10 வயது சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 3முதியவர்கள் கைது

Tuticorin police arrested 3 elders for sexually harassing 10 year old girls

Tuticorin police arrested 3 elders for sexually harassing 10 years old girls

தூத்துக்குடியில் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக மூன்று முதியவர்களை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் சில முதியவர்கள் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வதாக புகார் எழந்தது. இந்நிலையில், தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த மூன்று முதியவர்கள் இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் அதே பகுதியைச் சேர்ந்த மூக்கையா (65), பால்ராஜ் (66), சர்க்கரை (65) ஆகிய மூவரையும் வெள்ளிக்கிழமை பிடித்தனர். விசாரணையில் மூவரும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையெடுத்து, தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் வழக்கப் பதிந்து குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

Tuticorin police arrested 3 elders for sexually harassing 10 year old girls

Reach us in Facebook

Related posts

Comments are closed.