சத்திஸ்கரில் 10 வயது சிறுவனை துண்டுதுண்டாக வெட்டி படுகொலை

Child sacrifice suspected after missing boy’s body found

Child sacrifice suspected after missing boy's body found

சத்திஸ்கர் மாநிலத்தில் கண்டதுண்டமாக வெட்டப்பட்ட நிலையில் கிடைத்துள்ள 10 வயது சிறுவனின் பிரேதம் உள்ளூர் வாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சத்திஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டம் ரத்னபூர் பகுதியை சேர்ந்த ஹரிசங்கர் (10) என்ற சிறுவன் கடந்த சனிக்கிழமை காலை அப்பகுதியின் மலை மீது அமைந்துள்ள லக்கன் தேவி கோயிலுக்கு போவதாக தாயாரிடம் கூறிவிட்டு சென்றான்.

மாலை வெகுநேரமாகியும் மகன் வீடு திரும்பாததால் கலக்கம் அடைந்த தாய், ஊர் முழுவதும் தேடி பார்த்தார். அவனைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் உள்ளூர் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், கோயிலில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் ரத்தக்கரை படிந்த ஹரிசங்கரின் உடைகள் கிடப்பதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, பிலாஸ்பூர் மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்ட் தலைமையில் ஏராளமான போலீசார் காடுகள் அடர்ந்த மலைப்பகுதியில் சிறுவனின் பிரேதத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பல மீட்டர் இடைவெளியில் அவனது தலை, கை, கால் போன்றவை துண்டு துண்டாக கிடந்தன.

அவற்றை சேகரித்த போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஹரிசங்கரின் துண்டிக்கப்பட்ட உடலின் பாகங்கள் கிடைத்த அதே இடத்தில் 2 ஆடுகள் பலியிடப்பட்டு கிடந்ததாகவும், பக்கத்தில் யாகம் வளர்த்து பூஜை செய்யப்பட்டதற்கான அடையாளம் காணப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அந்த இடத்தில் சிகப்பு நிற வளையல்களும் சிதறி கிடந்ததால் ஹரிசங்கரை யாரோ ஒரு மந்திரவாதி கடத்தி சென்று காளி தேவிக்கு நரபலி கொடுத்து விட்டதாக உள்ளூர் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Child sacrifice suspected after missing boy’s body found

A 10-year-old boy, who was allegedly abducted, was found killed, with his body chopped into parts in Ratanpur, a religious town of Chhattisgarh’s Bilaspur district, the police said here today.  While villagers strongly suspect it to be a case of human sacrifice, the police believe that it is a case of some wild animal attacking the boy.  The dead body of Harishankar, who went missing since Saturday, was found on the hills of the Lakhan Devi temple, with his head, hands and legs chopped off, Bilaspur Additional Superintendent of Police (Rural) J R Thakur told PTI.  According to the officer, on Sunday, Gulaba Bai, a native of Ratanpur, lodged a complaint that her son Harishankar had gone missing since Saturday afternoon, after which a kidnapping complaint was registered by the police.  During investigation, the priest of the Lakhan Devi temple informed that the victim had visited the hill temple on Saturday and left the place after sometime.  Later, an intense search launched in the forest about 100 metres from the temple yielded the victim’s bloodstained clothes, he said.  The body of the boy, whose head, hands and legs were found severed from the torso were found deeper in the forest, besides corpses of two domestic goats and red bangles, he said.  A post mortem of the body revealed some wild animal’s bite marks, indicating an animal attack on the boy, he said, although, a further investigation is likely to reveal more clues.  However, villagers rejected the claims of the police and said that Harishankar’s death was the result of some rituals or black magic.  There is a possibility that wild animals might have eaten the child’s body parts after they were thrown into the jungle, the villagers said.

Related posts