Delhi: AAP minister Rakhi Birla’s car attacked புதுடெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. கெஜ்ரிவால் கட்சியில் 6 மந்திரிகள் இடம் பெற்றுள்ளனர். 6 பேரில் ஒருவர் ராக்கி பிர்லா என் பெண்ணும் ஒருவர். இவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருக்கிறார். இன்று இவர் டெல்லியின் மங்கோல்புரி பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற கார் பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டது. அப்போது கூடட்டதில் இருந்த அடையாளம் தெரியாத நபர்களால் அவர் கார் தாக்கப்பட்டது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, இந்த தாக்குதலால் நாங்கள் பின்வாங்க மாட்டோம். போலீஸ் பாதுகாப்பு எனக்கு தேவையில்லை என்று கூறினார். ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தவுடன் ஆடம்பர செலவுகளை குறைக்கும் வகையில் மந்திரிகளுக்கு அதிகப்படியான போலீஸ் காவல் தேவையில்லை என்று…
Read More டெல்லியில் பெண் அமைச்சரின் வகனம் மீது திடீர் தாக்குதல்பாட்னாவில் கலப்பு திருமணம் செய்த மகன் மீது தந்தை போட்ட அவதூறு வழக்கு
Man files suit against son for inter-caste marriage பீகார் மாநிலம் பாட்னாவில் தன்னை மீறி வேறு சாதிப் பெண்ணை மணந்த மகன் மீது அவதூறு வழக்குப் போட்டுள்ளார் ஒரு தந்தை. இந்த வழக்கைப் போட்டுள்ளவரின் பெயர் சித்தநாத் சர்மா. இவர் ஒரு வழக்கறிஞர். இவர் தனது மகன் சுஷாந்த் ஜாசு மீது வழக்குப் போட்டுள்ளார். அதில், எனது மகன் கலப்பு திருமணம் செய்துள்ளான். எனவே அவனை நான் ஒதுக்கி வைத்து விட்டேன். இனிமேல் எனது பெயரை அவன் எந்த இடத்திலும் பயன்படுத்தக் கூடாது. மீறி எனது பெயரை பயன்படுத்தினால், பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் ரூ. 10,000 எனக்கு காப்புரிமையாக தர வேண்டும். மேலும் எனது பெயரையும், கெளரவத்தையும் பாழ்படுத்தி விட்டான் எனது மகன். எங்களது விருப்பத்தை மீறி அவன் வேறு சாதிப் பெண்ணை மணந்துள்ளான்.…
Read More பாட்னாவில் கலப்பு திருமணம் செய்த மகன் மீது தந்தை போட்ட அவதூறு வழக்குபாகிஸ்தானில் 900 ஆண்டு பழமையான சிவன் கோவில் 66 ஆண்டுகளுக்கு பின் பூஜை துவக்கம்
Restoration Of Ancient Indian Temple In Pakistan; A Step In Right Direction பாகிஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோவிலில், 66 ஆண்டுகளுக்குப் பின், பூஜைகள் துவங்கியுள்ளன. பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில், சக்கரவால் என்னும் இடத்தில், புராதன, கடாஸ்ராஜ் சிவன் கோவில் உள்ளது. இந்தக் கோவில், 900 ஆண்டுகளுக்கு முந்தையது. இங்குள்ள குளம், சிவனின் கண்ணீரால் உருவானதாக தல வரலாறு கூறுகிறது.இந்தக் குளத்தில் மூழ்கி எழுந்தால், பாவங்கள் விலகும் என்று இந்துக்கள் நம்பினர்.கடந்த 1947ல், இருநாட்டு பிரிவினைக்குப் பின், இந்தக் கோவிலில், பூஜைகள் நிறுத்தப்பட்டு, மூடப்பட்டது.கோவில் குளத்தைச் சுற்றிலும் தொழிற்சாலைகள் துவக்கப்பட்டதாலும், பராமரிப்பு இல்லாததாலும், குளம் வறண்டு போனது. இந்நிலையில், 35 கோடி ரூபாய் செலவில், ஏழு ஆண்டுகளாக, கோவிலை புதுப்பிக்கும் பணி நடந்தது. புதுப்பிக்கும் பணி முடிந்ததும், குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளது.…
Read More பாகிஸ்தானில் 900 ஆண்டு பழமையான சிவன் கோவில் 66 ஆண்டுகளுக்கு பின் பூஜை துவக்கம்பீகாரில் பிஸ்கட் திருடியதால் தலைகீழாக கட்டி அடிக்கப்பட்ட 12 வயது சிறுவன் பலி
12 year old Indian boy beaten to death for cookie theft பீகாரில் பிஸ்கட் திருடிய குற்றத்திற்காக பஞ்சாயத்தில் தலைகீழாக கட்டி அடிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரிலுள்ள தாடி என்ற கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று பிஸ்கட், சிறிதளவு பணம் மற்றும் புகையிலை திருடியதாக சிறுவர்கள் இருவர் மீது அளிக்கப்பட்ட புகாரின்பேரில், ஊர் பஞ்சாயத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அஜய் யாதவ் என்பவர் அளித்த புகாரின் பேரில், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுவர்கள் இருவரும் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புகொண்டனர். அதன் பேரில் பஞ்சாயத்து அவர்களுக்கு தண்டனை அளித்தது. செய்த தவறுக்கு தண்டனையாக அவர்களுக்கு 10000 ரூபாய் அபராதமும், பஞ்ஜாயத்தார் முந்நிலையில் தலைகீழாக கட்டி அடிக்க வேண்டும் எனவும் முடிவெடுத்தனர். அபராதத்தைக் கட்ட பெற்றோர்கள் இரண்டு நாள் அவகாசம் கேட்டனர்…
