உலகில் மிக அதிகம் குண்டுவெடிப்பு உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடம்

India among most dangerous places in the world

 India among most dangerous places in the world

குண்டுவெடிப்பு சம்பவங்கள் ஆப்கானிஸ்தானை விட இந்தியாவில் அதிகம் நடக்கிறதாம். குண்டுவெடிப்புகளை பொறுத்த வரையில் உலகின் 3வது அபாயகரமான நாடு இந்தியா தானாம். தேசிய குண்டுவெடிப்பு புள்ளிவிவர மையம் இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் 212 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களை விட அதிகம் ஆகும். ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு 108 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. பாகிஸ்தான், ஈராக்கை அடுத்து இந்தியாவில் தான் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அதிகம் நடக்கின்றது.  உள்நாட்டு பிரச்சனையால் தவிக்கும் வங்கதேசத்தில் 75 குண்டுவெடிப்புகளும், சிரியாவில் 36 குண்டுவெடிப்பு சம்பவங்களும் நடந்துள்ளன. இந்தியாவில் கடந்த 2012ம் ஆண்டு 241 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. அதனுடன் ஒப்பிடுகையில் 2013ம் ஆண்டில் குண்டுவெடிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை 212 ஆக குறைந்துள்ளது. குண்டுவெடிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைந்தபோதிலும் பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 2012ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் குண்டுவெடிப்புகளால் 130 பேர் பலியாகினர், 466 பேர் காயம் அடைந்தனர். 2012ல் 113 பேர் பலியாகினர், 419 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2004ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையிலான காலத்தில் இந்தியாவில் சராசரியாக 298 அதிநவீன குண்டுகள் வெடித்து 1,337 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை ஆப்கானிஸ்தானை விட அதிகம். ஆப்கானிஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளில் 2010ம் ஆண்டில் அதிகபட்சமாக 209 அதிநவீன குண்டுகள் வெடித்துள்ளன. பாகிஸ்தான், ஈராக், இந்தியா ஆகிய நாடுகளில் தான் உலகின் 75 சதவீத குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடக்கிறதாம். உலகின் பிற பகுதிகளில் நடக்கும் குண்டுவெடிப்புகளில் 69 சதவீதம் பொதுமக்களை குறி வைத்து நடக்கிறது. ஆனால் இந்தியாவில் 58 சதவீத குண்டுவெடிப்புகள் பொதுமக்களை குறி வைத்து நடத்தப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலான குண்டுவெடிப்பு சம்பவங்கள் பாதுகாப்பு படையினர் மற்றும் அரசு உடைமைகளை குறி வைத்தே நடத்தப்படுகிறது. 

India among most dangerous places in the world

 You are more likely to die in a bomb blast in India than in Afghanistan. Strange as it may sound, government data show that India is among the most dangerous places in the world as far as bomb blasts per year are concerned – next only to Iraq and Pakistan, with even war-torn Afghanistan and Syria doing better.  Latest data from National Bomb Data Centre (NBDC) show that India suffered 212 bomb blasts in 2013 — more than double of what Afghanistan (with 108 blasts) suffered. Facing internal strife, Bangladesh with 75 blasts and Syria with 36 blasts have done better.  While the number of blasts in India decreased from 241 in 2012 to 212 in 2013, casualties went up with 130 deaths and 466 injuries last year as compared to 113 deaths and 419 injuries in 2012.  Analyzing the frequency of IED blasts in the country over the past decade, the document says between 2004 and 2013 “there have been an average of 298 blasts and 1,337 casualties in India”. This is again higher than Afghanistan which in the past five years witnessed a maximum of 209 such attacks in 2010, according to the data.  In fact, along with Pakistan and Iraq, India accounts for almost 75% of bomb blasts in the world. However, India has done slightly better than the rest of the world in terms of the share of attacks targeted at common public. While in the rest of the world, 69% of attacks are directed towards public, India registered 58% in this category with the rest being targeted at the security forces and government property.

Related posts