Nuclear-capable Agni-V tested second time in Odisha coast of Wheelar’s Island successfully at 08:50 hours from launch complex of Integrated Test Range (ITR)
இந்திய ராணுவதை சார்ந்த விஞ்ஞானிகள் ஏவுகணை தயாரிப்புகளில் ஈடுபட்டு அக்னி ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறார்கள். அக்னி ஏவுகணைகள் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து குறித்த இலக்கை தாக்கி அழிக்க கூடிய வல்லமையை பெற்றது. தற்சமயம், அக்னி 5’ ஏவுகணையை இந்திய ராணுவ விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இன்று காலை 8.50 மணிக்கு அக்னி 5’ ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. ஓடிச மாநிலத்தில் வீலர் தீவில் அமைந்துள்ள ஏவுகணை தளத்திலிருந்து அக்னி 5’ ஏவுகணை ஏவப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகள் அறிவித்தனர். அக்னி 5’ ஏவுகணை சுமார் 5000 கி.மீ. தூரம் இலக்கை நோக்கி பறந்து சென்று தாக்கும் திறன் பெற்றதாகும். இந்த ஏவுகணை சுமார் 1 டன் எடைகொண்ட அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் பெற்றது. இந்த ஏவுகணை தானியங்கி மூலமாக இன்று இயக்கப்பட்டு சோதனை செய்யபட்டதில், இது சில நொடிகளில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சீறிஇலக்கை நோக்கி பாய்ந்து தாக்கியது. இந்திய ராணுவ விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள், இந்த ஏவுகணை சோதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதற்கு முன் தயாரிக்கப்பட்ட “அக்னி 4” வகை ஏவுகணை 3500 கி.மீ. வரை இலக்கு நோக்கி சென்று தாக்கக்கூடிய அளவில் தயாரிக்கப்பட்டு இருந்தது. தற்சமயம் தயாரிக்கப்பட்டுள்ள ‘அக்னி 5’ ஏவுகணை சுமார் 5000 கி.மீ. வரை இலக்கு நோக்கி பயணித்து சென்று தாக்கும் வல்லமை பெற்றதாகும். இதற்கு முன்னர் 2012–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19–ந்தேதி அக்னி ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Nuclear-capable Agni-V tested second time in Odisha coast of Wheelar’s Island successfully at 08:50 hours from launch complex of Integrated Test Range (ITR)
India today successfully test-fired its inter-continental surface-to-surface ballistic missile Agni-V, with a strike range of over 5,000 km and capability of delivering a nuclear warhead with high precision, from a base off Odisha coast.
The missile had its maiden launch last year. “A symbol of DRDO’s technological excellence and India’s strength, Agni-V missile took off majestically at about 0850 hours from the launch complex of the Integrated Test Range (ITR) at Wheelar’s Island,” a DRDO official said.
Nuclear-capable Agni-V is a continuous development and improvement of Agni-IV which is capable of traveling 3500km.