இந்தியாவில் தொழில் தொடங்க சிறந்த நகரம் பெங்களூர்: புதிய ஆய்வு

Bangalore tops as business hub, Chennai a close second

Bangalore tops as business hub, Chennai a close second

இந்தியாவிலேயே தொழில் ஒன்றை தொடங்கி நடத்த சிறந்த நகர பட்டியலில் பெங்களூர் நகரம் முதல் இடம் பெற்றுள்ளது. இதற்குஅடுத்தபடியாக சென்னை, மும்பை, புனே ஆகிய நகரங்கள் அந்த சிறப்பை பெற்றுள்ளன. இந்த சிறப்பு  பட்டியலில், இந்தியாவின் தலைநகரமான டெல்லி இடம்பெறவில்லை எனினும், டெல்லியின் பிராந்தியத்தில் அமைந்து இருக்கும் நொய்டா, குர்கான் ஆகிய நகரங்கள்  17-ம் இடம் மற்றும் 19-ம் இடம் ஆகிய வரிசையில் வருகின்றன.

மனிதவளம், அடிப்படை வாழ்க்கைத் தரம், உட்கட்டமைப்பு வசதிகள், நகர கலாச்சாரம், ஆகிய தன்மைகளின் அடிப்படையில் பெங்களூர் தான் தொழில் தொடங்க பெரிதும் உகந்ததாக உள்ளது. மேலும் இங்கு தடையில்லா மின்சாரம், தட்டுப்பாடு இல்லாத குடிதண்ணீர் விநியோகம்,  எதிதான போக்குவரத்து வசதி மற்றும் குடியிருப்பு வசதி, அலுவலக இடங்கள் மற்றும் மருத்துவ சேவைகள் தாராளமாக கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பெங்களூரின் தட்பவெப்பநிலை மேலை நாடுகளை  சேர்த்தவர்கள் விரும்பும் வகையில் இதமாக இருக்கிறது.

இந்த வகையில் சென்னை, மும்பை, பூனா ஆகிய நகரங்கள் பெங்களூருக்கு அடுத்த சிறந்த தொழில் மையங்களாக உள்ளன என்று ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. இந்த ஆய்வறிக்கையில் நாட்டிலுள்ள 21 தொழில் நகரங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஆச்சரியகரமாக நாட்டின் தலைநகர் டெல்லி இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. மேலும் நொய்டா 17–வது இடத்திலும், கூர்கான் 19–வது இடத்திலும்தான் உள்ளன.

முக்கிய நகரங்களை பின்னுக்கு தள்ளி சிறிய மற்றும் நடுத்தர நகரங்கள் தொழில் வளர்ச்சியில் நன்கு முன்னேறி வருவதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. நடுத்தர நகரங்களான இந்தூர் மற்றும் புவனேஸ்வர் முறையே 5 மற்றும் 6–வது இடங்களில் உள்ளன. தமிழ்நாட்டின் கோயம்முத்தூர் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. அகமதாபாத் எட்டாவது இடத்திலும், நாக்பூர் ஒன்பதாவது இடத்திலும், கொச்சி 10–வது இடத்திலும் உள்ளன.மறுசீரமைப்பு சூழலை உருவாக்கும் சர்வதேச முயற்சிகள், மேலாண்மை (ஜிஐஆர்இஎம்) மற்றும் ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனம் டி.டி.இஜட் ஆகியவை நடத்திய ஆய்வின் முடிவில்தான் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bangalore tops as business hub, Chennai a close second

Chennai is ranked second among the top 21 business destinations in the country, according to a recent ranking unveiled by the Global Initiative for Restructuring Environment and Management (GIREM), and a not-for-profit industry body, DTZ, a global leader in property services. The report, which scored the cities across various economic, environmental and cultural parameters, ranked Chennai among the top five locations as the best to invest, with two major ports – Chennai Port and Ennore port – contributing greatly to its economy. Besides, around 30 per cent of India’s automobile industry and 40 per cent of auto components industry are based in the city. However, Bangalore is ranked above Chennai due to its high potential to attract talent, favourable weather conditions, good availability of office space suiting different income groups, efficient water management systems, high-quality education system and a welcoming, multifarious city culture, according to the report. As per the report, Chennai has outscored Mumbai, the financial capital of India, as the city is a major industrial, cultural, commercial, economic and educational hub in South India. It has a diversified economic base anchored by the automobile, software services, textile, medical tourism, hardware manufacturing, petro-chemicals, aerospace and financial services. Also, the city has a fully computerised stock exchange, the Madras Stock Exchange. It is also known as the ‘Detroit of India’ due to the huge automobile industry base here. With Chennai having the fourth largest Gross Metropolitan Product in India, it has a very good and diversified talent pool available. All these factors make it a hot-spot destination for business investments, the report said. The ranking has been developed in association with leading real estate consultancy DTZ. It rates the cities based on factors such as human capital, energy, water, transport, housing, healthcare, climate, office space availability and city culture, among others. These constitute the basic eco-socio-economic factors critical in determining the growth of the city.

Related posts