Coimbatore Petrol bomb attack at BJP Functionary residence கோவை: போலீஸ் பாதுகாப்பில் உள்ள கோவையின் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியின்னுடைய இல்லத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்ற சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெட்ரோல் குண்டு எறியப்பட்ட இல்லத்தின் உரிமையாளர் திரு.ராமநாதன். இவர் வடவள்ளி பகுதியின் தாயுமானவர் வீதியில் வாழ்ந்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி, கோவை பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடக்க இருப்பதாக எச்சரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு இருந்துள்ளது. அதில் திரு.ராமநாதனுடைய பெயரும் இருந்திருந்ததால், அவரது இல்லத்திற்கும் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினரின் பாதுகாப்பு கொடுக்கபட்டிருந்தது. திரு.ராமநாதனை இல்லத்தின் உள்ளே பாதுகாப்பாக இருக்கச் அறிவுறியத்தியதால் சேதம் எதுவும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. நள்ளிரவு சுமார் 12:20 மணியளவில் நிகழ்த்தப்பட்ட இந்த பெட்ரோல் குண்டு தாக்குதல்…
Read MoreCategory: தமிழக சிறகுகள்
உளறல் மன்னனாக வலம் வரும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்
dmdk founder vijayakanth tutucorin speech தூத்துக்குடியில் தேமுதிகவின் 9வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விஜய்காந்த் உளறி தள்ளியது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிக துவங்கி 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையடுத்து 9வது ஆண்டு விழா கொண்டாட்ட பொதுக் கூட்டம் தூத்துக்குடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய விஜயகாந்த் உளறு, உளறு என்று உளறியுள்ளார். டாடா ஆதரித்த டைட்டானியம் டை ஆக்சைட் பிளாண்ட் குறித்து பேச நினைத்த அவர் டாடா நானோ என்று தெரிவித்துவிட்டார். டாடா நானோ பிளாண்ட் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் வந்திருந்தால் 3,000 பேருக்கு வேலை கிடைத்திருக்கும் என்றார். மேலும் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரிக்கு அஞ்சாநெஞ்சன் என்ற பட்டப்பெயர்…
Read Moreதூத்துக்குடியில் பதுக்கிய தாது மணலை வெளிநாட்டிற்கு கடத்த முயற்சி
tuticorin harbour to be protested by three district fisher men to stop smuggling of soil containing rare minerals from tamilnadu. தூத்துக்குடி: தமிழ்நாட்டில் இருந்து தாதுமணலை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிகையை முன்வைத்து தூத்துக்குடி துறைமுகத்தை முன் அறிவிப்பு ஏதும் இல்லாமல் திடிரென முற்றுகையிட வேண்டும் என மூன்று மாவட்டதை சார்ந்த மீனவர்கள் தீர்மானித்துதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சம்பந்தமாக தூத்துக்குடி மாவட்ட மீனவர் கூட்டமைப்பு மற்றும் தூத்துக்குடி மீனவர் ஐக்கிய முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பாக அதனுடைய நிர்வாகிகள் சுபாஷ் பர்னாண்டோ, சேவியர்வாஸ், ஜாய்காஸ்ட்ரோ, ஸ்டீபன் ஆகியோர் சில தகவல்களை அளித்துள்ளனர். அவர்கள் கூறியது பின்வருமாறு: தமிழக அரசு தாது மணல் மீது விதிக்க பட்டிருந்த போதிலும், சிறப்பு அனுமதியுடன் தூத்துக்குடி துறைமுகத்தின் வழியாக என்னும்…
Read Moreதெருவில் சுற்றி வரும் திருடர்கள் பிடிக்க காவல் துறையினர் அதிரடி
