Central bank of India Branch manager arrested by CBI for insisting Bribe for Educational Loan ஆண்டிப்பட்டியில் கல்விக்கடன் தர லஞ்சம் பெற்ற வாங்கிய சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவின் வங்கி கிளை மேலாளர் கைது செய்யப்பட்டார். ஆண்டிப்பட்டி அருகில் இருக்கும் அம்மச்சியாபுரம் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா கிளையின் வங்கியின் மேலாளர் முத்துக்குமார் கைது செய்யப்பட்டிடுக்கிறார். தனது மகளுடைய பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்காக கடன் தருவதற்கு லஞ்சம் தர வற்புறுத்தியதாக பாலுச்சாமி என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். பாலுச்சாமி புகாரின் பேரில் சென்னை சி.பி.ஐ லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். நீதிபதியின் இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் அவரை சி.பி.ஐ லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மதுரை சிறையில் அடைத்தனர். Central bank of India Branch manager arrested by CBI…
Read More கல்விக்கடனுக்கு லஞ்சம் பெற்ற சென்ட்ரல் பாங்க் கிளை மேலாளர் கைதுCategory: தமிழக சிறகுகள்
தமிழ்நாட்டில் 6 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி பணி இடமாற்றம்
district collectors and other IAS officers shuffled again in tamilnadu தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, மதுரை உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளர்கள். இது சம்பந்தமாக தமிழக அரசு வெள்யீடு செய்துள்ள செய்திக்குறிப்பினில் அறிவித்துள்ளதாவது:- மதுரை மாநகராட்சி கமிஷனராக இருக்கும் நந்தகோபால் தற்போது வேலூர் மாவட்ட ஆட்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கோவை மாவட்ட ஆட்சியாளராக உள்ள எம். கருணாகரன் மாற்றப்பட்டு நெல்லை கலெக்டர் சி.சமயமூர்த்திக்கு பதில் அந்த மாவட்ட ஆட்சியாளராக நியமிக்கபட்டிருக்கிறார். நீலகிரி மாவட்ட ஆட்சியாளராக உள்ள அர்ச்சனா பட்நாயக், கோவை ஆட்சியாளராக நியமிக்கபட்டிருக்கிறார். கோவை ஆட்சியாளராக இருந்த கருணாகரனுக்கு பதிலாக இவர் நியமிக்கபட்டிருக்கிறார். வேலூர் மாவட்ட ஆட்சியாளராக மதுரை மாநகராட்சி கமிஷனராக இருந்த நந்தகோபால் நியமிக்கபட்டிருக்கிறார். வேலூர் மாவட்ட ஆட்சியாளராக இருந்த டாக்டர். ஆர்.சங்கர் நீலகிரி மாவட்ட ஆட்சியாளராக நியமிக்கபட்டிருக்கிறார். தஞ்சை…
Read More தமிழ்நாட்டில் 6 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி பணி இடமாற்றம்நாகர்கோவிலில் 10 மாதங்களாக வீட்டில் சடலத்துடன் வாழ்ந்த குடும்பம்
Relatives live with woman’s body in house for 10 months நாகர்கோவிலில் இறந்து போன தங்களது குடும்பத்து பெண்ணினுடைய உடலை வீட்டுக்குள் வைத்து பாதுகாத்து அவரது குடும்பமே 10 மாதங்கள் வாழ்ந்து கொண்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் வாழ்ந்து வருபவர் மறைந்த சுப்பிரமணிய பிள்ளையின் மனைவி சரோஜினி(89). இவருக்கு உமாதேவி என்ற மகளும், பெருமாள் பிள்ளை, செல்வம் பிள்ளை என்ற மகன்களும் உண்டு. மகள் உமாதேவியின் கணவர் பெயர் தாணுப்பிள்ளை. இந்த தம்பதிக்கு சிவபிரசாத் (வயது 25) என்ற மகன் இருக்கிறார். குடும்ப தகராறில் உமாதேவி தனது கணவர் தாணுப்பிள்ளையை பிரிந்து, மகன் சிவபிரசாத்துடன் நாகர்கோவிலில் இருக்கும் ராமவர்மபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குடியேறிவிட்டார். இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் அவரது சகோதரர் பெருமாளும் இறந்து…
Read More நாகர்கோவிலில் 10 மாதங்களாக வீட்டில் சடலத்துடன் வாழ்ந்த குடும்பம்சிவகங்கையில் உள்ள அடகு கடையில் 200 பவுன் நகை திருட்டு
