ஈரானில் பேருந்துகள் நேருக்குநேர் மோதல் 44 பேர் பலி 39 பேர் படுகாயம்

Iran bus accident , 44 killed, 39 injured in collision

Iran bus accident , 44 killed, 39 injured in collision
Iran bus accident , 44 killed, 39 injured in collision

ஈரானின் கோம் நெடுஞ்சாலையில், 2 பேருந்துகள் அதிவேகமாக ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதி கொண்டு தீ பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த  பயங்கர விபத்தில் சிக்கி 44 பயணிகள் பரிதாபமாக கொல்லபட்டனர். படுகாயமடைந்த 39 பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றிரவு, 11 மணியளவில் இஸ்பஹான் என்னுமிடத்தில் இருந்து புறப்பட்ட பேருந்து ஒன்று, ஈரான் – கோம் நெடுஞ்சாலையில்  சென்று கொண்டிருந்தபோது எதிர்பாரா விதமாக அந்த பேருந்தின் டயர் ஒன்று வெடித்தது. இதனால் தடுமாறி கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து, அதற்கு முன் சென்றுகொண்டிருந்த காரில் மோதியது, அதனைத் தொடர்ந்து எதிரே வந்து கொண்டிருந்த மற்றொரு பேருந்தின் மீதும் அதிவேகமாக மோதிய வேகத்தில் இரு பேருந்துகளும் தீப்பிடித்து எரிய தொடங்கியது.   கண் இமைக்கும் நேரத்தில் பேருந்து தீப்பிடித்ததை உணர்ந்து, அதில் பயணம் செய்த பயணிகள் சுதாகரிப்பதற்கு முன் தீ மளமள என பரவ ஆரம்பித்து, பேருந்துகளில் இருந்த பயணிகள் 44 பேர் பரிதாபமாக எரிந்து சாம்பலாயினர்.  தகவல் அறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு உடனே வந்து, மேற்கொண்ட முயற்சியில் படுகாயமடைந்த 39 பயணிகளை மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

Iran bus accident , 44 killed, 39 injured in collision

This accident  occurred when the Tyre burst while travelling in a High way. The bus collided with a car and an another Bus.

At least 44 people were killed and 39 injured in Iran when two passenger buses collided outside the capital Tehran and caught fire, Iranian media reported on Tuesday. At 11 p.m. (1830 GMT) on Monday night a bus carrying passengers from Isfahan to Tehran suffered a punctured tire, crossed a guardrail and swerved into oncoming traffic, where it hit a second bus travelling from Tehran to Yazd, highway police chief Mohammad Reza Mehmandar told the Mehr news agency. Both buses erupted in flames after the collision, he said. Statistics compiled by UNICEF (United Nations Children’s Fund) show that road accidents occur in Iran at a rate 20 times higher than the world average, with nearly 28,000 people killed and 300,000 people injured and disabled annually in the country of 75 million.

Related posts