிக்கு ஏலம்
James Bond submarine car sells for more than five crore Indian Rupees பிரபல ஜேம்ஸ்பாண்ட் திரை படத்தில் பயன்படுத்தப்பட்டஏலம் விடப்பட்டுள்ளது. அந்த நீர்மூழ்கிக் கார் 865,000 டாலருக்கு ஏலம் போனது. இங்கிலாந்தை சார்ந்த பிரபல நடிகர் ரோஜர் மூர், கடந்த 1973ஆம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை துப்பறியும் நிபுணர் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்தார். அவர் நடித்த அதனை படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றது. அவற்றில் 1977-இல் தயாரிக்கப்பட்ட வெற்றி படங்களில் ‘தி ஸ்பை ஹூ லவ்ட் மீ’ என்ற திரைபடமும் ஒன்று. இந்த திரைபடத்தில் கதாநாயகன் ரோஜர் மூர், பெண் ஜேம்ஸ்பாண்ட் பார்பரா பாக்கும், நீர்மூழ்கிக் கார் ஒன்றை பயன் படுத்தி ஹெலிகாப்டர் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் காட்சி மிகவும் பிரபலமானது . இந்த காட்சிக்காக ஒரு வெள்ளை…
Read More ஜேம்ஸ்பாண்ட் திரைபடத்தில் பயன்படுத்திய கார் ரூ.5.47கோடிக்கு ஏலம்திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உணவில் குட்டி பாம்பு
Dead snake found in food served at Kerala hospital canteen கேரளாவில் உடல் நலகுறைவாக இருந்த தனது மகனை ஒரு பெண்மணி, திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்குள்ள மருத்துவமனை உணவு விடுதியில் தனது மகனுக்கு உணவு வாங்கி கொடுத்த அவர், அந்த உணவு பாக்கெட்டை (பச்சைப்பட்டாணி கறி) திறந்து பார்த்ததில் குட்டி பாம்பு ஒன்று அதில் செத்த நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.அவர் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் இது சம்பந்தமாக புகார் செய்தார். பின்னர் பொதுமக்கள் தகவல் அறிந்து அந்த உணவு விடுதி முன் கூடி போராட்டம் நடத்தினர். உடனே உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் போலீசுக்கும் ஆஸ்பத்திரி நிர்வாகம் புகார் செய்ததால் அவர்கள் விரைந்து வந்தனர். மேலும் அவர்கள் பொதுமக்களிடம் சமரச பேச்சு நடத்தி, அந்த உணவு விடுதி நிர்வாகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த பின்னர்…
Read More திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உணவில் குட்டி பாம்பு8 வயது சிறுவன் முஷீர் கான் லீக் தொடர் கிரிக்கெட் விளையாடி சாதனை
Musheer Khan is now the youngest cricketer to play Kanga League Sports கங்கா லீக் தொடரில் தனது 8 வயதில் இடம் பெற்று சாதித்துள்ளான் முஷீர் கான். மும்பை கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் (எம்.சி.ஏ.,), 1948 முதல் நடத்தப்படுகிறது கங்கா லீக் கிரிக்கெட் தொடர் (19 வயது). இத்தொடரில் 10 வயதில் (2007ல்) விளையாடி சாதித்தவர் சர்ப்ராஸ். இதை முறியடித்துள்ளான் இவரது சகோதரர் முஷீர் கான். தனது 8 வயதில் ஸ்போர்ட்ஸ்பீல்டு கிரிக்கெட் கிளப் அணியில் இடம் பெற்று தற்போது விளையாடுகிறார். ராஜவாதி அணிக்கு எதிரான முதல் போட்டியில், பேட்டிங்கில் ஒரு மணி நேரம் களத்தில் நின்று 42 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தான் முஷீர். ஸ்போர்ட்ஸ்பீல்டு அணியின் முதல் இன்னிங்ஸ் (87) ஸ்கோரை துரத்திய ராஜவாதி அணி 40 ரன்னில் சுருண்டது. 6 ஓவர்கள் பவுலிங்…
Read More 8 வயது சிறுவன் முஷீர் கான் லீக் தொடர் கிரிக்கெட் விளையாடி சாதனைசீனாவில் காலி தண்ணீர் பாட்டில்கள் கொடுத்து இலவச ரயில் டிக்கெட்
