எஸ்.வி சேகருக்கு தொலைபேசியில் பெண் குரலில் கொலை மிரட்டல்

Actor cum politician S V Shekar was received life threat from some unknown women

Actor cum politician S V Shekar was received life threat from some unknown women

திரைப்பட மற்றும் நாடக நடிகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.வி.சேகருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் வந்ததால் அவர் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சேகரின் வீடு, சென்னை பட்டினபாக்கம், கிழக்கு 5-வது தெருவில் உள்ளது. இவருக்கு ஏற்கனவே பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. கற்கள் வீசி தாக்குதல் நடத்தியும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, இவர் பட்டினபாக்கம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், தனக்கு பெண்கள் சிலர் சுமார் 45 முறை போன் செய்து மிரட்டல் விடுத்து பேசினார்கள். தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். வீட்டை முற்றுகையிட்டு கற்கள் வீசி தாக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பதோடு, உரிய போலீஸ் பாதுகாப்பும், எனது வீட்டுக்கு வழங்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார். இந்து மகாசபா தலைவர், கோடம்பாக்கம் ஸ்ரீ என்பவர்தான் முதலில், போனில் பேசி திட்டினார். அவரைத் தொடர்ந்துதான், பெண்கள் பலர் போனில் பேசி, மிரட்டினார்கள், என்று எஸ்.வி.சேகர், நிருபர்களிடம் தெரிவித்தார். இது தொடர்பாக துணை கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில், பட்டினபாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேற்று எஸ்.வி.சேகர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. போலீஸ் ரோந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Actor cum politician S V Shekar received life threat by unknown women

Related posts