சென்னை:சட்ட பஞ்சாயத்து இயக்கம் , நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அமர்வு ஊரக உள்ளாட்சிகளுக்கும், நகர்புற உள்ளாட்சிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்த சட்டப்பூர்வமாக எந்த தடையும் இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவை வெளியிட தடை இல்லை – சென்னை உயர்நீதிமன்றம்