200 sovereign jewels were looted from a pawn shop near Sivagangai சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுபட்டி எனும் ஊரில் உள்ள முக்கிய சாலையில் இருக்கும் நகை அடகுகடையின் பூட்டுகளை சிதைத்து 200 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை – திருப்பத்தூர் முக்கிய சாலையில் மதகுபட்டி கிராமம் இருக்கிறது. இந்த முக்கிய சாலையில் கருமந்தன்பட்டி கிராமத்தில் உள்ள திரு.சுப்ரமணியன் என்ற நபர் கடந்த பல ஆண்டுகளாக நகை அடகு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அவரது கடை பகுதியை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது தங்க நகைகளை அடகு வைத்து வைத்து அதன் மூலம் பணம் கடன் வாங்குவது வழக்கம். சிவகங்கை பகுதியில் சமீப காலமாக பலத்த மழை பெய்து வருவதனால் ஏராளமான…
Read More சிவகங்கையில் உள்ள அடகு கடையில் 200 பவுன் நகை திருட்டுகாவல்துறை பாதுகாப்பு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அதிகரிப்பு
Special police security provided to Kudankulam Nuclear Power Plant to over come the threat by local protesters and especially from Kerala based protesters கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றிலும் பல அடுக்கு பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இது பற்றி காவல்துறை அதிகாரிகள் கூறுகையில் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு திட்டத்தை எதிர்பவர்களால் தினமும் பல வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தவண்ணம் இருப்பதால், இந்த கூடுதல் அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றார்கள். மேலும் வலுவான எதிர்ப்பு கேரளா மாநிலத்தில் இருந்து தற்சமயம் வந்துகொண்டிருப்பதாகவும் அங்கிருந்தும் பல வெடிகுண்டு மிரட்டல்கள் வந்திருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அணு உலை அருகே அமைந்துள்ள கடற்பகுதியில் காவல்துறையினர் 500க்கும் அதிகமானோர் பாதுகாப்பு பணியில் படகு மூலமாக ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி கூறியிருக்கிறார்.எனினும் அனல் மின்நிலையத்தில்…
Read More காவல்துறை பாதுகாப்பு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அதிகரிப்புபள்ளிவளாகத்தில் 6 ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி
school girl immolated herself in Kanchipuram காஞ்சிபுரதை அடுத்து உள்ள திருவண்ணாமலை மாவட்டம் தூசி எனும் ஊருக்கு அருகில் அப்துல்லாபுரம் தோப்புத் தெருவைச் சேர்ந்த நபர் கன்னியப்பன். ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு தேன்மொழி மனைவியும், இந்த தம்பதியினருக்கு கல்லூரி படிப்பு படிக்கும் ஒரு மகளும், காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் உள்ள ஆற்காடு நாராயணசாமி முதலியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு பயிலும் சினேகா (வயது 11) என்ற மகளும் உள்ளார்கள். கன்னியப்பன் தனது ஆட்டோவில் தினமும் தனது மகள் சினேகாவை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு சென்று, மாலை வேலையில் பள்ளி முடிந்தவுடன் அழைத்துச் போவது வழக்கம். இந்நிலையில் செவ்வாயன்று எப்போதும் போல், பள்ளிகூடத்திற்கு வந்த மாணவி சினேகா, பள்ளி இடைவேளை நேரத்தில் கழிவறைக்குள் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி…
Read More பள்ளிவளாகத்தில் 6 ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி2 மாதத்திற்கு பிறகு தமிழகம் ஆந்திரா இடையே பேருந்து இயக்கம்
Bus Transport started again between Andhrapradesh and Tamilnadu ஆந்திராவிற்கு கடந்த 2 மாதங்களுக்குப் பின் தமிழ்நாட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படுவதால் திருப்பதி திருமலை பிரமோற்சவத்துக்குச் சென்ற பக்தர்கள் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். தெலங்கானா பகுதியை தனி மாநிலமாக பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. ஆந்திர கடலோர மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து பந்த் (வேலை நிறுத்தம்) அறிவிக்கப்பட்டதால் கடந்த ஜூலை 31-ம் தேதி முதல் ஆந்திரபிரதேசத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகளும், தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா பிரதேசத்திற்கும் இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஒரு மாததிற்குப்பின் பதற்றம் சற்றே தணிந்து, தற்சமயம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம் சார்பில், சித்தூர் உள்பட்ட ஆந்திரபிரதேச எல்லை மாவட்டங்களுக்கு மட்டும் ஒருசில பேருந்துகள் இயக்கப்பட்டன.…
