அக்காவை கருணை கொலை செய்த தம்பி காவல் துறையில் சரண்

ஈரோட்டில் படுத்த படுக்கையாக இருந்த தனது அக்கா அவதிப்படுவதை பார்க்க சகிக்காத தம்பி அவரின் கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். ஈரோடு காசிபாளையம் அருகே உள்ள கல்யாண சுந்தரம் வீதியில் வசித்தவர் பர்வதம்(75). அவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பர்வதத்துக்கு தமிழ்செல்வன், அமுதன், ராஜு ஆகிய மகன்களும், புஷ்பா என்ற மகளும் உள்ளனர். புஷ்பாவை பர்வதத்தின் தம்பி மூர்த்தி(70) தான் திருமணம் செய்து கொண்டார். பர்வதம் தனது தம்பியின் ஆதரவில் இருந்து வந்தார். முதுமையால் உடல் நலம் பாதிக்கப்பட்ட பர்வதம் படுத்த படுக்கையாகிவிட்டார். அவர் அவதிப்படுவதைப் பார்க்க சகிக்காத மூர்த்தி அக்காவை கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். இதையடுத்து அவரின் உடலை அருகில் உள்ள தனது தோட்டத்தில் புதைத்துவிட்டு தாலுகா போலீசில் மூர்த்தி சரணடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் பர்வதம் வீட்டுக்கு…

Read More

அம்மா உணவகங்களில் செப்டம்பர் 15-ந்தேதி முதல் சப்பாத்தி கிடைக்கும்

Soon, chapatis to be on menu of Amma canteens in Chennai   ஏழை, எளிய மக்களிடத்தில் அமோக வரவேற்பை பெற்றுள்ள அம்மா உணவகத்தில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் 3 ருபாய்க்கு 2 சப்பாத்திகள் வழங்கப்படவுள்ளது. அம்மா உணவகத்தில் காலை 7 மணி முதல் 10 மணி வரை 1 இட்லி 1 ரூபாய்க்கும், மதிய உணவாக நண்பல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்த அம்மா உணவகங்கள் மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, வேலூர், ஈரோடு ஆகிய 9 மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.சென்னை மாநகராட்சியில் உள்ள 200 உணவகங்களிலும்…

Read More

திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் 5 பேர் பலி

Five killed in road accident திண்டுக்கல் மாவட்டம் வத்லகுண்டு அருகேயுள்ள சிங்காரக்கோட்டையில் நேற்று அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை இறக்கிவிட்டுக்கொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து கேரளாவிற்கு சென்ற கார் ஒன்று அந்த பேருந்தின் பின்புறத்தில் வேகமாக மோதியது. இதில் அந்த காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்துபோயினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடனடியாக பிரேதங்களை கைப்பற்றி பரிசோதனைக்காக திண்டுக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், சென்னையில் படித்துவந்த கேரளாவை சேர்ந்த ஜோசப் என்ற மாணவன் ஓணம் பண்டிகை கொண்டாட தனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு கேரளா சென்றபோது இந்த கோர விபத்து நடந்துள்ளது என்று . Five killed in road accident Five members of a family, including a child, were killed this morning…

Read More

தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் ஆசிரியர் தினத்தில் நீக்கம்

Tamil Nadu minister vaigai selvan sudden தமிழக அமைச்சரவையில் இருந்து பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் வைகைச் செல்வன் இன்று திடீரென நீக்கப்பட்டுள்ளார். மேலும் அ.தி.மு.க. இளைஞர் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில், அமைச்சர் பழனியப்பன் பள்ளிக்கல்வித் துறையை கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன் அமைச்சரவை மாற்றத்தின்போது, சேர்க்கப்பட்ட அமைச்சர்களில் முக்கியமானவர் வைகைசெல்வன். இன்று நடைபெற உள்ள, நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில்கூட அவர் கலந்துகொள்வார் என அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் விழா தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, அவர் கட்சிப் பொறுப்பில் இருந்தும் அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. Tamil Nadu minister vaigai selvan sudden In a sudden move, Tamil Nadu Chief Minister Jayalalithaa on Thursday sacked…

Read More

ரஞ்சிதா-நித்தியானந்தா வீடியோ தனியார் Tv மன்னிப்பு கேட்க நீதிபதி உத்தரவு

Private television channel apologize for wrong news: Court Order நடிகை ரஞ்சிதா மற்றும் நித்யானந்தா தொடர்பாக தவறான செய்தி மற்றும் வீடியோவினை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை ரஞ்சிதா, சாமியார் நித்யானந்தா பற்றி ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சி இடம் பெற்றது. இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடிகை ரஞ்சிதா வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தன்னையும், நித்யானந்தாவையும் இணைத்து ஒளிபரப்பான வீடியோ காட்சிகள் போலியாக சித்தரிக்கப்பட்டவை என்று கூறியிருந்தார். மேலும் இது தனிப்பட்ட முறையில் தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். செய்தி மற்றும் வீடியோவை ஒளிபரப்பிய தொலைக்காட்சி செய்தி சேனல் அல்ல, பொழுது போக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி…

