In Delhi rape case, The sentencing postponed to Friday: The Judge Declared.
பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடை பெற்ற டெல்லி மாணவி கொலை வழக்கில் தீர்ப்பு வெள்ளி அன்று தள்ளி வைத்து வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. நீண்ட நேரம் வழக்கு நடந்ததாலும் நாட்டின் அமைதியை கருதியும் நீதிபதி வழக்கின் தீர்ப்பை வெள்ளி கிழமை ஒத்திவைத்தார், அபூர்வமான வழக்கு என்பதால் இரு தரப்பு வாதமும் வெகு நேரம் சென்றத்தாலும், குற்றவாளிகள் மூன்று பேருக்கும் வாதிடும் வழக்குரைசர்கள் தங்கள் சார்பு செய்திகளை எடுத்து வைத்தனர். ஒருவர் பேருந்து மட்டுமே ஒட்டியதாகவும் ஒருவர் கற்பழிப்பு மட்டுமே செய்ததாகவும் ஒருவருக்கு குடும்பம் மற்றும் குழைந்தைகளின் நலன் கருதி மரண தண்டனை விதிக்காமல் ஆயுள் தண்டனை மட்டும் வழங்க வேண்டும் என்றும் வெகு நேரம் வாதிட்டதால் வழக்கு நீண்ட நேரம் சென்றது. இருப்பினும் நால்வர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த வழக்கின் தீர்ப்பு வெள்ளிகிழமை 2.30 மணிக்கு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார். தீர்ப்பு ஒத்தி வைத்தாதால் ஏமாற்றத்தில் நீதிமன்றத்தை சுற்றி மக்கள் கோஷம் எழுப்பியவண்ணம் பதாகைகளை பிடித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.