Read More 2 மாதத்திற்கு பிறகு தமிழகம் ஆந்திரா இடையே பேருந்து இயக்கம்தீவிரவாதி பன்னா இஸ்மாயிலுக்கு அறுவை சிகிச்சை 2 குண்டுகள் அகற்றம்
doctors removed bullet from terrorist PannaIsmail body தீவிரவாதி பன்னா இஸ்மாயிலின் உடம்பில் பாய்ந்திருந்த துப்பாக்கிக் தோட்டாக்களை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவை அகற்ற பட்டுள்ளன.சென்ற சனிக்கிழமை, தமிழக ஆந்திரபிரதேச எல்லை பகுதி புத்தூரில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் மற்றும் அவர்களது கூட்டாளிகளை கைது செய்ய முயன்ற போது தமிழக காவல்துறை ஆய்வாளர் லட்சுமணன் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதன் பின்னர் பாதுகாப்பு கருத்தில் கொண்டு, காவல் துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி பன்னா இஸ்மாயில் காயமடைந்தான். பிறகு, கைது செய்யப்பட்ட அவன், சிகிச்சைக்காக சென்னை இராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டான். பயங்கரவாதி பன்னா இஸ்மாயிலின் இரைப்பைக்கும், கணையத்திற்கும் இடையே துப்பாக்கி தோட்டா பாய்ந்திருந்ததால், அதை அகற்றுவது ஆபத்தானது என கருதி அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் தாமதபடுத்தி வந்தார்கள். தேவையான…
Read More தீவிரவாதி பன்னா இஸ்மாயிலுக்கு அறுவை சிகிச்சை 2 குண்டுகள் அகற்றம்மணல் கொள்ளை… நீதிமன்றம் கண்டனம் செய்த காஞ்சிபுரம் ஆட்சியர் இடைநீக்கம்
Shri. L.Sitherasenan I.A.S., District Collector Collectorate, Kanchipuram suspended சென்னை: மணல் கொள்ளை சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சித்தரசேனன் இடைநீக்கம் செய்யப்பட்டார். காஞ்சிபுரத்தில் உள்ள பல கிராமங்களில் மணல் கொள்ளை நடைபெறுவதாகவும் அதை தடுக்க வற்புறுத்தியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பூந்தமல்லி வட்டார ஆற்று மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்து இந்த வழக்கில் கடந்த 19ந் தேதி நீதிபதி மணிகுமார் காஞ்சிபுரம் மாவட்ட அரசு உயர் அதிகாரிகளுக்கு கண்டனங்களை தெரிவித்தார். இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திரு.சித்திரசேனனை இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. Shri. L.Sitherasenan I.A.S., District Collector Collectorate, Kanchipuram suspended
Read More மணல் கொள்ளை… நீதிமன்றம் கண்டனம் செய்த காஞ்சிபுரம் ஆட்சியர் இடைநீக்கம்ஒரு ஆண்டில் 10 தலைவர்களை கொல்ல சதி: போலீஸ் பக்ருதீன்
planned to assassinate 10 hindu leaders a year : Police Bakrudeen ஆண்டு ஒன்றுக்கு குறைந்த பட்சம் சுமார் 10 பேரை கொன்று குவிக்க சதி திட்டம் தீட்டினோம். ஆனால் 5 பேரை மட்டுமே கொல்ல முடிந்தது என்று பயங்கரவாதிகள் போலீஸ் பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக் ஆகியோர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். வெள்ளையப்பன், மதுரை சுரேஷ், ஆடிட்டர் ரமேஷ் உள்பட இந்து தலைவர்கள் படுகொலை தொடர்பாக தேடப்பட்ட போலீஸ் பக்ருதீன் சென்னையில் பிடிபட்டான். ஆந்திர மாநிலம் உள்ள புத்தூரில் தலைமறைவாக இருந்த அவனது கூட்டாளி பயங்கரவாதிகள் பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் ஆகியோரை மிக நீண்ட துப்பாக்கி சண்டைக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்தார்கள். இதில், வயிற்றில் குண்டு பாய்ந்த பன்னா இஸ்மாயில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கைது…
Read More ஒரு ஆண்டில் 10 தலைவர்களை கொல்ல சதி: போலீஸ் பக்ருதீன்