PMK Gk Mani against tamilnadu government தமிழக அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து குரல் கொடுக்குமாறு பாமக தலைவர் ஜி.கே. மணி 15 கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களின் நலன்களுக்கான போராட்டங்களை நடத்துவதற்கும், பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கும் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. தருமபுரி, விழுப்புரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பல வாரங்களாக 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் எந்த நிகழ்ச்சியையும் நடத்த முடியவில்லை. மற்ற மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றாலும், அடக்குமுறைகளுக்கு குறைவில்லை. காவல்துறை, 144 தடை உத்தரவு ஆகியவற்றின் உதவியுடன் ஆட்சியை நடத்திவிடலாம். பொதுமக்களோ அல்லது எதிர்க்கட்சிகளோ எதிர்த்தால் அவர்களை ஒடுக்கிவிடலாம் என்று தமிழக ஆட்சியாளர்கள் நினைப்பதையே இது காட்டுகிறது.…
Read More அரசின் அடக்குமுறையை எதிர்த்து ஜி.கே மணி 15கட்சிகளுக்கு அழைப்புCategory: தமிழக சிறகுகள்
பசுமை வீடுகள் பரப்பளவு அதிகரிப்பு: முதல்வர் ஜெயலலித்த அறிவிப்பு
TN announces larger green houses for weavers பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் நெசவாளர்களுக்கு கட்டப்பட உள்ள வீடுகளின் பரப்பளவை 365 சதுர அடியாக அதிகரித்து உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டித் தருவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் தமது தலைமையில் நடைபெற்றதாகக் குறிப்பிட்டார். கூட்டத்தில், பெரும்பாலான நெசவாளர்கள் தங்கள் வீடுகளிலேயே தறிகளை வைத்துத் தொழில் புரிவதாக தெரிவிக்கப்பட்டது. எனவே பசுமை வீடுகள் திட்டத்தில் கட்டப்படும் 300 சதுர அடி பரப்பளவிலான வீடுகள் போதாது என்றும் நெசவாளர்களுக்கு வீடுகள் கட்டித் தர குறைந்தபட்சம் 365 சதுர அடி தேவை என்று எடுத்துரைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த விரிவான விவாதத்துக்குப் பிறகு, நெசவாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 365 சதுர அடியில் வீடுகள் கட்டித் தர உத்தரவிட்டுள்ளதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதன்படி ஒவ்வொரு…
Read More பசுமை வீடுகள் பரப்பளவு அதிகரிப்பு: முதல்வர் ஜெயலலித்த அறிவிப்புதமிழகத்தில் மீண்டும் மின் பற்றாக்குறை??.
Back to power shortage அரசுக்கு சொந்தமான தூத்துக்குடி அனல்மின்நிலையல் 210 மெகாவாட் மின்உற்பத்தி திறன்கொண்ட 5அலகுகள் மூலமாக நாள்தோறும் 1050மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் சமீபகாலமாக தொடரும் இயந்திர பழுது, பாய்லர் பழுதுகளால் அவ்வப்போது மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சுமார் 1,200 மெகாவாட் வரை மின் தேவை கூடியுள்ளது. மேலும் காற்றாலையும் திடீரென கைவிட்டதால் 3 மாதத்துக்கு பின் தமிழகத்தின் பல பகுதிகளில் மின்சார தடை மீண்டும் அமலாகி உள்ளது. தமிழகத்தின் மொத்த மின்தேவை 12,500 முதல் 13,000 மெகாவாட் ஆக உள்ளது. சுமார் 4,000 மெகாவாட் அளவுக்கு பற்றாக்குறை இருப்பதால், மின்தடை அறிவிக்கப்பட்டது. ஆனால், வெப்பத்தின் தன்மைக்கு ஏற்றவாறு மின்தேவையில் ஏற்றம், இறக்கம் இருந்து வருகிறது. கிராமப்புறங்களில் 5 மணி நேரமும், நகர்ப்புறங்களில் 3 மணி…
Read More தமிழகத்தில் மீண்டும் மின் பற்றாக்குறை??.தமிழகத்தில் நாசவேலை??. 40 கிலோ வெடி பொருட்கள் பதுக்கள்??.
