அவசர வழக்குகளை விசாரிப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் இரண்டாம் பகுதி விடுமுறை அமர்வு அறிவிப்பு

Supreme court of India

டெல்லி: இந்திய உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மே 25, 2021 அன்று அவசர
வழக்குகளை விசாரிப்பதற்கான கோடை விடுமுறை அமர்வு இரண்டாம் பகுதி (மே 26,
2021 முதல் ஜூன் 2, 2021 வரை) அறிவிப்பு வெளியிட்டது.

இந்திய தலைமை நீதிபதி, கோடை விடுமுறையில் மிகவும் அவசர இதர வழக்குகளை
விசாரிப்பதற்கான இரண்டாம் பகுதி (மே 26, 2021 முதல் ஜூன் 2, 2021 வரை)
கீழ்க்கண்டவாறு பரிந்துரை செய்துள்ளது.

விடுமுறையின் இரண்டாம் பாகத்தின் முதல் அமர்வு (மே 26, 2021 முதல் ஜூன்
02, 2021 வரை) – நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ் மற்றும் அனிருத்த போஸ்.

விடுமுறையின் இரண்டாம் பாகத்தின் இரண்டாவது அமர்வு (மே 26, 2021 முதல் மே
28, 2021 வரை) – நீதிபதிகள் பி. ஆர். கவாய் மற்றும் சூர்யா காந்த்.

விடுமுறையின் இரண்டாம் பாகத்தின் இரண்டாவது அமர்வு (மே 29, 2021 முதல்
ஜூன் 02, 2021 வரை) – நீதிபதிகள் பி. ஆர். கவாய் மற்றும் கிருஷ்ணா முராரி.

Related posts