ஜூன் வரையிலான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு

GDP growth slows to 4.4 per cent y-o-y in June quarter

GDP growth slows to 4.4 per cent y-o-y in June quarter

மும்பை: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது ஜூன் வரையிலான காலாண்டில் 4.4% ஆக சரிவடைந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் முதன் முறையாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது இத்தகைய சரிவை எதிர்கொண்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு கால புள்ளி விவரங்களின் அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4.4% என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2012-13ஆம் ஆண்டில் இதே காலப் பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 5.4% ஆக இருந்தது.

உற்பத்தித் துறையில் 1.2%, சுரங்கத் துறையில் 2.8% ஏற்பட்ட பின்னடைவுதான் இந்த சரிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதேபோல் வேளாண் துறையில் 2.7% சரிவு ஏற்பட்டிருக்கிறது. நிதித் துறை, காப்பீடு, ரியல் எஸ்டேட் துறைகளும் சரிவின் பாதையில் உள்ளன. கடந்த ஆண்டு 6.2ஆக இருந்த மின்சாரம், எரிவாயு ஆகியவற்றின் வளர்ச்சி 3.7%ஆக குறைந்துவிட்டது. கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி- மார்ச் மாத காலாண்டில் ஏற்பட்ட சரிவுக்குப் பின்னர் முதன் முறையாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி கண்டிருக்கிறது. இதனிடையே உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் வீழ்ச்சி அடைந்தது பற்றி கவலை கொள்ள தேவையில்லை என்று மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.

GDP growth slows to 4.4 per cent y-o-y in June quarter

India’s economic growth slumped to 4.4 per cent during the first quarter ended June 30, the worst in over four years, due to poor performance of the manufacturing and mining sectors. The economy had expanded by 4.8 per cent in the previous quarter and 5.4 per cent in the same quarter in 2012-13. The manufacturing sector contracted 1.2 per cent and mining output dropped 2.8 per cent in the quarter ended June 30. The growth of agriculture sector fell to 2.7 per cent while the services sector registered a healthy 9.4 per cent growth in April-June quarter of the current financial year. According to data released by the Central Statistics Office (CSO), quarterly GDP at factor cost at constant (2004-2005) prices for the first quarter of 2013-14 was estimated at Rs 13.71 lakh crore, against Rs 13.14 lakh crore in the corresponding quarter of the previous year, showing a growth rate of 4.4 per cent year-on-year. “The GDP figures for first quarter clearly show that the economy continues to be in the throes of a slowdown. The concern becomes more acute when we see that at the present moment, there are no clear indications that the economy has bottomed out,” said Chandrajit Banerjee, director general, Confederation of Indian Industry. This is the worst quarterly growth in India’s gross domestic product (GDP) since January-March quarter of 2009, the year of the global financial crisis. “The economy needs the undivided attention of policy makers,” he said.

Related posts