உடலுறுப்பு தானம் இந்த ஆண்டு 100-ஐக்கடந்து தமிழகம் சாதனை

This year, cadaver donations cross 100 mark in TN : cadaver transplant programme of Tamil Nadu

தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரை உடல் உறுப்பு தானம் செய்தோரின் எண்ணிக்கை 100-ஐக் கடந்துள்ளது. இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது. கடந்த 2011 அக்டோபர் முதல் 2012ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி வரை தமிழகத்தில் 101 பேர் உடல் உறுப்புகளைத் தானம் செய்திருந்தனர். இதுவும் சாதனையாகும். தமிழகத்தில் உறுப்பு தானத் திட்டம் தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டுதான் தமிழகத்தில் உடல் உறுப்பு தானத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 4 ஆண்டுகளில் 288 பேர் உடல் உறுப்புகளைத் தானம் செய்துள்ளனர். ஆனால் தற்போது இந்த ஆண்டில் இதுவரை 100 பேர் தானம் செய்திருப்பது பெரும் சந்தோஷத்துக்குரிய செய்தியாகும். இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் அமலோற்பவநாதன் கூறுகையில், இதுவரை 300 பேருக்கும் மேல் உடல் உறுப்பு தானத்தால் புத்துயிர் பெற்றுள்ளனர். இவர்களுக்கு இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், இதய வால்வுகள் பொருத்தப்பட்டு உயிர் பிழைத்துள்ளனர். வேறு எந்த மாநிலத்திலும் தமிழகத்தைப் போல உடல் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை இல்லை. இதில் பாதி கூட இல்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் அதாவது செப்டம்பர் 30ம் தேதி ஐந்தாவது ஆண்டு முடிகிறது, அதற்குள் 110 பேர் உடல் உறுப்பு தானம் செய்து விடுவார்கள் என்று நம்புகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

 English Summary:

This year, cadaver donations cross 100 mark in TN

cadaver transplant programme of Tamil Nadu

ven before the cadaver transplant programme of Tamil Nadu completed its fifth year, the number of donors this year has crossed the 100 mark. From October 1, 2012 till date, there have been 101 donors — a record for the State. The programme was launched in 2008 and there have been 288 donors in the last four years. “The lives of more than 300 critically ill organ failure patients have been saved through major organ transplants such as heart, lung, liver and kidneys apart from corneas and heart valves,” said J. Amalorpavanathan, convenor of the programme. No other State has touched even half this number, he said, adding that it is likely to exceed 110 donors by the end of the fifth year on September 30. “The number of transplants as on Tuesday is 101 with two donors at Christian Medical College, Vellore. For the last six months, there have been more than 12 donors per month on an average,” C.E. Karunakaran, trustee, National Network for Organ Sharing said.

Advertisement: CHENNAI REAL ESTATE
Industrial property for sale in Chennai

Related posts