2 வயது சீனகுழந்தையின் வயிற்றில் வளர்ச்சி பெறாத கரு கண்டுபிடிப்பு

‘Pregnant’ Boy, 2, ‘Gives Birth’ To His Parasitic Twin 

 ‘Pregnant’ Boy, 2, ‘Gives Birth’ To His Parasitic Twin

சீனாவில் 2 வயது குழந்தையின் வயிற்றில் வளர்ச்சி பெறாத கரு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு பிறகு ஆராய்ந்த போது அந்த குழந்தையின் தாய் கருவுற்ற போது இரட்டை குழந்தைக்கான கருவுறுதல் நடந்துள்ளது எனவும் ஆனால், ஒரு கரு முட்டை இவனது வயிற்றுனுள் வளர்ச்சி பெறாமல் நின்றுள்ளது அறியப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள குவாங்சி எனும் மாகாணத்தை சேர்ந்த தம்பதியினது  2 வயது மகன்  ஷியாவ் பெங். இவன் பிறக்கும் போது மற்ற குழந்தைகளை போல் சாதரணமாகவே பிறந்தான். அவனுக்கு படிப்படியாக உடல் வளர்ச்சி ஏற்பட்டது. ஆனால், 2 வயதை நெருங்கும் போது அவனது வயிறு மட்டும் மிகவும் பெருத்து காணப்பட்டது. மூச்சு திணறலால் குழந்தை கஷ்டப்பட்டது. வழக்கமாக குழந்தைகளுக்கு வரும் ‘பிரைமரி காம்ப்ளக்ஸ்’ நோய்தான் என்று பெற்றோர் கருதினர். ஒரு நாள் மூச்சு திணறல் அதிகரிக்கவே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவனை சோதனை செய்த டாக்டர்கள், ஷியாவ் பெங் வேறு வகையாக அவதிப்படுவது தெரிந்தது. உடனடியாக அவனை முழுமையாக ஸ்கேன் செய்து பார்த்த போது அவனது வயிற்றில் வளர்ச்சி அடையாத கரு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த கரு பின்னர் வயிற்றுக்குள் கட்டி போல வளரத் தொடங்கியிருந்தது. உடனடியாக சிசேரியன் மூலம் அதை அகற்ற முடிவு செய்தனர். இது குறித்து டாக்டர் ஜோனாத்தன் பனராப் கூறுகையில், “குழந்தையின் தாய் கருவுறும் போது இரட்டை குழந்தைக்கான கருவுறுதல் நடந்துள்ளது. ஆனால், தவறுதலாக ஒரு கரு முட்டை இவனது வயிற்றுக்குள் சென்று வளர்ச்சி அடையாமல் ஒரு கட்டத்தில் நின்றுள்ளது. இது மருத்துவ உலகில் மிக அரிதிலும் அரிதாக நடக்க கூடிய செயல்” என்று தெரிவித்தார்.

‘Pregnant’ Boy, 2, ‘Gives Birth’ To His Parasitic Twin

A 2-year-old boy in Huaxi, China was diagnosed as ‘pregnant’ when doctors discovered that his unborn twin had started growing in his stomach. In this rare version of conjoined twins, the boy’s unborn brother developed inside of him.

Related posts