ஜெயலளித்தாவின் புகை படத்தை கை துண்டால் மறைத்த மத்திய அமைச்சர்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி துண்டால் மறைத்து காரில் பயணம் செய்துள்ளார் மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்.

மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தமிழக அரசின் காரில் பயணம் செய்தபோது அதில் இருந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் காங்கிரஸ் கட்சி துண்டால் மறைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டைக்கு வரும் அமைச்சர்களை அழைத்துச் செல்ல தமிழக அரசு கார் உள்ளது. அந்த காரின் முன் இருக்கைகளின் முன்பு முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் ஒன்று உள்ளது.

தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் புதுக்கோட்டை செல்லும் போதெல்லாம் மாநில அரசின் காரை தான் பயன்படுத்துவார்.

இந்நிலையில் புதுக்கோட்டைக்கு நேற்று சென்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மிரட்டுநிலைக்கு சென்றுவிட்டு அங்கிருந்து காரைக்குடி செல்ல தமிழக அரசின் கார் கொண்டு வரப்பட்டது.

அந்த காரின் முன் இருக்கைகளுக்கு முன்பு இருந்த ஜெயலலிதாவின் புகைப்படத்தை பார்த்த அவர் முகம் சுளித்துள்ளார்.

இதனைத் பார்த்த அவரது உதவியாளர் காங்கிரஸ் கட்சி துண்டை போட்டு அந்த புகைப்படத்தை மறைத்துள்ளார்.

அதன் பிறகு தான் நாச்சியப்பன் அந்த காரில் பயணம் செய்தார்.

முதல்வரின் படம் காங்கிரஸ் கட்சி துண்டால் மூடப்பட்டிருப்பதைப் பார்த்த அரசு அதிகாரிகள் அதிர்ந்து போய் இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.

1

 

2

 

3

படங்கள் நக்கீரன்
நன்றி

central minister sudharsan nachiyappan hide jeyalalitha picture

 

 

Related posts