பீகாரில் பிஸ்கட் திருடியதால் தலைகீழாக கட்டி அடிக்கப்பட்ட 12 வயது சிறுவன் பலி

12 year old Indian boy beaten to death for cookie theft

12 year old Indian boy beaten to death for cookie theft
பீகாரில் பிஸ்கட் திருடிய குற்றத்திற்காக பஞ்சாயத்தில் தலைகீழாக கட்டி அடிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகாரிலுள்ள தாடி என்ற கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று பிஸ்கட், சிறிதளவு பணம் மற்றும் புகையிலை திருடியதாக சிறுவர்கள் இருவர் மீது அளிக்கப்பட்ட புகாரின்பேரில், ஊர் பஞ்சாயத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அஜய் யாதவ் என்பவர் அளித்த புகாரின் பேரில், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுவர்கள் இருவரும் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புகொண்டனர். அதன் பேரில் பஞ்சாயத்து அவர்களுக்கு தண்டனை அளித்தது. செய்த தவறுக்கு தண்டனையாக அவர்களுக்கு 10000 ரூபாய் அபராதமும், பஞ்ஜாயத்தார் முந்நிலையில் தலைகீழாக கட்டி அடிக்க வேண்டும் எனவும் முடிவெடுத்தனர். அபராதத்தைக் கட்ட பெற்றோர்கள் இரண்டு நாள் அவகாசம் கேட்டனர் ஆனால் அதுவும் நிராகரிக்கப் பட்டது. கொடுக்கப்பட்ட தண்டனையின்படி இரு சிறுவர்களையும் ஆடைகள் களைந்த நிலையில் தலை கீழாக கட்டி அடித்தனர்.பலத்த காயம் அடைந்த சோட்டு குமார் சம்பவ இடத்திலேயே பலியாக, மற்றொரு சிறுவன் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகிறார். 

சம்பவத்தைக் கேள்விப்பட்டு விரைந்து சென்ற அந்த பகுதி போலீசார் அச்சம்பவத்தில் தொடர்புடைய எட்டு பேரை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி அஜித் குமார் சத்யார்தி கூறுகையில், சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு கிராமத்தில் உள்ளவர்கள் செய்த இந்த செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது, மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவருக்கு தக்க தண்டனை அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

12 year old Indian boy beaten to death for cookie theft

A 12-year-old boy was beaten to death at a village court in Bihar for allegedly stealing a few packets of biscuits from a village shop. The gruesome incident occurred at Thadi village in eastern Bihar’s Purnia district on Sunday. As per reports, a theft was committed in the grocery shop of a local villager Ajay Yadav on Friday night after which the shop-owner suspected the two village boys were the culprits. Subsequently, both the boys identified as Pintu Kumar (13) and Chhotu Kumar (12) were caught by the local villagers and brought before a hurriedly-convened village court. At the court, the accused children confessed to the crime, after which the court ordered them to be hung upside down and beaten.After severe beating of the children in the presence of the “judges”, one of the boys, Chhotu, succumbed to his injuries while the other boy sustained severe injuries. The attackers had also taken off the clothes of the children before beating them. Reports said when the condition the victims started deteriorating fast, their parents requested the court to forgive them but the court instead asked them to pay up a fine of Rs10,000 (Dh592) to get their children back. The poor parents even agreed to pay up the fine and sought two days time to pay the penalty but the court remained adamant on paying them then and there as one of the children died. The police, meanwhile, have registered a case against eight people and are conducting raids to arrest the accused who are absconding. “The incident is quite serious as the villagers have taken law into their hands. We are not going to spare any of them,” the local district superintendent of police Ajit Kumar Satyarthi said on Monday, adding raids were on to nab the accused. According to him, the children had stolen a few packets biscuits, some chewing tobacco and petty cash.

Related posts