College principal hacked to death by students in Tuticorin வல்லநாட்டு அருவான்னா ரொம்ப பேமஸ், இந்த அருவாள் வைத்திருப்பவர் கொடூர கொலை காரன் என்று இதனை ஒட்டிய கிராமங்களில் ஒரு பேரு உண்டு. இந்த கிராமத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி முதல்வரை மாணவர்களே வெட்டிக்கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் 16 கி.மீட்டர் தொலைவில் வல்லநாடு கிராமம் உள்ளது. இங்கு அடிக்கடி கொலை நடப்பது சாதாரண விஷயம். குறிப்பாக இங்கு கொலை செய்வதற்கெனவே சில வடிவில் அருவாள் தயார் செய்யப்படும். வல்லநாட்டில் இருந்து அருவாள் வாங்கி வச்சுருக்கேன் என்று பெருமையாக சில கொடூரர்கள் சொல்வதை கேட்க முடியும். தற்போது இந்த ஊரு அருவாள் இங்குள்ள தனியார் கல்லூரி முதல்வரை காவு வாங்கியிருக்கிறது. வல்லநாட்டில் இஜ்பென்ட் ஜீசஸ்…
Read More வல்லநாட்டில் மாணவர்கள் கல்லூரி முதல்வரை வெட்டி கொலைCategory: தமிழக சிறகுகள்
நடிகர் எஸ்.வி.சேகர் மோடியின் ஆசியுடன் பா.ஜ.க வில் சேர்ந்தார்
Actor SV Sekar joined in BJP after meeting Narendra modi நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.வி.சேகர் நல்ல நேரம் பார்த்து இன்று பாஜக கட்சியில் சேர்ந்துள்ளார். அதிமுகவில் சேர்ந்து மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் எஸ்வி சேகர். பின்பு காங்கிரஸில் இணைந்து விலகினார். இடையில் சில காலம் திமுக அனுதாபியாகவும் இருந்தார். சில மாதங்கள் எந்தக் கட்சியையும் சாராமலும் இயங்கி வந்த எஸ்வி சேகர் சமீபத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைச் சந்தித்து அவரிடம் வாழ்த்தும், வாழ்த்துக் கடிதமும் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து மோடியின் ஆசியுடன் இன்று செவ்வாய் 12.15க்கு பாஜகவில் சேர்ந்தார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான இல கணேசன் உறுப்பினர் அட்டை வழங்கி வாழ்த்தினார். இதுகுறித்து எஸ்வி சேகர் கூறுகையில், நரேந்திர மோடியின் ஆசியுடன்தான் பாஜகவில் சேருகிறேன். கட்சியின் தமிழ் மாநில…
Read More நடிகர் எஸ்.வி.சேகர் மோடியின் ஆசியுடன் பா.ஜ.க வில் சேர்ந்தார்தமிழ்நாட்டில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணிஇட மாற்றம்
6 IAS officers transferred in Tamilnadu தமிழ்நாட்டில் 6 ஆறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் புதன்கிழமை பணி இடம் மாற்றப்பெற்றனர். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திருமதி.ஷீலா பாலகிருஷ்ணன் இதுகுறித்து வெளியிட்ட உத்தரவுவில்: திரு.எஸ்.கோபாலகிருஷ்ணன்: உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் இதற்கு முன்பு வகித்த பதவி: மக்கள் தொகை ஆணைய கணக்கெடுப்பு இயக்குநர் திரு.ஸ்வரண் சிங்: தொழில் துறை ஆணையர் – தொழிற்சாலைகள் மற்றும் வணிகம் இதற்கு முன்பு வகித்த பதவி: உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் திரு.என்.எஸ்.பழனியப்பன்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலர்(பஞ்சாயத்துராஜ்). இதற்கு முன்பு வகித்த பதவி: தொழில் துறை முதன்மைச் செயலர் திரு.சி.வி.சங்கர்: தொழில் துறை முதன்மைச் செயலாளர். இதற்கு முன்பு வகித்த பதவி:ஊரக வளர்ச்சி மற்றும்…
Read More தமிழ்நாட்டில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணிஇட மாற்றம்அசிட் வீச்சில் இறந்த வினோதினியின் தாயார் விஷமருந்தி தற்கொலை