Empty Plastic bottles pay your metro rail pass சீனாவில் காலி தண்ணீர் பாட்டில்கள் கொடுத்து இலவச ரயில் டிக்கெட் பெற்று ரயில் கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்யும் திட்டத்தை சீனாவின் பீஜிங் சப்வே ரயில் அறிமுகம் செய்திருக்கிறது. சீனாவில் ரயில் பயணிகள் காலி தண்ணீர் பாட்டில்ளை கண்ட இடங்களில் வீசி சுற்றுசுழலில் ஏற்படும் மாசை கட்டுபடுத்த இந்த திட்டம் கொண்டுவரப்பட்டிருகிறது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படும். மேலும் சேகரித்த காலி தண்ணீர் பாட்டில்களை கொண்டு மறு சுழற்சி முறையை பயன்படுத்தி புதிய பிளாஸ்டிக் பாட்டில்களை தயார் செய்து பயன்படுத்த சீனா பீஜிங் சப்வே ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் படி காலி தண்ணீர் பாட்டில்கள் சேகரிக்கும் இயந்திரங்கள் தற்பொழுது இரண்டு ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தில் ஒரு காலி பாட்டில் போட்டால், 0.15 டாலர் மதிப்புள்ள தொகை பயணிகளுக்கு கிடைக்கும். 15 பாட்டில் போடோமேயானால், கணிசமான தூரத்துக்கு…
Read More சீனாவில் காலி தண்ணீர் பாட்டில்கள் கொடுத்து இலவச ரயில் டிக்கெட்டெல்லி மாணவி கொலை வழக்கில் வெள்ளிகிழமையன்று தீர்ப்பு
In Delhi rape case, The sentencing postponed to Friday: The Judge Declared. பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடை பெற்ற டெல்லி மாணவி கொலை வழக்கில் தீர்ப்பு வெள்ளி அன்று தள்ளி வைத்து வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. நீண்ட நேரம் வழக்கு நடந்ததாலும் நாட்டின் அமைதியை கருதியும் நீதிபதி வழக்கின் தீர்ப்பை வெள்ளி கிழமை ஒத்திவைத்தார், அபூர்வமான வழக்கு என்பதால் இரு தரப்பு வாதமும் வெகு நேரம் சென்றத்தாலும், குற்றவாளிகள் மூன்று பேருக்கும் வாதிடும் வழக்குரைசர்கள் தங்கள் சார்பு செய்திகளை எடுத்து வைத்தனர். ஒருவர் பேருந்து மட்டுமே ஒட்டியதாகவும் ஒருவர் கற்பழிப்பு மட்டுமே செய்ததாகவும் ஒருவருக்கு குடும்பம் மற்றும் குழைந்தைகளின் நலன் கருதி மரண தண்டனை விதிக்காமல் ஆயுள் தண்டனை மட்டும் வழங்க வேண்டும் என்றும் வெகு நேரம் வாதிட்டதால் வழக்கு நீண்ட நேரம் சென்றது. இருப்பினும் நால்வர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டது…
Read More டெல்லி மாணவி கொலை வழக்கில் வெள்ளிகிழமையன்று தீர்ப்புஈரானில் பேருந்துகள் நேருக்குநேர் மோதல் 44 பேர் பலி 39 பேர் படுகாயம்
Iran bus accident , 44 killed, 39 injured in collision ஈரானின் கோம் நெடுஞ்சாலையில், 2 பேருந்துகள் அதிவேகமாக ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதி கொண்டு தீ பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் சிக்கி 44 பயணிகள் பரிதாபமாக கொல்லபட்டனர். படுகாயமடைந்த 39 பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றிரவு, 11 மணியளவில் இஸ்பஹான் என்னுமிடத்தில் இருந்து புறப்பட்ட பேருந்து ஒன்று, ஈரான் – கோம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாரா விதமாக அந்த பேருந்தின் டயர் ஒன்று வெடித்தது. இதனால் தடுமாறி கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து, அதற்கு முன் சென்றுகொண்டிருந்த காரில் மோதியது, அதனைத் தொடர்ந்து எதிரே வந்து கொண்டிருந்த மற்றொரு பேருந்தின் மீதும் அதிவேகமாக மோதிய வேகத்தில் இரு பேருந்துகளும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. கண் இமைக்கும் நேரத்தில் பேருந்து தீப்பிடித்ததை உணர்ந்து, அதில் பயணம்…
Read More ஈரானில் பேருந்துகள் நேருக்குநேர் மோதல் 44 பேர் பலி 39 பேர் படுகாயம்சூப்பர்மேன் உருவம் பொறித்த நாணயங்கள் கனடா நாட்டில் வெளியீடு
