சீன நாட்டை இந்தியா விரைவில் பின்னுக்குத்தள்ளும்

India will beat china in population growth in the year 2050

India will beat china in population growth in the year 2050

சீன நாட்டை இந்தியா மக்கள் தொகை பெறுக்கத்தில் பின்னுக்குத் தள்ளி முன்னேறும் என பிரான்ஸ் நாட்டின் ஆய்வு அறிக்கை தெரிவித்திருக்கிறது. 2050-ம் ஆண்டுக்குள் சுமார் 160 கோடி மக்கள் தொகையுடன் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேறி முதலிடத்தை பிடிக்கும் எனவும் அதே சமயம் 130 கோடி மக்கள் தொகையுடன் சீனா 2-ம் இடத்திற்கு தள்ளப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் அப்போது உலகத்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 970 கோடியாக இருக்கும் எனவும் கூறுகிறது.

கடந்த 200 ஆண்டு காலத்தில் உலக மக்கள் தொகை எழு மடங்கு உயர்ந்து தற்சமயம் 710 கோடியாக இருக்கிறது. தற்சமயம், உலகத்தின் மொத்த மக்கள் தொகையில் 3-ல் ஒருவர் சீனா மற்றும் இந்தியாவில் பிறந்தவர்கள். இதில் 130 கோடி மக்கள் சீனாவிலும், 120 கோடி மக்கள் இந்தியாவிலும் இருக்கிறார்கள் என அந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

India will beat china in population growth in the year 2050

Related posts