Indian woman receives International Women of Courage Award
துணிச்சல் மிக்க பெண்களுக்கு வழங்கப்படும் சர்வதேச உயரிய விருது இந்த ஆண்டு இந்திய பெண் லட்சுமிக்கு வழங்கப்படுகிறது. ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்ட லட்சுமியின் பெயரை இந்த விருதுக்காக அமெரிக்கா தேர்வு செய்துள்ளது. 2007ல் உருவாக்கப்பட்ட இந்த விருது, மனித உரிமை, பெண்கள் சமஉரிமை, சமுதாய முன்னேற்றம் போன்றவற்றிற்காக துணிச்சலுடன் போராடும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. உலக அளவில் பெண் தலைவர்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் ஒரே சர்வதேச விருது இது மட்டுமே. லட்சுமியுடன் சேர்ந்து ஆப்கானிஸ்தான், பிஜி, ஜியார்ஜியா, சவூதி அரேபியா, கவுதமாலா, உக்ரைன், மாலி, தஜிகிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்களும் இவ்விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளார்கள். இந்த விருதை அமெரிக்க முதல் பெண்மணி மிச்செல் ஒபாமா வழங்க உள்ளார்.
கடந்த 2005-ஆம் ஆண்டு லட்சுமி என்ற பெண் டெல்லியின் பரபரப்பான கான் மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது அவருடைய நண்பரின் சகோதரர் ஒருவர், அவர்மீது ஆசிட் வீசியதில் படுகாயமடைந்தார். அதில் லட்சுமியின் களையான முகம் விகாரமானது. பொதுவாக ஆசிட் தாக்குதலில் பாதிக்கபட்டவர்கள் தங்களது இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடிவதில்லை. அவர்கள் பொது இடங்களுக்கு அல்லது வேலைக்கு செல்லும்போது முகத்தை மறைத்தே செல்கின்றனர். ஆனால் லட்சுமி அப்படி மறைக்கவில்லை. ஆசிட் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர அதற்கு எதிரான இயக்கத்தை முன்னின்று நடத்தினார். இதுதொடர்பாக தேசிய தொலைக்காட்சிகளில் அடிக்கடி தோன்றிய அவர், சட்டவிரோதமாக ஆசிட் விற்கப்படுவதை தடுக்க 27 ஆயிரம் கைழுத்துக்கள் அடங்கிய புகார் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.
ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு, அவர்களுக்கான இழப்பீடு குறித்தும் ஆசிட் தாக்குதலை தடுப்பது பற்றியும் அவரே முன்னின்று இந்தியா முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார். இதையடுத்து ஆசிட் விற்பனையின் ஒழுங்குமுறைகளை உடனடியாக அமல்படுத்தவும், லோக்சபாவில் இதுகுறித்த விவாதத்தை நடத்தவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக லட்சுமிக்கு துணிச்சலுக்கான சர்வதேச விருது வழங்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. சென்ற ஆண்டுக்கான துணிச்சல் விருது, டெல்லியில் ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்ட நிர்பயாவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Indian woman receives International Women of Courage Award
Laxmi, a victim of acid attack and a standard-bearer for the movement to end acid attacks, has been selected by the US for the prestigious International Women of Courage Award. Laxmi received the award from US First Lady Michelle Obama at an awards ceremony at the State Department in Washington. She was 16 when an acquaintance threw acid on her face while she waited at a bus stop in New Delhi’s busy Khan Market in 2005, disfiguring her permanently. Her attacker, a friend’s 32-year old brother, planned to use the acid to destroy Laxmi’s face after she refused to respond to his romantic advances. “Many acid attack victims never return to normal life: they often go to great lengths to hide their disfigurement, many forgo education or employment rather than appear in public, and suicide is not uncommon. But Laxmi did not hide,” the State Department said. “She became the standard-bearer in India for the movement to end acid attacks. She made repeated appearances on national television, gathered 27,000 signatures for a petition to curb acid sales, and took her cause to the Indian Supreme Court,” it said. “Laxmi’s petition led the Supreme Court to order the Indian central and state governments to regulate immediately the sale of acid, and the Parliament to make prosecutions of acid attacks easier to pursue,” the State Department said. “Much is left to be done, and Laxmi continues to advocate on behalf of acid attack victims throughout India for increased compensation, effective prosecution and prevention of acid attacks, and rehabilitation of survivors,” it said. Secretary of State John Kerry, who was earlier scheduled to be present at the awards ceremony, is now travelling to Kiev in the aftermath of the Ukrainian situation. He was represented by Deputy Secretary of State Heather A Higginbottom. Last year, Nirbhaya, a courageous 23-year-old girl whose brutal gang rape on a moving bus in Delhi in December 2012, triggered widespread protests, received the prestigious award. The award was presented to Laxmi along with other awardees from countries across the globe. Established in 2007, the annual Secretary of State’s International Women of Courage Award honours women around the globe who have exemplified exceptional courage and leadership in advocating for human rights, women’s equality, and social progress, often at great personal risk. This is the only Department of State award that pays tribute to emerging women leaders worldwide. Among other awardees are Nasrin Oryakhil (Afghanistan), Roshika Deo (Fiji), Bishop Rusudan Gotsiridze (Georgia), Iris Yassmin Barrios Aguilar (Guatemala), Fatimata Toure (Mali), Maha Al Muneef (Saudi Arabia), Oinikhol Bobonazarova (Tajikistan), Ruslana Lyzhychko (Ukraine) and Beatrice Mtetwa (Zimbabwe).