Food Security Bill CM writes another letter to PM சென்னை, ஆக. 25: தமிழக அரசின் சார்பில் தாம் குறிப்பிட்டுள்ள பல்வேறு கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பரிசீலித்து போதிய திருத்தங்களை உணவு பாதுகாப்பு சட்டத்தில் கொண்டு வரவேண்டுமென்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு இன்று அனுப்பியுள்ள நேர்முக கடிதத்தில் கூறியிருப்பது வருமாறு:- மத்திய அரசால் அவசர அவசரமாக பிறப்பிக்கப்பட்ட தேசிய உணவு பாதுகாப்பு அவசரச் சட்டத்திற்கு மாற்றாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாவில் செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்து ஆகஸ்ட் 2ம் தேதி நான் உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தது நினைவிருக்கலாம். நான் தெரிவித்த யோசனைகளில் சிலவற்றை இந்திய அரசு ஏற்றுக் கொண்டு மசோதாவில் சில திருத்தங்கள் செய்து இருப்பதாக அறிகிறேன். இதில் மிக முக்கியமானது என்னவென்றால் எனது வேண்டு கோளின்படி பொதுவிநியோக திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கு தற்போது…
Read MoreCategory: தமிழக சிறகுகள்
விஜயகாந்துக்கு ராகுல் காந்தி டெலிபோனில் பிறந்த நாள் வாழ்த்து..
Rahul gandhi sent birthday greeting to DMDK chief Vijayakanth 25 ஆகஸ்ட் 2013: இன்று தனது 61வது பிறந்த நாளை கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல்காந்தி, டெலிபோனில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். தனது மனைவி பிரேமலதாவுடன் திருப்பதி கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு வழிபட்ட அவர் வழக்கம் போல எளிமையாக இன்று பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். செய்தியாளர்கள் கூட்டத்தில், வரும் 2014- தேர்தலில் யாருடன் கூட்டணி என கேட்டனர். முதலில் தேர்தல் தேதியை அறிவிக்கட்டும் பின்னர் கூட்டணி குறித்து அறிவிக்கிறேன் என்றார். அவருக்கு பல்வேறு தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.சமீபத்தில்தான் தலைவா பட சிக்கலிலிருந்து மீண்ட நடிகர் விஜய்யும், விஜயகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்தார். சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன்,…
Read Moreகடலூர் மாவட்ட வணிக வரித்துறை அதிகாரி ராஜேஸ்வரி கைது
Cuddalore District business tax officer Rajeswary arrested கடலூரில் ஒன்றரை லட்சம் ரூபாயை லஞ்சமாக வாங்கிய மாவட்ட வணிக வரித் துறை அதிகாரி ராஜேஸ்வரி (40) லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டார். சிதம்பரம் தேரடி தெருவில் சதீஷ்குமார் என்பவர் நிலக்கரி சாம்பலில் இருந்து செங்கல் தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்துக்கு கடலூர் மாவட்ட வணிக வரித்துறை அதிகாரி ராஜேஸ்வரி வந்து கணக்கு வழக்குகளை சரிபார்த்தார். அந்த நிறுவனத்துக்கு வரி குறைப்பு செய்திருப்பதாகவும், அதற்கு ரூ.8 லட்சம் லஞ்சம் தரவேண்டும் என்றும் நிறுவன உரிமையாளர் சதீஷ்குமாரிடம் கேட்டார். அதற்கு அவர் முதல் தவணையாக ரூ. 1½ லட்சம் தருவதாக அதிகாரியிடம் கூறினார். பின்னர் வணிக வரித்துறை அதிகாரி அந்த பணத்தை நாளை காலை சிதம்பரம் தேரடி வீதிக்கு கொண்டு வந்து தரும்படி கூறிவிட்டு…
Read Moreசிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் பயங்கர வெடிவிபத்து
fire accident near sivakasi சிவகாசி அருகே எம்.துரைசாமிபுரத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 20 அறைகள் வெடித்து சிதறின. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள எம்.துரைசாமிபுரத்தில், சிதம்பரம் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. 40 அறைகள் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் இன்று பிற்பகலில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 20 அறைகள் வெடித்து சிதறியதாக அங்கிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த வெடி விபத்தால் உயிரிழப்பு பற்றி எதுவும் இதுவரை ஆதரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு சிவகாசி அருகே முதலிபட்டியில் நிகழ்ந்த வெடி விபத்தில்…
Read Moreமதுரையை தகர்க்க தீவிரவாதிகள் திட்டம்; உளவுத்துறை எச்சரிக்கை
terrorist attack suspected in tamilnadu தீவிரவாதிகள் மதுரையை தகர்க்க சதித் திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து இந்தியாவுக்குள் ஊடுருவ செய்து நாச வேலையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் பிடிபட்ட தீவிரவாதிகள் இது தொடர்பாக அளித்த வாக்கு மூலத்தில் பாகிஸ்தானின் சதிச் செயல் அம்பலமானது. அதன் பிறகும் பாகிஸ்தானின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது கும்பலுக்கும் தீவிரவாதிகளுக்கும் அடைக்கலம் அளித்து வருகிறது. தற்போது தீவிரவாதிகளின் பார்வை தென் இந்தியா மீது விழுந்துள்ளதாக உளவுத்துறைக்கு நம்ப தகுந்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதற்கு முன் காஷ்மீர், குஜராத், மும்பை வழியாகவும் வங்காளதேசம், நோபளம் வழியாகவும் தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஊடுருவச் செய்தது. இந்த முறை இலங்கை வழியாக தமிழ்நாட்டுக்குள்…
Read Moreதி.மு.க. தலைவர் மு.கருணாநிதி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம்