Canada issues coins for Superman’s 75th சூப்பர்மேன் கதாபாத்திரம், சூப்பர் ஹீரோ காமிக்ஸ் கதைகளில் தோன்றி 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதை கொண்டாடும் வகையில் கனடா நாட்டில் டொரண்டோ துண்டாஸ் சதுக்கத்தில் சூப்பர்மேன் உருவம் பொறித்த7 புதிய நாணயங்களை ராயல் கனடா மின்ட் நேற்று வெளியிட்டது. சூப்பர்மேன் கதாபாத்திரமானது கனடா நாட்டின் ஜோ ஷஸ்டர் மற்றும் அவரது அமெரிக்க நண்பரான ஜெர்ரி சீகல் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. உண்மை மற்றும் நியாயம் ஆகியவற்றிற்கு போராடும் விதமாக சூப்பர்மேன் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது. இந்த நாணயங்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆனவை. சூப்பர்மேன் கதாபாத்திரத்தின் 75 ஆண்டு வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தருணங்களை வெளிப்படுத்தும் வகையில் நாணயங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. அவற்றில் சில கடந்த 1938ம் ஆண்டு வெளியான கதைகளில் இருந்து எடுக்கப்பட்டு உள்ளது. மற்றும் தி நியூ…
Read More சூப்பர்மேன் உருவம் பொறித்த நாணயங்கள் கனடா நாட்டில் வெளியீடுகேதர்நாத் கோவிலில் மீண்டும் இன்று வழக்கமான பூஜைகள் துவக்கம்
In symbolic opening for Kedarnath temple, a 4-hour puja today புனரமைப்புப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து 86 நாட்களுக்குப் பின்னர் கேதார்நாத் கோவிலில் இன்று முதல் பூஜைகள் தொடங்கியுள்ளன. உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் மலை மாவட்டங்களில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட இமாலய சுனாமியால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. ஏராளமான பக்தர்கள் பலியானார்கள். பிரசித்தி பெற்ற கேதர்நாத் கோவிலை சுற்றி அமைந்திருந்த ஹோட்டல்கள், கடைகள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன. ஆனால் கோவிலுக்குஎந்த வித சேதமும் ஏற்படவில்லை. எனினும் சடலங்கள் குவிந்திருந்த காரணத்தினாலும், கோவிலுக்கு செல்லும் பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டதாலும் பூஜைகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் கேதார்நாத் கோவிலில் மீண்டும் பூஜை நடத்துவதற்காக கடந்த 3-ந் தேதி முதல் திருப்பணிகள் தொடங்கின. மலைப்பாதை சீரமைக்கப்படாத காரணத்தால் ஹெலிகாப்டர் மூலமாக 24…
Read More கேதர்நாத் கோவிலில் மீண்டும் இன்று வழக்கமான பூஜைகள் துவக்கம்மணப்பெண் மாப்பிளைக்கு தாலி கட்டி புதியசடங்கு அறிமுகம்
New matrimonial wedding method in tamilnadu முதன் முறையாக தமிழ்நாட்டில் மணப்பெண் மாப்பிள்ளைக்கு தாலியை கட்டி ஒரு புதிய சடங்கை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். இந்த புதுமையான திருமணம் பொதுவுடைமை எழுத்தாளரும் த.மு.எ.ச மா.செ.ச.தமிழ்செல்வன் அவர்களின் தம்பி பாலசுப்ரமணியம், ஜெயா பாலசுப்ரமணியம் மகன் பிரேம் ஆனந்துக்கும், பிரபல புத்தக நிறுவனர் கோவை பெ.தியாக ராஜன், கலைவாணி மகள் சிந்துவுக்கும் , சி.பி.ஐ நல்லகண்ணு தலைமையில் நடைபெற்றது. தமிழ் சினிமாவில் முதன் முதலில் வெளிவந்த திரைப்பாடலை இயற்றியவர் பிரேம் ஆனந்தின் கொள்ளு தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ். இவர் மிக பிரபல எழுத்தாளர், பாடலாசிரியர் சுதந்திர போராட்ட தியாகி. பெரியப்பா எழுத்தாளர் ச.தமிழ்செல்வன். ஒரு சித்தப்பா எழுத்தாளர் கோணங்கி. கடைசி சித்தப்பா சங்கீத அகாடமியில் தேசிய விருது வாங்கிய ச.முருகபூபதி. இவர்களின் பின்னணியில் வந்த பிரேம் ஆனந்த் கொள்கைக்கு ஏற்ப சாதிமறுப்பு காதல் திருமணம்…
Read More மணப்பெண் மாப்பிளைக்கு தாலி கட்டி புதியசடங்கு அறிமுகம்

