அக்டோபர் 5 முதல் பெட்ரோல் நிலையங்களில் சமையல் கேஸ்

You can buy mini gas cylinders at petrol pumps from 5th October

You can buy mini gas cylinders at petrol pumps from 5 Oct

நாட்டின் பெரு நகரங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்களில் 5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு (எல்.பி.ஜி.) சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள், “நிறுவனத்துக்குச் சொந்தமான – நிறுவனத்தால் நடத்தப்படும்’ (சி.ஓ.சி.ஓ.) பெட்ரோல் நிலையங்களில் கிடைக்கும். இது நாட்டில் மொத்தமுள்ள 47,000 பெட்ரோல் நிலையங்களில் 3 சதவிகிதம் மட்டுமே. இது சந்தை விலைக்கு விற்கப்படும். தற்போது மானிய விலையாக 14.2 கிலோ எடை சிலிண்டர் ரூ.410-க்கு விநியோகிக்கப்படுகிறது. சந்தை விலையானது அதைவிட இரு மடங்குக்கு மேல் அதிகமாகும்.

5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனையை அக். 5 ஆம் தேதி பெங்களூரில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் எம்.வீரப்ப மொய்லி துவக்கி வைக்கிறார். தில்லி, மும்பை, கோல்கத்தா, சென்னை, பெங்களூரு ஆகிய பெரு நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட (சி.ஓ.சி.ஓ.) பெட்ரோல் நிலையங்களில் மட்டுமே இவை விற்பனை செய்யப்படும்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை நாடு முழுவதும் மொத்தம் 1,440 சி.ஓ.சி.ஓ. பெட்ரோல் நிலையங்களைக் கொண்டுள்ளன. மேலும், தற்போது 5 பெருநகரங்களில் மட்டுமே 5 கிலோ எல்.பி.ஜி. விற்பனை அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், இதற்கான விற்பனை நிலையங்கள் சில டஜன்கள் மட்டுமே இருக்கும்.

மேலும், வாடிக்கையாளருக்கு உதவும் வகையில், விநியோகஸ்தரை மாற்றிக் கொள்ளும் வசதியையும் பெட்ரோலிய அமைச்சகம் அறிமுகப்படுத்தவுள்ளது.

இதுவரை அத்தகைய வசதி இல்லை. இந் நிலையில், வாடிக்கையாளர் தற்போதுள்ள விநியோகஸ்தரின் சேவை திருப்தியில்லை எனில், அப் பகுதியில் உள்ள மற்றொரு விநியோகஸ்தர் நிறுவனத்துக்கு (எந்த எண்ணெய் நிறுவனமாக இருந்தாலும் சரி) தங்களது கணக்கை மாற்றிக் கொள்ளலாம். இந்தப் புதிய திட்டமானது முதலில் 30 நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும்

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.விநியோகஸ்தரை மாற்றிக் கொள்ளும் வசதியானது தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You can buy mini gas cylinders at petrol pumps from 5 Oct

You can buy mini gas cylinders at petrol pumps from 5 Oct

Cooking gas cylinders will soon be sold at market rates at selected petrol pumps across the country.Petroleum Minister Veerappa Moily will formally launch sales and an LPG portability scheme at a function in Bangalore on Saturay, an official statement said Wednesday. Initially, 5 kg cylinders of liquified petroleum gas (LPG) will be sold at the petrol stations of the government-run oil marketing firms. “The first initiative allows sale of 5 kg LPG cylinders at market price with minimal paperwork through company owned retail outlets,” oil ministry said in a statement. “This will be a boon to migratory population such as students, IT professionals, BPO employees and persons with odd duty timings as it would provide them the flexibility to pick up cylinders and obtain subsequent refills at time of their choice as Petrol Stations are open for longer hours,” it said. The scheme will be launched in Delhi, Kolkata, Chennai, Mumbai and Bangalore on a pilot basis through select retail outlets. The government also plan to introduce LPG Portability Scheme, under which a consumer can opt for the distributor of his choice within a cluster of LPG distributors in the vicinity and across the oil companies. “The consumers will be able to see the service ratings of all the distributors in their cluster and choose the one they want based on service levels,” the oil ministry statement said.

Related posts