மேலதிக உத்தரவுகள் வரை வழக்கறிஞர்கள் கோட்டுகள், கவுன்கள் / அங்கிகள் அணிய வேண்டியதில்லை: இந்திய பார் கவுன்சில்

bar council of india

டெல்லி: “நாட்டின் அனைத்து வழக்கறிஞர்களின் தகவல்களுக்காக (13.05.2020 தேதியிட்ட இந்திய பார் கவுன்சில் தீர்மானம்), மருத்துவ ஆலோசனையையும், இந்திய உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட 13.05.2020 தேதியிட்ட சுற்றறிக்கையையும் கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. (அனைத்து வழக்கறிஞர்களும்) தற்போது ” வெள்ளை சட்டை / வெள்ளை சல்வர்காமீஸ் / வெள்ளை நெக் பேண்டுடன் வெள்ளை சேலை” அணியலாம் என்று இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. இது தவிர, “கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் பெரிதாக இருக்கும்” வரை, “அனைத்து உயர் நீதிமன்றங்கள் மற்றும் பிற அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள், கமிஷன்கள் மற்றும் பிற எல்லாவற்றிற்கும் முன் ஆஜராகும்போது கோட்டுகள் அல்லது கவுன்கள் / அங்கிகள் அணிய வேண்டிய அவசியமில்லை” என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts