ஓடும் ரயிலில் பிறந்து கழிவறை வழியே விழுந்த குழந்தை உயிரோடு மீட்பு

The Baby born in train toilet and fell down in Track saved by passengers

ஓடும் இரயில் கழிவறையில் பிரசவிக்கப்பட்டு, கழிவறை துளை வழியே தண்டவாளத்தில் விழுந்த பச்சை குழந்தை எந்த ஒரு காயமும் இன்றி மீட்கப்பட்டது.

The Baby born in train toilet and fell down in Track saved by passengers

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் அருகில் ஜூம்கா கிராமத்தைச் சேர்ந்த திருமதி.அப்ரோஜா பிபி, தன் நிறைமாத கர்ப்பிணி மகளான திருமதி.ரெஹானி பிபியை இரயிலில் அழைத்துக் கொண்டு போனார். அப்போது இரயில் நாடியா மாவட்டம் பலாஷி இரயில் நிலையத்தில் நின்றது. நிறை மாத கர்பிணியான திருமதி.ரெஹானி பிபி கழிவறைக்குச் போனார். அங்கே திடீர் என்று அவருக்கு பிரசவம் வேதனை வந்து குழந்தையை பிரசவித்தார். பிறந்த குழந்தை கழிவறையின் துளை வழியே தண்டவாளத்தில் விழுந்தது. குழந்தை கீழே விழுந்தவுடன் அவர் கதறினார். அவரது கதறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த சக பயணிகள் உடனே குழந்தையை மீட்டனர்.

தாய் மற்றும் சேய் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எந்த காயமும் இல்லாமல் குழந்தை மீட்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்திலும், சந்தோஷத்திலும் ஆழ்த்தியது.

The Baby born in train toilet and fell down in Track saved by passengers

Related posts