அமெரிக்கவில் வசித்து வந்த இந்திய பெண்ணை காரால் மோதி 5 கி.மீ. இழுத்து சென்று கொலை

Indian-American woman dragged for 5 KMs, dies

Indian-American woman dragged for 5 KMs, dies

அமெரிக்காவில் வசித்து வந்த இந்திய பெண்ணும் அவரது கணவரும் ஒரு அமெரிக்க வாலிபரால் தாக்கப்பட்டனர். இதில், அந்த வாலிபரின் காரில் சிக்கிகொண்ட இந்திய பெண் சுமார் 5 கி.மீ. இழுத்து செல்லப்பட்டதால், பரிதாபமாக பலியானார்.   காஞ்சன்பென் பட்டேல் என்னும் 58 வயது பெண்ணை அமெரிக்காவை சேர்ந்த மோசஸ் அக்லோக் என்னும் 22 வயது இளைஞர் அவரது காரில் இடித்து, தனது வாகனத்தில் சுமார் 5 கி.மீ. இழுத்துச் சென்றதில் அப்பெண் பலியானார்.  அமெரிக்காவின் மாசசுசெட்ஸில் உள்ள ஒரு மோட்டலுக்கு மோசஸ் அவரது நண்பரோடு வந்து தங்கியுள்ளார். அங்கு அண்மையில் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியரான காஞ்சன்பென் பட்டேலும் அவரது கணவரும் வேலை பார்த்து வந்தனர்.   இந்நிலையில் மோசஸ் தங்கியிருந்த அறைக்கு வாடகை கொடுக்காதது தொடர்பாக அவர்களுக்கும் மோசஸிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது.  இதையடுத்து அங்கிருந்து காரில் கிளம்பிய மோசஸ் காஞ்சன்பென் மற்றும் அவரது கணவரை வாகனத்தால் இடித்தார். மேலும் காஞ்சன்பென்னை தனது வாகனத்தில் சுமார் 5 கி.மீ. வரை தர தரவென இழுத்துச் சென்றார். இதில் காஞ்சன்பென் பலியானார். பின்னர் காஞ்சன்பென்னின் உடல் வண்டியின் கீழ் கண்டுப்பிடிக்கப்பட்டது.  இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மோசஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Indian-American woman dragged for 5 KMs, dies

Indian-American woman dragged for 5 KMs, dies

In a tragic incident, a 58-year-old Indian-American woman was killed when a youth struck her with a pickup vehicle and dragged her for nearly five kilometres after an altercation at a motel, police said.  Kanchanben Patel and her husband, who worked at the motel, were hit by the youth who had an altercation with them about illegal use of a room.  Moses Acloque, 22, hit Kanchanben with his pickup truck and dragged her for three miles, killing her, police said. Acloque was arrested in Foxborough late Monday night just after a state trooper reported seeing the body of Kanchanben under his Ford F150 vehicle.  Employees at Arbor Inn Motel told police that Acloque and another man had sped away from their property after refusing to pay their bill when he hit the couple, who recently celebrated becoming US citizens.  After smashing one car, a american journal reports, he struck Kanchanben and her husband. Acloque was arraigned Wednesday morning in Wrentham District Court on multiple charges, including leaving the scene of an accident causing death, prosecutors said.

Related posts