M Karunanidhi said i have power to control the party men
தி.மு.க.,வில் எந்தக் கோஷ்டியும் இல்லை,” என, திருமண விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.
வேலூர் மாவட்ட தி.மு.க., செயலர் காந்தியின் இல்ல திருமண விழா, கருணாநிதி தலைமையில், சென்னையில் நேற்று நடந்தது. அப்போது அவர் பேசியதாவது: “தமிழகத்தில் கோஷ்டி இல்லாத மாவட்டம், வேலூர் மாவட்டம் தான்’ என, துரைமுருகன் பேசினார். ஒருவேளை அவருடைய மாவட்டமும் அது என்பதால், அப்படிச் சொல்லிக் கொண்டாரோ என, எனக்கு தெரியவில்லை. அப்படியானால், வேலூர் மாவட்டத்தில் தான் கோஷ்டி இல்லை என்றால், மற்ற மாவட்டங்களில் எல்லாம் கோஷ்டி இருப்பதைப் போல சிலர் நினைக்கக் கூடும். எந்தக் கோஷ்டியும் எங்கும் இல்லை. எந்தக் கோஷ்டி இருந்தாலும், அந்தக் கோஷ்டிகளையெல்லாம் அடக்கக் கூடிய வல்லமையும், வாய்மையும் என்னிடமும், தி.மு.க.,வில் உள்ள தலைவர்களிடத்திலும் உண்டு. இவ்வாறு, கருணாநிதி பேசினார்.
M Karunanidhi said i have power to control the party men
The DMK president, M. Karunanidhi said, “i have power to control the party men”
Advertisement: REAL ESTATE
Industrial property for sale in Chennai