College principal hacked to death by students in Tuticorin
வல்லநாட்டு அருவான்னா ரொம்ப பேமஸ், இந்த அருவாள் வைத்திருப்பவர் கொடூர கொலை காரன் என்று இதனை ஒட்டிய கிராமங்களில் ஒரு பேரு உண்டு. இந்த கிராமத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி முதல்வரை மாணவர்களே வெட்டிக்கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.
திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் 16 கி.மீட்டர் தொலைவில் வல்லநாடு கிராமம் உள்ளது. இங்கு அடிக்கடி கொலை நடப்பது சாதாரண விஷயம். குறிப்பாக இங்கு கொலை செய்வதற்கெனவே சில வடிவில் அருவாள் தயார் செய்யப்படும். வல்லநாட்டில் இருந்து அருவாள் வாங்கி வச்சுருக்கேன் என்று பெருமையாக சில கொடூரர்கள் சொல்வதை கேட்க முடியும். தற்போது இந்த ஊரு அருவாள் இங்குள்ள தனியார் கல்லூரி முதல்வரை காவு வாங்கியிருக்கிறது.
வல்லநாட்டில் இஜ்பென்ட் ஜீசஸ் என்ற பொறியியல் கல்லூரிஉள்ளது.. இங்கு சுமார் 2 ஆயிரம் பேர் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை கல்லூரிக்கு9 மணியளவில் முதல்வர் சுரேஷ் காரில் வந்து இறங்கினார். இந்நேரத்தில் தயாராக இருந்த 3 பேர் கொண்ட மாணவ கும்பல் கையில் இருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதனால் கல்லூரியில் இருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்து ஓடினர். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த முதல்வர் சுரேஷ் உயிருக்கு போராடியி நிலையில் பாளை., ஐகிரவுண்ட் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். செல்லும் வழியில் இவரது உயிர் பிரிந்தது.
இந்த கொலையில் இங்கு படிக்கும் 3 மாணவர்கள் ஈடுபட்டுள்ளதாக முதல்கட்ட தவகல் தெரிவிக்கிறது. இந்த மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தினரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு முதல்வரே காரணம் என்று இவர் மீது மாணவர்கள் ஆத்திரமுற்றனர். இதனையடுத்து இவரை கொலை செய்ய மாணவர்கள் திட்டமிட்டதாக தெரிகிறது. 3 பேரும் முறப்பநாடு போலீசில் சரண் அடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால் போலீசார் இதனை உறுதி செய்யவில்லை.
கொலையாளிகள் யார் ? இந்த கல்லூரியில் வெளியூர் மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர். இதில் நெல்லையில் தங்கி பல மாணவர்கள் பஸ்சில் வருவது வழக்கம். இப்படி வரும்போது இரு தரப்பினர் மாணவர்கள் மோதல் ஏற்பட்டது. இதன்காரணமாக முதல்வர், மாணவர்கள் 3 பேரை சஸ்பெண்ட் செய்தார். இந்த பெயர் விவரம் வருமாறு: டேனீஸ் ( வயது 23 ) சிவகங்கை மாவட்டம், பிச்சைக்கண்ணு ( 23 ) , நாசரேத், பிரபாகர் (23), கீழ் வேலூர் , நாகப்பட்டினம். இந்த 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆத்திரத்தினால் முல்வர் சுரேஷை கொலை செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.