10 வயது சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 3முதியவர்கள் கைது

Tuticorin police arrested 3 elders for sexually harassing 10 year old girls தூத்துக்குடியில் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக மூன்று முதியவர்களை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் சில முதியவர்கள் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வதாக புகார் எழந்தது. இந்நிலையில், தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த மூன்று முதியவர்கள் இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் அதே பகுதியைச் சேர்ந்த மூக்கையா (65), பால்ராஜ் (66), சர்க்கரை (65) ஆகிய மூவரையும் வெள்ளிக்கிழமை பிடித்தனர். விசாரணையில் மூவரும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையெடுத்து, தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரிடம் இந்த வழக்கு…

Read More

தமிழகத்தில் மீன் வரத்து அதிகமானதால் விலை சரிவு

Fish prices fall due to good supply from pamban,rameshwaram,keelakarai and from other places ராமநாதபுரம்  மாவட்டம் மண்டபம் , பாம்பன், ராமேஸ்வரம், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்களாக இதமான காற்று வீசுவதால் மீனவர்களுக்கு அதிகளவில் விலை உயர்ந்த மீன்கள் சிக்குகின்றன. இதனால் சில வாரங்களாக மீன்களின் விலை குறைந்து வருகிறது. கடந்த வாரம் கிலோ 300 ரூபாய்க்கு விற்ற  250 க்கும், 210 க்கு விற்ற ஊழா 200 க்கும் , 220 க்கு விற்ற முரல் 210 க்கும், 170 க்கு விற்ற வில மீன் 140 க்கும், 100 க்கு விற்ற நகர 80 க்கும், 250 க்கு விற்ற நண்டு 240 க்கும், 240 க்கு விற்ற இறால் 180க்கும், 100 க்கு விற்ற காரல் 80…

Read More

தி.மு.க வில் எந்த கோஷ்டியானாலும் அடக்கப்படும்: கலைஞர் கருணாநிதி

M Karunanidhi said i have power to control the party men தி.மு.க.,வில் எந்தக் கோஷ்டியும் இல்லை,” என, திருமண விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். வேலூர் மாவட்ட தி.மு.க., செயலர் காந்தியின் இல்ல திருமண விழா, கருணாநிதி தலைமையில், சென்னையில் நேற்று நடந்தது. அப்போது அவர் பேசியதாவது: “தமிழகத்தில் கோஷ்டி இல்லாத மாவட்டம், வேலூர் மாவட்டம் தான்’ என, துரைமுருகன் பேசினார். ஒருவேளை அவருடைய மாவட்டமும் அது என்பதால், அப்படிச் சொல்லிக் கொண்டாரோ என, எனக்கு தெரியவில்லை. அப்படியானால், வேலூர் மாவட்டத்தில் தான் கோஷ்டி இல்லை என்றால், மற்ற மாவட்டங்களில் எல்லாம் கோஷ்டி இருப்பதைப் போல சிலர் நினைக்கக் கூடும். எந்தக் கோஷ்டியும் எங்கும் இல்லை. எந்தக் கோஷ்டி இருந்தாலும், அந்தக் கோஷ்டிகளையெல்லாம் அடக்கக் கூடிய வல்லமையும், வாய்மையும் என்னிடமும், தி.மு.க.,வில்…

Read More

பொறியியல் மாணவியின் விசித்திர நோய்:மருத்துவமனையில் அனுமதி

unknown disease for a thiruvarur engineering college student தமிழ்நாட்டில் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ள பொறியியல் மாணவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் நிவேதிதா(21). இவர் அரியலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ சேர்ந்து விடுதியில் தங்கி படித்து வந்தள்ளார். இறுதியாண்டு படித்த போது கடும் வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டார். பல்வேறு மருத்துவர்களிடம் காட்டியும் நோய் குணமாகவில்லை. நோய் என்னவென்றே தெரியாத நிலையில் 50 கிலோ எடையிருந்த நிவேதிதா 25 கிலோவாக மெலிந்து உயிருக்கு போராடி வருகிறார். நிவேதிதாவின் குடும்பம் ஏழ்மையில் வாடுவதால் அவரது பெற்றோர் வட்டிக்கு ரூ,2 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளனர், மேலும் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் மூலமும் சிகிச்சை பெற முடியவில்லை. இந்நிலையில் பொதுமக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு…

Read More

கல்யாண பரிசாய் தமிழக முதல்வர் சொன்ன குட்டி கதை

தமிழக முதல்வர் இப்பொழுதெல்லாம் எந்த ஒரு விழாவிற்கு சென்றாலும் ஒரு கதையை சொல்வது வழக்கமாக கொண்டுள்ளார்.சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா, நம்பிக்கை மற்றும் தாழ்வு மனப்பான்மையை விலக்குவதற்காக இரண்டு கதைகளைக் கூறினார். தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான வைத்திலிங்கத்தின் மகன் பிரபு – பிருந்தா திருமணத்தையும், மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், ஏ.கே. போஸின் மகனுக்கும், மதுரை மேற்கு 1-ஆம் பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பொருளாளருமான கே.பி. சிவசுப்ரமணியத்தின் மகள் சிவரஞ்சனிக்கும் நடைபெற்ற திருமணத்தையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கி நடத்தி வைத்தார். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இத்திருமணத்தில் அவர் கூறிய கதை: புலியாக மாறினாலும் பயம் “சிலர்…

Read More

நம்பிக்கையுடன் வாழ்வதற்கு இரண்டு குட்டி கதைகள்: முதலமைச்சர்..