Read More

விருதுநகர் காதல் ஜோடி குண்டாறு வனப்பகுதியில் தற்கொலை

A love pair from Viruthunagar committed suicide in Gundaru forest விருதுநகரைச் சேர்ந்த காதல் ஜோடி ஒன்று குண்டாறு வனப்பகுதியில் தற்கொலை செய்து கொண்டது. செங்கோட்டை அருகேயுள்ள குண்டாறு நீர்த்தேக்கம் வனப்பகுதியில் காதல் ஜோடி ஒன்று இறந்துகிடப்பதாக செங்கோட்டை காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தென்காசி ஏ.எஸ்.பி.அரவிந்தன், சப்.இன்ஸ்பெக்டர் பவுன் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விசாரணையில் இறந்து கிடந்தவர்கள் விருதுநகர் பாலன் நகரைச் சேர்ந்த முனியாண்டி என்பவரது மகன் செந்தில்குமார் என்று தெரிய வந்தது. ஆனால் அந்த பெண் எந்த ஊரை சார்ந்தவர் என்று தெரியவில்லை. இறந்து கிடந்த பெண், மதுரை எஸ்.கோட்டைப்பட்டியில் இயங்கிவரும் பராசக்தி ஆசிரியர் பயற்சி பள்ளியில் டி.எட்.படித்துவரும் ராமதேவி என்பது பின்னர் தெரிய வந்தது. இருவரும் காதலித்து வந்ததாகவும், காதலில் பிரச்சினை ஏற்பட்டதால், குளிர்பானத்தில்…

Read More

தமிழக பட்டதாரி மாணவருக்கு பேஸ்புக்கின் 8 லட்சம் பரிசு

Facebook rewards salem engineering graduate Rs. 8 lacs for finding bug பேஸ்புக் உலக அளவில் பிரபலமாக இருக்கும் ஒரு சமூக வலைதளம். இன்றைய இளைஞர்களின் ஆட்டி படைக்கும் ஒரு மந்திரச்சொல் பேஸ்புக். சமீபகாலமாக சில செக்கியூரிட்டி குறைபாடுகள் பேஸ்புக்கில் உள்ளன இந்த குறைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பேஸ்புக் ரொக்கப்பரிசு வழங்கி வருகிறது. சென்னையில் வேலை தேடி வரும் 21 வயது இன்ஞ்னீயரிங் பட்டதாரியான அருள் குமாருக்கு பேஸ்புக்கின் இந்த அறிவிப்பு பற்றிய தகவல் தெரியவந்துள்ளது. அவர் பின்பு  பேஸ்புக் பயணீட்டாளர்கள் யார் வேண்டுமானாலும் மற்றவர்கள் அக்கவுன்டில் இருக்கும் படத்தை அழிக்க முடியும் என்ற குறைபாட்டை கண்டுபிடித்தார். இந்த குறைபாட்டை கண்டுபிடித்ததற்காக பேஸ்புக் நிறுவனம் இவருக்கு 8 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசை வழங்க உள்ளது. அருள் குமார் இதை பற்றி  பேசுகையில், நிறைய ஹாக்கர்கள் இந்தியாவில் இது போன்ற குறைபாடுகளை கண்டுபிடித்து பரிசு…

Read More

தேமுதிக எம்.எல்.ஏ. மீது திருட்டு வழக்கு

Cops look out for DMDK legislator in theft case செங்கல்பட்டு தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. அனகை முருகேசன் மீது திருட்டு வழக்கை பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக செயலாளரும், செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ.வுமாக இருப்பவர் அனகை முருகேசன். அவருக்கும் தேமுதிக குரோம்பேட்டை நகரச் செயலாளர் கே.எம்.ஜெ. அசோக்கிற்கும் இடையே கட்சி விவகாரத்தில் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் ஒருவருக்கொருவர் ஆகாது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சாப்பிடும்போது முருகேசனுக்கும், அசோக்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்ததில் அசோக் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவத்தின்போது அசோக் அணிந்திருந்த 12 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை என்று கூறப்படுகிறது. காயமடைந்த அசோக்…

Read More

தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானத்தில் பற்றிய திடீரென தீ

spice jet flight forced to  land after fire   தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட பயணிகள் விமானத்தில் திடீரென தீப்பிடித்த காரணத்தால் அவசரம் அவசரமாக பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். சென்னை- தூத்துக்குடி இடையே ஸ்பைஸ்ஜெட் தனியார் விமானம் தினமும் இருமுறை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், செவ்வாய்கிழமை காலை தூத்துக்குடி வாகைகுளத்தில் இருந்து பயணிகளுடன் விமானம் புறப்பட்டது. ஓடுதளத்தில் விமானம் ஊர்ந்து கொண்டிருந்த போது திடீரென புகை பரவியது. இதனால் விமானத்துக்குள் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு பயணிகள் அவசரம் அவசரமாக இறக்கிவிடப்பட்டனர். இதனால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சென்னை புறப்பட இருந்த விமானத்தில் திடீரென தீ பற்றியதால் தூத்துக்குடி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் அடிக்கடி கோளாறு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் இதேபோல்…

Read More

தூத்துக்குடியில் மீன் ஏலக்கூடம் தீ விபத்தில் எரிந்து கருகி நாசம்

A fish auction house in Tuticorin was gutted in fire தூத்துக்குடியில் தனியார் மீன் ஏலக்கூடம் தீ விபத்தில் எரிந்து சேதமானது. தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் கென்னடி. இவருக்கு சொந்தமான மீன் ஏலக்கூடம் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் உள்ளது. இந்த ஏலக்கூடத்தில் இன்று காலையில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்புபடை வீரர்கள் நிலையஅதிகாரி மாரியப்பன் தலைமையில் விரைந்து வந்தனர். தீயணைப்புடை வீரர்கள் சுமார் 30நிமிடநேரம் போராடி தீயை தடுத்து அணைத்தனர். இருந்தபோதும், தீ விபத்தில் ஏலக்கூடத்தில் இருந்த 5லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ஏற்றுமதிக்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த மீன்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். A fish…

Read More