pak sleeper cells infiltrate into tn with 40 kg explosives தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நாசவேலையை செய்வதற்காக 40 கிலோ வெடி பொருட்களுடன் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஸ்லீப்பர் செல்கள் பதுங்கியுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவம் போல மீண்டும் ஒரு தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்ட மிட்டிருப்பதாக மத்திய உளவு பிரிவினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். நெல்லை மேலாப்பாளையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 17½ கிலோ மட்டும் சிக்கிய நிலையில் மீதமுள்ள வெடி பொருட்கள் வேறு எங்காவது பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று போலீசார் தீவிரமாக தேடத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் மதுரை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, மயிலாடுதுறை போன்ற முக்கிய நகரங்களுக்கு தீவிரவாதிகள் குறிவைத்துள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியானது. தமிழகத்தில் ரதயாத்திரை மேற்கொண்ட அத்வானி செல்லும் பாதையில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டது.…
Read More தமிழகத்தில் நாசவேலை??. 40 கிலோ வெடி பொருட்கள் பதுக்கள்??.தமிழகத்தின் கல்யாண சமையல் சாதம் உடலுக்கு அதுவே பிரமாதம்
Tamilnadu breakfast is best in the world தமிழகத்தின் பாரம்பரிய உணவான இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்த காலை உணவு என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற பெரு நகரங்களில் சாப்பிடப்படும் காலை உணவுடன் ஒப்பிடுகையில் சென்னையின் இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய காலைநேர உணவு பழக்கம் குறித்து மும்பை, டில்லி, கோல்கட்டா, சென்னை ஆகிய 4 பெருநகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. 8 முதல் 40 வயது வரையிலான சுமார் 3600 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு, அவர்களின் உடலில் நிறைந்துள்ள சத்துக்களின் அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கார்போஹைட்ரோட், ஆற்றல், புரோட்டீன், கொழுப்புக்கள், கால்சியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. சமீப காலமாக இந்தியாவில் மக்களிடையே ஆரோக்கியம் குறித்த கவனம் அதிகரித்து வருகிறது;…
Read More தமிழகத்தின் கல்யாண சமையல் சாதம் உடலுக்கு அதுவே பிரமாதம்கப்பலுக்குள் விஷ வாயு கசிவு 2 பணியாளர்கள் மரணம்
Leakage of poisonous gas killed 2 ship workers in Tuticorin port தூத்துக்குடி துறைமுகத்தில் மரத்தடிகள் இறக்கிய கப்பலின் உள்ளே சிக்கிய தனியார் நிறுவன பணியாளர்கள் இருவர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் நான்காவது சரக்கு தளத்தில் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சரக்கு கப்பலில் இருந்து மரத்தடிகள் இறக்கும் பணிகள் நடந்தது. இந்த மரத்தடிகள் தூத்துக்குடியிலுள்ள செயின்ட் ஜான் தனியார் நிறுவனத்தின் மூலமாக இறக்குமதியானது. சரக்கு கப்பலின் ஒரு கேப்சர் பகுதியில் மரத்தடிகள் இறக்கப்பட்ட பின்னர் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவன பணியாளர்கள் மரத்தடிகளை சரிபார்த்தனர். மரத்தடிகள் ஏதும் கப்பலின் உள்ளே உள்ளதா-? என்பதை பார்ப்பதற்காக தனியார் நிறுவன பணியாளர்களான தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்த விக்டர்மோகன்(40), லயன்ஸ் டவுன் பகுதியை சேர்ந்த ஜோபாய் (50) இருவரும் சரக்குகப்பலின் முதல் பகுதி…
Read More கப்பலுக்குள் விஷ வாயு கசிவு 2 பணியாளர்கள் மரணம்சிதம்பரம் நீதிமன்ற சாவியைக் காணவில்லை
