தஞ்சை பெரியகோவில் 63 வயது யானை வெள்ளையம்மாள் உயிரிழந்தது

tanjore temple elephant dies

tanjore temple elephant dies

நடிகர் திலகம்   சிவாஜி கணேசன் தஞ்சை பெரிய கோயிலுக்கு வெள்ளையம்மாள் என்கிற யானையை இறைதொண்டுக்காக பரிசாக வழங்கியிருந்தார். அந்த யானை இன்று அதிகாலை  இறந்து போனது.

63 வயதாகும் இந்த யானை, பல வருடங்களாக இறைத் தொண்டு புரிந்து வந்தது.கடந்த சில மாதங்களாக தீராத மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்ததாகத் தெரிய வருகிறது. இந்த யானைக்கு நேற்று முழுவதும் கடுமையான மூட்டு வலி வந்துள்ளது.

முடியாமல் அவதிப்பட்டு வந்த யானைக்கு தஞ்சை கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்த போதிலும், வலியால் துடிதுடித்து அவதிப்பட்ட யானை, மயங்கி விழுந்து இறந்து விட்டதாகத் தெரிய வருகிறது.

அப்பகுதி மக்கள் வெள்ளையம்மாள்  இறந்த சோக செய்தி கேட்டு, அனைவரும் வந்து யானைக்கு அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். இன்று மாலை தகுந்த மரியாதையுடன், யானையின் உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் தெரிய வருகிறது.

tanjore temple elephant dies

The elephant of Pragadeeswara temple at Tanjur near here died on Saturday morning.

Related posts