தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானத்தில் பற்றிய திடீரென தீ

spice jet flight forced to  land after fire

spice jet flight forced to  land after fire
spice jet flight

 

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட பயணிகள் விமானத்தில் திடீரென தீப்பிடித்த காரணத்தால் அவசரம் அவசரமாக பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். சென்னை- தூத்துக்குடி இடையே ஸ்பைஸ்ஜெட் தனியார் விமானம் தினமும் இருமுறை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், செவ்வாய்கிழமை காலை தூத்துக்குடி வாகைகுளத்தில் இருந்து பயணிகளுடன் விமானம் புறப்பட்டது. ஓடுதளத்தில் விமானம் ஊர்ந்து கொண்டிருந்த போது திடீரென புகை பரவியது. இதனால் விமானத்துக்குள் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு பயணிகள் அவசரம் அவசரமாக இறக்கிவிடப்பட்டனர். இதனால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சென்னை புறப்பட இருந்த விமானத்தில் திடீரென தீ பற்றியதால் தூத்துக்குடி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் அடிக்கடி கோளாறு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் இதேபோல் சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. விமானியின் சாதுர்யத்தால் பயணிகள் ஆபத்து எதுவும் இன்றி தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரச்னை தொடர்பாக தூத்துக்குடி விமான நிலையப் பொறுப்பாளர் பிரபாகரன் கூறுகையில், ஓடுதளம் சிறியது என்பதால் இதுபோன்ற பிரச்னை அடிக்கடி ஏற்படுவது உண்டு. ஆனால், பயணிகளுக்கு எந்தவித பாதிப்பையும் இது ஏற்படுத்தாது என்றார்.

spice jet flight forced to land after fire

A Chennai bound Spice jet flight made an emergency landing at tuticorin airport early on Tuesday morning as smoke billowed from engine.

Related posts