A fish auction house in Tuticorin was gutted in fire
தூத்துக்குடியில் தனியார் மீன் ஏலக்கூடம் தீ விபத்தில் எரிந்து சேதமானது. தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் கென்னடி. இவருக்கு சொந்தமான மீன் ஏலக்கூடம் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் உள்ளது. இந்த ஏலக்கூடத்தில் இன்று காலையில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்புபடை வீரர்கள் நிலையஅதிகாரி மாரியப்பன் தலைமையில் விரைந்து வந்தனர். தீயணைப்புடை வீரர்கள் சுமார் 30நிமிடநேரம் போராடி தீயை தடுத்து அணைத்தனர். இருந்தபோதும், தீ விபத்தில் ஏலக்கூடத்தில் இருந்த 5லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ஏற்றுமதிக்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த மீன்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
A fish auction house Tuticorin was gutted in fire
A fish auction house was gutted in fire in Tuticorin this morning.
Advertisement: REAL ESTATE
Real estate Consultants and Builders in chennai