கணவன் மனைவி ஈரோடு தனியார் மருத்துவமனையில் தற்கொலை

A young couple committed suicide in Erode after the husband was suffering from prolonged illness

A young couple committed suicide in Erode after the husband was suffering from prolonged illness

ஈரோடு மாவட்டதில் உள்ள மொடக்குறிச்சி எனும் ஊரைச் சேர்ந்த இளம் தம்பதியர் தற்கொலை செய்துகொண்டனர். இதில் கணவருக்கு வந்த இதயநோயினால் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டனர் என அறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  ஈரோடு மாவட்டத்தில், மொடக்குறிச்சி எனும் பேரூரின் அருகே உள்ள சிற்றூர் எழுமாத்தூர். எழுமாத்தூரைச் சேர்ந்தவர் விவசாயி திரு.விஜயராஜ்.(வயது 27). இவர் இதய நோயால் அவதியுற்று வந்தார். இவரது மனைவியின் பெயர் கெளதமி ( 23 வயது). தம்பதியினர் இருவரும்  இதய நோய் சிகிச்சைக்காக பல்வேறு ஊர்களுக்கும் சென்று வந்தனர். பல மருத்துவர்களை கண்டு வந்தும் திரு.விஜயராஜின் இதய கோளாறு தீரவில்லை. இதனையடுத்து ஈரோட்டில் உள்ள வீரப்பன் சத்திரத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 6 மாத காலமாக தொடர்ந்து  சிகிச்சை பெற்று கொண்டு வந்தார் திரு.விஜயராஜ். அந்த சிகிச்சையில் சற்று சுமாரான முன்னேற்றம் தெரிந்துள்ளது. இதனையடுத்து மீண்டும் வீடு திரும்பிய திரு.விஜயராஜ் மீண்டும் சுகவீனம் அடைந்திருக்கிறார். இதனையடுத்து மருத்துவமனையில் மீண்டும் அவரை அனுமதி செய்தார்கள். அவருடன் அவரது மனைவி திருமதி.கெளதமி, மற்றும் அவரது தாயார் திருமதி.தேவகி தங்கி இருந்தனர். கடந்த புதன்கிழமையன்று திருமதி.தேவகி அந்த அறைக்கு வெளியில் அமர்ந்திருந்தார். அறையினுள் திரு.விஜயராஜும், அவரது மனைவி திருமதி.கெளதமியும் இருந்துள்ளனர். பின்னர், சற்று நேரம் கழித்து  கதவைப் உள்ளே பூட்டி கொண்டனர். அதன் பின்னர் அந்த கதவு திறக்கவேயில்லை. அதனால் சந்தேகம் கொண்ட திருமதி.தேவகி, அங்கே இருந்த செவிலியர்களிடம் (நர்ஸ்) இதை கூறியுள்ளார். அவர்களும்  அங்கு வந்து கதவைத் தட்டி திறக்க முற்பட்டனர். அதன் பின் அந்த அறையின் பின்பக்கம் சென்று உள் கதவைத் திறந்து உள்ளே போய் கண்ட போது திரு.விஜயராஜும், திருமதி.கெளதமியும் வாயில் நுரை தள்ளியபடி கிடந்தனர். பாதி மயக்கத்தி்ல கிடந்த அவர்களை மருத்துவர்கள் விரைந்து வந்து அவர்களுக்கு அவசர சிகிச்சை அளித்தனர். எனினும் அது எதுவும் பலன் தரவில்லை. தம்பதியர் இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரை இழந்தனர். ஆப்பிள் பழத்தில் கொடிய விஷம் கொண்ட பூச்சிக் கொல்லி மருந்தினை கலந்து தம்பதியர் இருவரும் சாப்பிட்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.

A young couple committed suicide in Erode after the husband was suffering from prolonged illness

Young couple committed suicide in hosital at Erode Town. This happened in hospital premises after the husband was suffering from prolonged illness in spite of many years treatment for cardio

Related posts