Read More பீகாரில் பிஸ்கட் திருடியதால் தலைகீழாக கட்டி அடிக்கப்பட்ட 12 வயது சிறுவன் பலிகர்நாடகா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் 2012டில் தொழில்துறையில் அபரிதமாக வளர்ச்சி அடைந்துள்ளது
Gujarat among industrial growth laggards in FY12 2011-12ஆம் ஆண்டில் கர்நாடகம் மற்றும் ராஜஸ்தானில் தொழில்துறை அபரிதமாக வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் திரிபுரா, ஜார்க்கண்ட், குஜராத் மாநிலங்களில் தொழில்துறை வீழ்ச்சியடைந்திருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2009-10ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் 44.8% தொழில்துறை வளர்ச்சி ஏற்பட்டிருந்தது. ஆனால் 2011-12ஆம் ஆண்டிலோ இந்த வளர்ச்சி குறைந்துபோயிருக்கிறது. 2010-11-ல் 1.25% ஆக இருந்த வளர்ச்சி 2011-12ல் 0.99 ஆக குறைந்து போயிருக்கிறது. ஆனால் கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலோ 129.92 மற்றும் 101.47% தொழில்துறை வளர்ச்சி கண்டிருக்கிறது. இதேபோல் கோவா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் முந்தைய ஆண்டைக்காட்டிலும் 93.82%, 55.72% தொழில்துறை வளர்ச்சி கண்டிருக்கிறது. திரிபுரா மற்றும் உத்தரப்பிரதேசத்திலோ 37.42, 13.12% தொழில்வளர்ச்சி குறைந்து காணப்பட்டிருக்கிறது. Gujarat among industrial growth laggards in FY12 A set of government data released recently seems…
Read More கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் 2012டில் தொழில்துறையில் அபரிதமாக வளர்ச்சி அடைந்துள்ளதுஎமிரேட்ஸ் விமானத்திற்குள் புகைப்பிடிக்க முயன்றவரை இருக்கையில் கட்டிப்போட்ட சிப்பந்திகள்
Man tied up after trying to smoke on Brisbane-bound flight சிங்கப்பூரில் இருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு வந்த விமானத்தில் புகைப்பிடிக்க முயன்ற நபர் தனது இருக்கையில் கட்டிப் போட்டு வைக்கப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து கிளம்பிய எமிரேட்ஸ் விமானம் ஒன்று ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகருக்கு கிளம்பியது. இந்த விமானத்தில் பயணம் செய்த மாதியாஸ் ஜார்க்(54) என்பவர் புகைப்பிடிக்க அடிக்கடி முயன்றார். விமானத்தில் புகைப்பிடிக்கக் கூடாது என்று கூறிய சிப்பந்திகளை தாக்க பாய்ந்தார். அவரது அட்டூழியம் தாங்க முடியாமல் அவரை இருக்கையில் கை மற்றும் கால்களை கட்டிப் போட்டுவிட்டனர் சிப்பந்திகள். விமானம் நேற்று அதிகாலை 1.10 மணிக்கு பிரிஸ்பேன் விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானத்தில் இருந்த மாதியாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் பிரிஸ்பேனில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாதியாஸ்…
Read More எமிரேட்ஸ் விமானத்திற்குள் புகைப்பிடிக்க முயன்றவரை இருக்கையில் கட்டிப்போட்ட சிப்பந்திகள்சைக்கிள் கடைக்காரரின் மகள் லண்டன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படிப்பதற்கான தகுதிதேர்வில் சாதனை
A cycle shop owner’s daughter from Nellai has excelled in English skill test and now going to London for higher studies. சாதாரண, கிராமத்து சைக்கிள் கடைக்காரரின் மகள் லண்டன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது கிராமமே மகிழ்ச்சிக் கடலில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கிறது. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள காருகுறிச்சியை சேர்ந்தவர் முப்பிடாதி. அப்பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இவரது இரண்டாவது மகள் சுப்புலட்சுமி, நெல்லை ராணி அண்ணா அரசு கலைக்கல்லூரியில் எம்.காம். இரண்டாமாண்டு படிக்கிறார். தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் சார்பில், லண்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஒரு செமஸ்டர் முழுவதையும் இலவசமாகப் படித்து தேர்வு எழுதுவதற்கான சிறப்பு தகுதி தேர்வு நடந்தது. அரசு கல்லுரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் மட்டுமே இந்த…