Motivational stories by tamilnadu chief Minister Jayalalithaa  in the marriage of Housing Minister R Vaithilingam’s son Prabhu and AIADMK’s Madurai North MLA, AK Bose’s son KP Sivasubramanian’s wedding சென்னை, ஆக.31 – அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் மதுரை எம்.எல்.ஏ. பி.கே.போஸ் இல்லத்திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி பேசிய முதல்வர் ஜெயலலிதா பரஸ்பரம் நம்பிக்கையுடன் வாழ்வதற்கு இரண்டு குட்டி கதைகளை கூறினார். அப்போது அவர் கூறியதாவது:- ஒரு ஞானியின் நிஷ்டை கலைந்த போது, ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியைப் பார்த்த ஞானி, உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார். பூனையைக் கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றி விட்டால் உங்களுக்குப் புண்ணியம் உண்டு என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார்.…

Read More

அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்??.

Madras HC has ordered to probe into the sex scandal of Puducherry aurobindo ashram அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாக தொடரப்பட்ட வழக்கில், அதுகுறித்து ஓய்வுபெற்ற கேரள நீதிபதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாக ஆசிரம வாசிகள் துணை ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து ஆசிரமத்திற்கு இதுகுறித்து பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸுக்கு தடை கோரி ஆசிரம நிர்வாகிகளில் ஒருவரான மனோஜ்தாஸ் குப்தா என்பவர் தொடர்ந்த வழக்கிலேயே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சசிதரன், புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுகிறதா, ஆசிரம நிதி தவறாக பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து ஓய்வுபெற்ற கேரள…

Read More

தமிழகம் முழுவதும் சாலை மறியல் ஆசிரியர்கள் கைது

Noon meal workers and teachers staged two different agitations in Tuticorin today தூத்துக்குடியில் கருப்பு உடையணிந்து தூத்துக்குடி-பாளை ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்ட சத்துணவு பணியாளர்கள் 300க்கும் மேற்ப்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின்படி சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம், சட்டரீதியான ஓய்வூதியம் வழங்கிடவேண்டும், உணவுமான்ய செலவினை உயர்த்தி வழங்கவேண்டும், தகுதியுள்ள சமையல் உதவியாளர்களை சமையல் உதவியாளர்களாக பணிஉயர்வு செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் தூத்துக்குடியில் இன்று சாலைமறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர். தூத்துக்குடி அரசு ஊழியர் சங்கத்தில் இருந்து மாநில செயற்குழு உறுப்பினர் ரத்தினாவதி தலைமையில் கருப்பு உடையணிந்து வந்த சத்துணவு பணியாளர்கள் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பேரணியாக புறப்பட்டு வந்தனர். அப்போது அவர்களை…

Read More

உடலுறுப்பு தானம் இந்த ஆண்டு 100-ஐக்கடந்து தமிழகம் சாதனை

This year, cadaver donations cross 100 mark in TN : cadaver transplant programme of Tamil Nadu   தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரை உடல் உறுப்பு தானம் செய்தோரின் எண்ணிக்கை 100-ஐக் கடந்துள்ளது. இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது. கடந்த 2011 அக்டோபர் முதல் 2012ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி வரை தமிழகத்தில் 101 பேர் உடல் உறுப்புகளைத் தானம் செய்திருந்தனர். இதுவும் சாதனையாகும். தமிழகத்தில் உறுப்பு தானத் திட்டம் தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டுதான் தமிழகத்தில் உடல் உறுப்பு தானத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 4 ஆண்டுகளில் 288 பேர் உடல் உறுப்புகளைத் தானம் செய்துள்ளனர். ஆனால்…

Read More

காற்றாலை இறக்கை கிழித்ததில் சிறுமி உள்பட 5 பெண்கள் பலி

A windmill fan which fell on a bus killed 5 women near Karur கரூர் அருகே காற்றாலை இறக்கை ஏற்றி வந்த டிரெய்லர் லாரி மீது நேற்று பஸ் மோதியதில், பஸ்சில் வந்த ஒரு சிறுமி உட்பட 5 பெண்கள் பரிதாபமாக பலியானார்கள். 10 பேர் படுகாயடைந்தனர். திண்டுக்கல் மாவட் டம் பழனியில் இருந்து கரூருக்கு நேற்று ஒரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. கரூரை சேர்ந்த சாமிநாதன் (40) பஸ்சை ஓட்டினார். பஸ்சில் 55 பயணிகள் இருந்தனர். இதேபோல் தூத்துக்குடியில் இருந்து காற்றாலை மின் நிலையம் அமைக்க விசிறி இறக்கையை ஏற்றிக்கொண்டு ஒரு டிரெய்லர் லாரி மகாராஷ்டிரா மாநிலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த கட்டாம்பட்டி பிரிவு ரோட்டில், டிரெய்லர் லாரியை டிரைவர் சாலையோரம் நிறுத்துவதற்காக, இடதுபுறமாக திருப்பினார்.…

Read More