chidambaram court key missing நீதிமன்றச் சாவியைக் காணவில்லை என சிதம்பரம் நீதிமன்ற உதவியாளர் போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். சிதம்பரம் நீதிமன்றத்தில் உதவியாளராக பணி புரிந்து வருபவர் ஸ்ரீதரன். இவர் நேற்று சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘தான் சிதம்பரம் நீதிமன்ற உதவியாளராக பணியாற்றுவதாகவும், நேற்று காலை பஸ்நிலையத்திற்கு வந்த போது தன்னிடம் இருந்த 2வது கூடுதல் அமர்வு நீதிமன்ற சாவியும், வெளிக்கதவு சாவியையும் காணாமல் போனதாக தெரிவித்துள்ளார். ஸ்ரீதரனின் வழக்கைப் பதிவு செய்து கொண்ட போலீசார் அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். chidambaram court key missing The Chidambaram court administration has filed a complaint in police station that the court key was missing from yesterday. Advertisement: Real estate…
Read More சிதம்பரம் நீதிமன்ற சாவியைக் காணவில்லைவிபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர்கல் உடல் உறுப்புகள் தானம்
police escort helps speedy shifting of harvested organs விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம், நுரையீரல் பாகங்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு 97 நிமிடத்தில் கொண்டு செல்லப்பட்டன. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கேதன்னஹல்லி கிராமத்தை சேர்ந்தவர் குபேந்திரன் (22). பெற்றோரை இழந்த இவரை பாட்டி மேச்சேரியம்மா வளர்த்தார்.திருவண்ணாமலை தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த குபேந்திரன் கடந்த 24ம் தேதி பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். தீவிர சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், குபேந்திரன் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் குழுவினர் நேற்று முன்தினம் இரவு தெரிவித்தனர். இதையடுத்து குபேந்திரனின் இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், கண்களை தானம் செய்ய சித்தப்பா நடராஜ் சம்மதம் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து குபேந்திரனின் இதயம் சென்னை…
Read More விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர்கல் உடல் உறுப்புகள் தானம்மாடு பிடிக்கப்போய் குட்டையில் மூழ்கிய 3 பள்ளி மாணவிகள் பலி
3 girls drown in lake trying to stop cow from entering காஞ்சிபுரம் அருகே மாட்டின் உயிரைக் காப்பாற்றுவதற்காக குட்டையில் இறங்கிய 3 மாணவிகள், நீரில் மூழ்கி பரிதாபமாகப் பலியானார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆண்டி சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தனலட்சுமி (14), ஷாலினி ( 14) மற்றும் அஜிதா (12). இதில் முறையே தனலட்சுமியும், ஷாலினியும் 9ம் வகுப்பும், அஜிதா 7ம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று விடுமுறை தினமாததால் மூவரும் அருகில் உள்ள பகுதிக்கு மாடு மேய்க்கச் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் மேய்த்து வந்த மாடு ஒன்று அருகிலிருந்த குட்டைக்குள் இறங்குவதைக் கண்டுள்ளனர் அவர்கள். உடனடியாக மாடு நீரில் மூழ்கி விடாமல் வெளியே விரட்டுவதற்காக ஒருவர் பின் ஒருவராக குட்டையில் இறங்கியுள்ளனர். மூவருக்குமே நீச்சல் தெரியாத…
Read More மாடு பிடிக்கப்போய் குட்டையில் மூழ்கிய 3 பள்ளி மாணவிகள் பலிதர்மபுரியில் கருக்கலைப்பு செய்த 45 வயது போலி பெண் டாக்டர் கைது
woman fake doctor arrested தர்மபுரியில், இளம்பெண் ஒருவருக்கு கருக்கலைப்பு செய்த 45 வயது போலி பெண் டாக்டர் கைது செய்யப் பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்த மணி என்பவரது மனைவி வனிதா (27). ஏற்கனவே, இத்தம்பதிகளுக்கு இருபெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வனிதா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அதனையடுத்து ஸ்கேன் செய்து பார்த்தபோது, இம்முறையும் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என தெரியவந்ததாம். 3வதும் பெண் குழந்தையா என நினைத்த தம்பதிகள், அக்குழந்தையை கருக்கலைப்பு செய்து விட முடிவு செய்துள்ளனர். இதற்காக தெரிந்த நர்சு மூலம் பாப்பாரப்பட்டியில் கிளினிக் நடத்தி வரும் ரேணுகா என்பவரிடம் அழைத்து செல்லப் பட்டுள்ளார் வனிதா. ரேணுகாவிடம் கருக்கலைப்பு செய்து கொண்ட வனிதாவிற்கு வீட்டிற்கு திரும்பிய சில நாட்களிலேயே உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில்…
Read More தர்மபுரியில் கருக்கலைப்பு செய்த 45 வயது போலி பெண் டாக்டர் கைது