Karaikal Vinothini’s mother Saraswathi committed suicide காரைகாலில் அமில வீச்சில் இறந்த வினோதினியின் தாயார் சரஸ்வதி திடீரென விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ஆம் தேதி இரவு, தீபாவளிப் பண்டிகையை தனது குடும்பத்தினர்களுடன் கொண்டாடிவிட்டு சென்னையில் இருந்து திரும்புவதற்காக பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த காரைக்காலைச் சேர்ந்த வினோதினி மீது சுரேஷ் என்ற வாலிபர் ஆசிட் வீசினார். இந்த அசிட் வீச்சு நடந்ததற்கு மறு நாள் சுரேஷ் கைது செய்யப்பட்டான். அதே தினத்தன்று மேல் சிகிச்சைக்காக வினோதினி சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர் விசாரணைகளுக்கு பின்பு கடந்த ஜனவரி மாதம் 167 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 12-ஆம் தேதி வினோதினி சிகிச்சை பலனின்றி இறந்தார். குற்றவாளிக்கு இவ்வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், நேற்று நள்ளிரவு வினோதினியின்…
Read More அசிட் வீச்சில் இறந்த வினோதினியின் தாயார் விஷமருந்தி தற்கொலைவீட்டில் குண்டு வீசப்பட்டதாக நாடகமாடிய பா.ஜ.க பிரமுகர் கைது
Attempt to boost his image lands BJP leader in jail கோயம்புத்தூர் வடவள்ளியில் தமது வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு நாடகமாடிய பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் ராமநாதனை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை வடவள்ளி சோமையம்பாளையம் தாயுமானவர் வீதியை சேர்ந்தவர் ராமநாதன். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கோவையில் உள்ள இந்து அமைப்பு பிரமுகர்களுக்கு கொலை மிரட்டல் வந்ததை தொடர்ந்து ராமநாதனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் இளங்கோ என்பவர் நியமிக்கப்பட்டு 24 மணிநேர பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 26-ந் தேதி இரவில் ராமநாதன் தங்கி இருக்கும் வீட்டின் மேல் பகுதியில் டமார் என்ற சத்தத்துடன் ஏதோ ஒரு பொருள் வெடித்த சத்தம் கேட்டது. உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸ்காரர் சென்று பார்த்தபோது…
Read More வீட்டில் குண்டு வீசப்பட்டதாக நாடகமாடிய பா.ஜ.க பிரமுகர் கைதுகணவன் மனைவி ஈரோடு தனியார் மருத்துவமனையில் தற்கொலை
A young couple committed suicide in Erode after the husband was suffering from prolonged illness ஈரோடு மாவட்டதில் உள்ள மொடக்குறிச்சி எனும் ஊரைச் சேர்ந்த இளம் தம்பதியர் தற்கொலை செய்துகொண்டனர். இதில் கணவருக்கு வந்த இதயநோயினால் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டனர் என அறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், மொடக்குறிச்சி எனும் பேரூரின் அருகே உள்ள சிற்றூர் எழுமாத்தூர். எழுமாத்தூரைச் சேர்ந்தவர் விவசாயி திரு.விஜயராஜ்.(வயது 27). இவர் இதய நோயால் அவதியுற்று வந்தார். இவரது மனைவியின் பெயர் கெளதமி ( 23 வயது). தம்பதியினர் இருவரும் இதய நோய் சிகிச்சைக்காக பல்வேறு ஊர்களுக்கும் சென்று வந்தனர். பல மருத்துவர்களை கண்டு வந்தும் திரு.விஜயராஜின் இதய கோளாறு தீரவில்லை. இதனையடுத்து ஈரோட்டில் உள்ள வீரப்பன்…
Read More கணவன் மனைவி ஈரோடு தனியார் மருத்துவமனையில் தற்கொலைஎஸ்.வி சேகருக்கு தொலைபேசியில் பெண் குரலில் கொலை மிரட்டல்
Actor cum politician S V Shekar was received life threat from some unknown women திரைப்பட மற்றும் நாடக நடிகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.வி.சேகருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் வந்ததால் அவர் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சேகரின் வீடு, சென்னை பட்டினபாக்கம், கிழக்கு 5-வது தெருவில் உள்ளது. இவருக்கு ஏற்கனவே பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. கற்கள் வீசி தாக்குதல் நடத்தியும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, இவர் பட்டினபாக்கம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், தனக்கு பெண்கள் சிலர் சுமார் 45 முறை போன் செய்து மிரட்டல் விடுத்து பேசினார்கள். தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். வீட்டை முற்றுகையிட்டு கற்கள் வீசி தாக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சட்டபூர்வ…