Read More சைக்கிள் கடைக்காரரின் மகள் லண்டன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படிப்பதற்கான தகுதிதேர்வில் சாதனைஏ.டி.எம்களில் பணம் எடுப்பதற்கு ஒவ்வொரு முறையும் கட்டணம் வசூலிக்க வங்கிகள் முடிவு
Now, Pay More For ATM Transactions ஏடிஎம்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கவும், வாடிக்கையாளர்களிடம் கட்டணம் பிடித்தம் செய்யும் வங்கிகளின் பரிசீலனைக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இருந்தால் வங்கிகளின் பொருளாதார நிலை கருதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், அத்தகைய கட்டண வசூல் குறித்து ரிசர்வ் வங்கிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கே.சி. சக்ரபர்த்தி தெரிவித்துள்ளார். தற்போது , வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.,ல் ஒரு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். அதே சமயம் மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,ல் மாதத்திற்கு 5 முறை வரை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளவும், அதற்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கும் முறை…
Read More ஏ.டி.எம்களில் பணம் எடுப்பதற்கு ஒவ்வொரு முறையும் கட்டணம் வசூலிக்க வங்கிகள் முடிவுசார்ஜாவில் மீசை வைத்த இந்தியா என்ஜினீயரின் பாஸ்போர்ட் பறிமுதல்
Officer detains Indian man’s passport in Sharjah over dislike of moustache கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சுஜீல் குமார். கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவர் ஐக்கிய அரசு எமிரேட் நாடுகளில் ஒன்றான சார்ஜா சென்றிருந்தார். இவர் பயணம் செய்த விமானம் சார்ஜாவில் இறங்கியது. அங்கு அவரது பாஸ்போர்ட்டை அதிகாரி ஒருவர் பரிசோதித்து விட்டு அதன் மீது ‘ரப்பர் ஸ்டாம்ப்’ குத்தினார். ஆனால், அதை திருப்பி தராமல் அதில் இருந்த சுஜீல் குமாரின் போட்டோவை பார்த்து விட்டு சர்ச்சையில் ஈடுபட்டார். அதாவது நேரில் இவர் வைத்திருந்த மீசைக்கும், போட்டோவில் முகத்தில் இருந்த மீசைக்கும் வித்தியாசம் இருந்தது. எனவே, முகத்தில் இருக்கும் மீசையை அகற்றி விட்டு வந்து காட்டினால் தான் பாஸ்போர்ட்டை தரமுடியும் என ‘கெடுபிடி’ செய்தார். அதற்கு சுஜீல்குமார் விளக்கம் அளித்தார். ஆனால் இவர் சொன்னதை…
Read More சார்ஜாவில் மீசை வைத்த இந்தியா என்ஜினீயரின் பாஸ்போர்ட் பறிமுதல்சத்திஸ்கரில் 10 வயது சிறுவனை துண்டுதுண்டாக வெட்டி படுகொலை
Child sacrifice suspected after missing boy’s body found சத்திஸ்கர் மாநிலத்தில் கண்டதுண்டமாக வெட்டப்பட்ட நிலையில் கிடைத்துள்ள 10 வயது சிறுவனின் பிரேதம் உள்ளூர் வாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. சத்திஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டம் ரத்னபூர் பகுதியை சேர்ந்த ஹரிசங்கர் (10) என்ற சிறுவன் கடந்த சனிக்கிழமை காலை அப்பகுதியின் மலை மீது அமைந்துள்ள லக்கன் தேவி கோயிலுக்கு போவதாக தாயாரிடம் கூறிவிட்டு சென்றான். மாலை வெகுநேரமாகியும் மகன் வீடு திரும்பாததால் கலக்கம் அடைந்த தாய், ஊர் முழுவதும் தேடி பார்த்தார். அவனைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் உள்ளூர் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், கோயிலில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் ரத்தக்கரை படிந்த ஹரிசங்கரின் உடைகள் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, பிலாஸ்பூர் மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்ட் தலைமையில் ஏராளமான…
Read More சத்திஸ்கரில் 10 வயது சிறுவனை துண்டுதுண்டாக வெட்டி படுகொலை

