தேனி அருகே 29 ஆண்டுகளுக்கு முன் கட்டிய மகாத்மா காந்தி கோவில்

where the mahatma is no less than god

where the mahatma is no less than god

கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டிஎனும் கிராமத்தில், மகாத்மா காந்திக்கு கோயில் ஒன்றை கட்டி அதற்கு வழிபாடும் நடத்த படுகிறது.தேனி மாவட்டம் கம்பம் அருகே அமைந்துள்ள காமயகவுண்டன்பட்டி எனும் கிராமத்தில் பல பேர் சுதந்திர போராட்டம் செய்து வந்தார்கள்.ஆகையால், தேசபக்தியும், காந்தியின் மேல் கொண்ட அளவுகடந்த அணிபின் வெளிப்பாடாக காமயகவுண்டன்பட்டி கிராம மக்கள், அந்த தேசத்தந்தைக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்து வருகிறார்கள்.
சுதந்திர போராட்டத்தில் இந்த கிராமத்தை சேர்ந்த பரமசிவம், சக்திவடிவேல், பாண்டியராஜ், கிருஷ்ணசாமி, பழனிவேல், ஈசப்பர், சாமாண்டி, ராமசாமி, குந்திலிராமசாமி, கிருஷ்ணசாமி, வீராச்சாமி, சுருளியாண்டி, சுப்பிரமணி, சுப்புசாமி உள்பட 80 க்கும் மேற்பட்டோர் தீவிரமாக பங்கேற்றனர். இந்த கிராமத்திற்கு பெருமை சேர்த்தனர்.

இதனை தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவாகவும், காந்திக்கு உருவசிலை வடிக்கவும், கோவில் கட்டவும் கடந்த1985 ஜூலை மாததில் முன்னாள் எம்.எல்.ஏ., பாண்டிராஜின் தலைமையில் குழு ஒன்று அமைக்கப் பெற்று, எல்லா சமுதாய மக்களிடமும் நிதி மற்றும் நன்கொடைகள் பெற்று, ஆறே மாதங்களில் கட்டி நிறைவு செய்யப்பட்டது. இங்கே மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலையும் ஒன்றும் உள்ளது. கடந்த 1985 டிசம்பர் மாதம் .,29 தேதியன்று அன்றைய துணை ஜனாதிபதி வெங்கட்ராமன் அவர்களால், மகாத்மா காந்தியின் சிலை திறந்து வைக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை, ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்திஜெயந்தி, மற்றும் நினைவு நாட்களில் இந்த கிராம மக்கள் விழா ஏற்பாடு செய்து, வழிபட்டு வருகிறார்கள். இந்த ஊரை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படங்களும் இந்த கோயிலில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

where the mahatma is no less than god

where the mahatma is no less than god

Located at Kamaya Goundan patti near Khammam, the Gandhi Temple attracts people who believe that Mahatma Gandhi and his principles are meaningful even decades after his death

Related posts