Madras HC has ordered to probe into the sex scandal of Puducherry aurobindo ashram
அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாக தொடரப்பட்ட வழக்கில், அதுகுறித்து ஓய்வுபெற்ற கேரள நீதிபதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாக ஆசிரம வாசிகள் துணை ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து ஆசிரமத்திற்கு இதுகுறித்து பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸுக்கு தடை கோரி ஆசிரம நிர்வாகிகளில் ஒருவரான மனோஜ்தாஸ் குப்தா என்பவர் தொடர்ந்த வழக்கிலேயே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சசிதரன், புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுகிறதா, ஆசிரம நிதி தவறாக பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து ஓய்வுபெற்ற கேரள உயர் நீதிமன்ற நீதிபதி ராமன் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் அரவிந்தர் ஆசிரமத்தில் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுகிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Madras HC has ordered to probe into the sex scandal of Puducherry aurobindo ashram
இதையும் படியுங்கள்
- மாப்பிள்ளை வீட்டில் கழிவறை இருந்தால் தான் திருமணம்.
- நம்பிக்கையுடன் வாழ்வதற்கு இரண்டு குட்டி கதைகள்: முதலமைச்சர்..
- இது கெல்லாமா தண்டனை கொடுப்பாங்க!: கங்குலி
- குடும்ப ஏற்பாட்டுப் பத்திரங்களுக்குக் காகிதமில்லா பத்திரப் பதிவு: 4 வகைப் பத்திரங்கள், தேதி குறித்த தகவல் முரண்
- செவிலியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்: நவம்பர் 3 பேச்சுவார்த்தை, கோரிக்கை நிறைவேறாவிட்டால் மாநிலந்தழுவிய போராட்டம் என எச்சரிக்கை
- இலவச வீட்டுமனைப் பட்டா ஆக்கிரமிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
- சட்ட மாணவர்கள் வருகைப் பதிவு: டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மனுக்களில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைப்பு
← முந்தைய செய்தி: இது கெல்லாமா தண்டனை கொடுப்பாங்க!: கங்குலி
அடுத்த செய்தி →: மாப்பிள்ளை வீட்டில் கழிவறை இருந்தால் தான் திருமணம்.