Read More எஸ்.வி சேகருக்கு தொலைபேசியில் பெண் குரலில் கொலை மிரட்டல்தாய் 2 மகள்களுடன் சமையல் வாயு சிலிண்டரில் தீ வைத்து தற்கொலை
A woman committed suicide with her two kids in Sankarankovil நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் தாலுகாவில் கரிவலம்வந்தநல்லூர் எனும் ஊரில் சொக்கலிங்கபுரம் தெற்கு தெருவில் வாழ்த்து வருபவர் திரு.கோபாலகிருஷ்ணன். இவருடைய மனைவியின் பெயர் திருமதி.பத்மா. இந்த தம்பதியினருக்கு 9 வயது மற்றும் 7 வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். திரு.கோபாலகிருஷ்ணன் கேரளாவில் மாட்டு பால் கறக்கும் வேலை செய்து வருகின்றார். இவர் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை குடும்பத்தை காண ஊருக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த 15 நாட்களுக்கு முன்னர் திரு.கோபாலகிருஷ்ணன் சொந்த ஊருக்கு குடும்பத்தை காண வந்தார். அன்று முதல் கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டை ஏற்பட்டு வந்ததது. நேற்று இரவு மீ்ண்டும் அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டது. இதனால் திரு.கோபாலகிருஷ்ணன் வீட்டில் இருந்து வீட்டை விட்டு வெளியேறினார். இந்த தகராறில் மன வருத்தம்…
Read More தாய் 2 மகள்களுடன் சமையல் வாயு சிலிண்டரில் தீ வைத்து தற்கொலைவண்டி ஒட்டும் போதே நெஞ்சு வலியால் இறந்த லாரி ஒட்டுநர்
a mini lorry driver died while driving the vehicle ஈரோடு மாவட்டம், பெருந்துறை பக்கமுள்ள உத்தண்டி கிராமம், கருக்கம்பாளையத்தை சேர்ந்தவர் மாரப்பன், வயது- 48. அவரது மனைவி கீதா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. மாரப்பன், மினி லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு, சென்னையிலிருந்து, கோயமுத்தூருக்கு, பிளாஸ்டிக் சீட்களை தன்னுடைய மினி லாரியில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார். சனிக்கிழமை இரவு சங்ககிரி அருகே உள்ள விராச்சி பாளையம் அருகே சென்றபோது, மாரப்பனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனால், லாரியை சாலையோரம் நிறுத்தியவர், வண்டியை ஆஃப் செய்ய முடியாமல், பிரேக்கை காலால் அழுத்தி பிடித்த நிலையில் உயிரிழந்தார். இரவு முழுவதும், வண்டி ஓடிக்கொண்டே இருந்தது. அடுத்த நாள் காலை, வண்டி நிற்காமல் ஓடிக்கொண்டிருப்தை பார்த்த அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்து, டிரைவர் மாரப்பனை…
Read More வண்டி ஒட்டும் போதே நெஞ்சு வலியால் இறந்த லாரி ஒட்டுநர்காரைக்கால் கடல் பகுதியில் இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது
6 Sri Lankans arrested for fishing in Indian waters தமிழக கடலோர காவல்படையினர் ‘விஸ்வாந்த்’ கப்பலில் கடந்த 25–ந்தேதி காரைக்கால் கடல் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது இலங்கையை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடித்துக்கொண்டு இருப்பதை கண்டனர். இலங்கை மீனவர்களுடன் அந்த படகை மடக்கிப்பிடித்த கடலோர காவல்படையினர் நேற்று சென்னை துறைமுக போலீசாரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.துறைமுக போலீசார், படகில் இருந்த இலங்கை மீனவர்களான ஆண்டனிபெர்னாண்டோ, பெரேசா, சுனஸ்லக்மல், இன்டிகா லட்சுமணன், மகேஷ் சுரஞ்சன், தினேஷ்குமார் ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது தமிழக கடல்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கைதான 6 பேரையும் எழும்பூரில் உள்ள மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதைதொடர்ந்து 6…
Read More காரைக்கால் கடல் பகுதியில் இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது