நடிகர் எஸ்.வி.சேகர் மோடியின் ஆசியுடன் பா.ஜ.க வில் சேர்ந்தார்

Actor SV Sekar joined in BJP after meeting Narendra modi

நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.வி.சேகர் நல்ல நேரம் பார்த்து இன்று பாஜக கட்சியில் சேர்ந்துள்ளார். அதிமுகவில் சேர்ந்து மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் எஸ்வி சேகர். பின்பு காங்கிரஸில் இணைந்து விலகினார்.

இடையில் சில காலம் திமுக அனுதாபியாகவும் இருந்தார். சில மாதங்கள் எந்தக் கட்சியையும் சாராமலும் இயங்கி வந்த எஸ்வி சேகர் சமீபத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைச் சந்தித்து அவரிடம் வாழ்த்தும், வாழ்த்துக் கடிதமும் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து மோடியின் ஆசியுடன் இன்று  செவ்வாய் 12.15க்கு பாஜகவில் சேர்ந்தார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான இல கணேசன் உறுப்பினர் அட்டை வழங்கி வாழ்த்தினார்.

இதுகுறித்து எஸ்வி சேகர் கூறுகையில், நரேந்திர மோடியின் ஆசியுடன்தான் பாஜகவில் சேருகிறேன். கட்சியின் தமிழ் மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் எனக்கு உறுப்பினர் அட்டை வழங்குகிறார்.

மேலும் எனக்கு எந்த எதிர்ப்பார்ப்புமில்லை. இருக்கும் இடத்துக்கு என்னால் என்றுமே நன்மைதான் உண்டாகுமே தவிர கெட்ட பெயரை உண்டாக்கமாட்டேன் என்றும் இதுவரை நான் இருந்த கட்சிகளில் எனக்கு யார் மீதும் வருத்தமில்லை எனவும் கூறியுள்ளார்.

Actor SV Sekar joined in BJP after meeting Narendra modi

sv_sekar_pjp_002

Ve-Shekher

former admk mla actor sv.sekar joined bjp

Actor SV Sekar joined in BJP after meeting Narendra modi

Related posts