Police searching for Chain snatching thieves in chennai suburb சென்னை சுற்றி உள்ள புறநகர் நகரங்களை சுற்றி வரும் சில்லறை திருடர்களை பிடிக்க காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையின் புறநகர் பகுதியான போரூர் மாங்காடு பூந்தமல்லி தாம்பரம் கூடுவன்சேரி மற்றும் வட சென்னை எண்ணூர் மணலி மாதாவரம் கொரட்டூர் செங்குன்றம் போன்ற பகுதிகளில் சில்லறை திருடர்கள் அதிகரித்து வருகின்றனர் பைக் கில் சுற்றிவரும் இந்த திருடர்கள் சாலையின் ஓரமாய் நடந்து செல்லும் பெண்களின் கழுத்தில் இருக்கும் சங்கிலிகளை அறுத்துக்கொண்டு வேகமாய் பறந்து விடுகின்றனர். இதுமட்டும் இல்லாமல் சாலையின் ஓரமாய் நடந்து செல்லும் பலரின் பைகளை பறிப்பது மொபைல் போனை அடித்து பிடுங்குவது வட மாநிலத்தவர்களை அடித்து பணம் பிடுங்குவது என பல குற்றங்களை இவர்கள் செய்கின்றனர் இவர்களை பிடிக்க சென்னை காவல் துறையினர்…
Read Moreசேதுசமுத்திர வழக்கு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை
Centre brushes aside TN govt’s objection on Sethusamudram சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்த அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய கப்பல் அமைச்சகம் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தது. இத் திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்டுள்ள மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் மத்திய அரசு கோரியுள்ளது. இத் திட்டத்தை எதிர்த்து ஏற்கெனவே தமிழக அரசு, முதல்வர் ஜெயலலிதா, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது மத்திய கப்பல் துறையின் மனுவும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சேது சமுத்திர கால்வாய்த் திட்டம் தொடர்பாக மத்திய கப்பல் அமைச்சக துணைச் செயலர் அனந்த் கிஷோர் சரண் தாக்கல் செய்த மனுவின்…
Read Moreஇன்று அம்மா குடிதண்ணீர் பாட்டில் அறிமுகம் ஒரு லிட்டர் பத்து ரூபாய்!
Jayalalitha to launch scheme to provide mineral water at ten rupees அரசு பேருந்துகள் மற்றும் பேருந்து நிலையங்களிலும், பத்து ரூபாய்க்கு அம்மா குடிதண்ணீர் வழங்கும் திட்டம் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களால் சென்னை கோட்டையில் காணொலி காட்சி மூலமாக இன்று தொடங்கி வைத்தார். இது சம்பந்தமாக தமிழக அரசு வெளியீடு செய்துள்ள செய்தி குறிப்பினில் கூறியிருப்பதாவது:– இந்தியாவிலேயே முதல் முறையாக பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பாதுகாப்பான குடிதண்ணீர் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக தமிழகம் முழுவதும் ‘அம்மா குடிநீர்’ உற்பத்தி நிலையங்கள் பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான 15.9.2013 அன்று திறந்து வைக்கபட்டது. அன்றைய தினமே விற்பனையும் துவங்கப்படும் என முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா 21.6.2013 அன்று அறிவித்தார். இதன் முதல் நிலையாக, திருவள்ளுர் மாவட்டம்,…
Read Moreதஞ்சை பெரியகோவில் 63 வயது யானை வெள்ளையம்மாள் உயிரிழந்தது
tanjore temple elephant dies நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தஞ்சை பெரிய கோயிலுக்கு வெள்ளையம்மாள் என்கிற யானையை இறைதொண்டுக்காக பரிசாக வழங்கியிருந்தார். அந்த யானை இன்று அதிகாலை இறந்து போனது. 63 வயதாகும் இந்த யானை, பல வருடங்களாக இறைத் தொண்டு புரிந்து வந்தது.கடந்த சில மாதங்களாக தீராத மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்ததாகத் தெரிய வருகிறது. இந்த யானைக்கு நேற்று முழுவதும் கடுமையான மூட்டு வலி வந்துள்ளது. முடியாமல் அவதிப்பட்டு வந்த யானைக்கு தஞ்சை கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்த போதிலும், வலியால் துடிதுடித்து அவதிப்பட்ட யானை, மயங்கி விழுந்து இறந்து விட்டதாகத் தெரிய வருகிறது. அப்பகுதி மக்கள் வெள்ளையம்மாள் இறந்த சோக செய்தி கேட்டு, அனைவரும் வந்து யானைக்கு அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். இன்று மாலை தகுந்த மரியாதையுடன்,…