DMK leader M.karunanidhi’s letter to prime minister திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் வான்வெளி மற்றும் திரவ உந்துவிசை கல்வி நிறுவனத்தையும், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தையும் அமைக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரோ மூலம், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், இந்திய வான்வெளி தொழில்நுட்ப நிலையம் துவங்கப்பட்டது. இந்நிலையில், வான்வெளி மற்றும் திரவ உந்துவிசை விஞ்ஞானிகள் பற்றாக்குறையை சமாளிக்க, வான்வெளி மற்றும் திரவ உந்துவிசை கல்வி நிறுவனத்தை அமைக்க வேண்டிய கட்டாயம், மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இக்கல்வி நிறுவனத்தை அமைக்க தேவையான நிலம் மற்றும் வசதிகள், திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ளது. குறிப்பாக, வான்வெளி, திரவ உந்துவிசை, அதிவேக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் கட்டுவதற்கு தேவையான தொழில்நுட்பம் இங்கு கிடைக்கும். எனவே, இக்கல்வி நிலையத்தை மகேந்திரகிரியில் அமைக்க வேண்டும். இதேபோல் இரண்டாவது…
Read Moreஅ.தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே அடக்குமுறை தான்: ராமதாஸ் அறிக்கை
Dr.Ramadass blames aiadmk Government அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே அடக்குமுறை தான் என்று கூறும் அளவுக்கு தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. அரசுக்கு எதிராக எவரும் குரல் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக அடுக்கடுக்கான அடக்கு முறைகளை ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்துவிட்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட 144 தடையாணை, இடையில் சில பகுதிகளில், சில வாரங்கள் தளர்த்தப்பட்டதை தவிர, 10 மாதங்களாக நீடிக்கிறது. அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பிக்கப்பட்ட 144 தடையாணையும், இடையில் சில நாட்கள் தளர்த்தப்பட்டதைத் தவிர, இதுவரை விலக்கிக்கொள்ளப்படவில்லை. இதனால், இம்மாவட்டங்களில் அரசியல் கட்சிகள் தங்களின் ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்ற முடியவில்லை. ஆட்சியாளர்களின் தவறுகளை கண்டித்து குரல் கொடுப்பது தான் எதிர்க்கட்சிகளின் முக்கியக் கடமையாகும். ஆனால், இந்தக் கடமையைக் கூட செய்யவிடாமல் எதிர்க்கட்சிகளின் குரல்வளையை…
Read Moreஅவதூறாக செய்தி ஒளிபரப்பிய கேப்டன் டிவி ஊழியர்கள் மீது வழக்கு
முதல்வர் குறித்து அவதூறாக செய்தி ஒளிபரப்பியது தொடர்பாக கேப்டன் டிவி ஆசிரியர் உள்பட மூன்று பேர் மீது முதல்வர் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கேப்டன் டிவியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் குறித்து செய்தி ஒளிபரப்பானது. அதில், முதல்வர் குறித்தும், மக்கள் பணம் ரூ. 7.25 கோடியை தேவை இல்லாமல் செலவழிப்பதாகவும் செய்தி வெளியானது. இந்த செய்தி ஆதாரம் இல்லாமலும், உறுதிப்படுத்தாமலும் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இது, முதல்வரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது என்று கூறி முதல்வர் சார்பில் மாநகர அரசு வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் மற்றும் கூடுதல் அரசு வழக்குரைஞர் எம்.கே.அசோகன் ஆகிய இருவரும் கேப்டன் டிவி செய்தி வாசிப்பாளர் மைதிலி கண்ணன், செய்தி ஆசிரியர்கள் அரவிந்தன் மற்றும் நாராயணசாமி ஆகியோர் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தனர். இந்த…
Read Moreநாமக்கலில் வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை
Dowry harassment in Namakkal -The young girl committed suicide நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பெருமாள்கோயில் மேட்டைச் சேர்ந்த மாதேஸின் மகன் சோமசுந்தரம் (32) சேலம் வருமானவரித்துறை அலுவலக தாற்காலிக கார் ஓட்டுநர். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சிற்றுந்து ஓட்டுநராக பணியாற்றிய போது ராசிபுரம் அருகே ஓ.சௌதாபுரத்தைச் சேர்ந்த அருணாச்சலத்தின் மகள் அகிலா(20) என்பருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் நாமக்கல் அருகே முருகன்கோயில் பகுதி என்ஜிஜிஓ காலனியிலுள்ள வனஅலுவலர் வரதராஜன் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தனர். இவர்களுக்கு ஒன்னரை வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. திருமணமாகி ஒன்றறை ஆண்டுகளில் வரதட்சணை கேட்டு மனைவியை, சோமசுந்தரம் கொடுமை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அகிலா கொடுத்த புகார்படி போலீஸார் இருவரையும் சமரசம் செய்து அனுப்பி…
Read Moreநுகர்வோருக்கு மின்வெட்டு நேரம் குறைப்பு
High voltage electricity to consumers using electrosection Time Reduction தமிழகத்தில் உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கு மின்வெட்டு நேரம் இன்று முதல் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான நேரம் தவிர மற்ற நேரங்களில் இன்று முதல் மின்வெட்டு முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்படுகிறது. மாலை 6 மணி முதல் 10 மணி வரை தற்போதுள்ள 90 சதவிகித மின்வெட்டு 40 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது. அடுத்த மாதம் இறுதி வரை இது அமலில் இருக்கும் என்றும், அதன் பிறகு மின்இருப்பைக் கருத்தில் கொண்டு மின்வெட்டு நேரம் தீர்மானிக்கப்படும் என்றும்…
Read More