Read Moreமகளின் திருமணத்தன்று இரவு பெற்றோர் மர்ம மரணம்
A day after wedding, bride’s parents found dead in freak accident பொள்ளாச்சி அருகே மகளின் திருமணநாளில் பெற்றோர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆத்துப்பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் இராசு (50). சொந்த நிலத்தில் விவசாயம் செய்துவரும் இவரது மனைவி பெயர் தர்மேஸ்வரி (46). இவர்களது மகள் மோகனசுந்தரிக்கும், பக்கத்து ஊரை சேர்ந்த சபரி என்பவருக்கும் வியாழன்று காலை பொள்ளாச்சியை அடுத்த சமத்தூரில் திருமணம் நடந்தது. சபரி-மோகனசுந்தரியின் திருமணத்திற்கு பிறகு, மணமக்கள் மற்றும் இராசுவும் அவரது குடும்பத்தினரும் ஆத்துப்பொள்ளாச்சிக்கு வந்தனர். புதுமணத்தம்பதியை முதலிரவுக்கு அனுப்பிவிட்டு இராசு, அவரது மனைவி தர்மேஸ்வரி ஆகியோர் வராண்டாவிலும், மோகனசுந்தரியின் தம்பி மணிகண்டன் மற்றும் தர்மேஸ்வரியின் தாயார் சின்னத்தாய் ஆகியோர் மற்றொரு அறையிலும் படுத்திருந்தனர். கடந்த சில நாட்களாக இரவு பகலாக கண் விழித்திருந்து திருமண…
Read Moreகோவையில் நகைக்கடை அதிபர் ரூ.100 கோடி மோசடி
A Jewellery owner was arrested for cheating Rs 100 cr in Coimbatore கோவையில் ரூ.100 கோடி ரூபாய் நகைகளை மோசடி செய்து விட்டு, தலைமறைவாக இருந்த நகைக்கடை அதிபரை, போலீசார் கைது செய்துள்ளனர். கோவை, புரூக்பீல்டு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த சகோதரர்கள் பாலாஜி, 45, மற்றும் அசோக்குமார், 42. இருவரும் கூட்டாக, கோவை வைசியாள் வீதி, பெரிய கடைவீதி, கிராஸ்கட் ரோடுகளில் ஜிஷா, ஸ்வர்ண லட்சுமி என்ற பெயர்களில் நகைக்கடைகளை நடத்தினர். பொதுமக்கள், நகை வியாபாரிகள், வங்கிகள் என, பலரிடமும் நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்துவிட்டு கடந்த மே மாதம் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டனர். தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த வாரம் சகோதரர்களில் ஒருவரான பாலாஜி, சென்னை கோர்ட்டில் சரணடைந்தார். திங்களன்று இரவு அமராவதி நகர் செக்போஸ்ட்டில்,…
Read Moreமணப்பெண் மாப்பிளைக்கு தாலி கட்டி புதியசடங்கு அறிமுகம்
New matrimonial wedding method in tamilnadu முதன் முறையாக தமிழ்நாட்டில் மணப்பெண் மாப்பிள்ளைக்கு தாலியை கட்டி ஒரு புதிய சடங்கை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். இந்த புதுமையான திருமணம் பொதுவுடைமை எழுத்தாளரும் த.மு.எ.ச மா.செ.ச.தமிழ்செல்வன் அவர்களின் தம்பி பாலசுப்ரமணியம், ஜெயா பாலசுப்ரமணியம் மகன் பிரேம் ஆனந்துக்கும், பிரபல புத்தக நிறுவனர் கோவை பெ.தியாக ராஜன், கலைவாணி மகள் சிந்துவுக்கும் , சி.பி.ஐ நல்லகண்ணு தலைமையில் நடைபெற்றது. தமிழ் சினிமாவில் முதன் முதலில் வெளிவந்த திரைப்பாடலை இயற்றியவர் பிரேம் ஆனந்தின் கொள்ளு தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ். இவர் மிக பிரபல எழுத்தாளர், பாடலாசிரியர் சுதந்திர போராட்ட தியாகி. பெரியப்பா எழுத்தாளர் ச.தமிழ்செல்வன். ஒரு சித்தப்பா எழுத்தாளர் கோணங்கி. கடைசி சித்தப்பா சங்கீத அகாடமியில் தேசிய விருது வாங்கிய ச.முருகபூபதி. இவர்களின் பின்னணியில் வந்த பிரேம் ஆனந்த் கொள்கைக்கு ஏற்ப சாதிமறுப்பு காதல் திருமணம்…
Read More