விருதுநகர் காதல் ஜோடி குண்டாறு வனப்பகுதியில் தற்கொலை

A love pair from Viruthunagar committed suicide in Gundaru forest
A love pair from Viruthunagar committed suicide in Gundaru forest

விருதுநகரைச் சேர்ந்த காதல் ஜோடி ஒன்று குண்டாறு வனப்பகுதியில் தற்கொலை செய்து கொண்டது. செங்கோட்டை அருகேயுள்ள குண்டாறு நீர்த்தேக்கம் வனப்பகுதியில் காதல் ஜோடி ஒன்று இறந்துகிடப்பதாக செங்கோட்டை காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தென்காசி ஏ.எஸ்.பி.அரவிந்தன், சப்.இன்ஸ்பெக்டர் பவுன் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விசாரணையில் இறந்து கிடந்தவர்கள் விருதுநகர் பாலன் நகரைச் சேர்ந்த முனியாண்டி என்பவரது மகன் செந்தில்குமார் என்று தெரிய வந்தது. ஆனால் அந்த பெண் எந்த ஊரை சார்ந்தவர் என்று தெரியவில்லை. இறந்து கிடந்த பெண், மதுரை எஸ்.கோட்டைப்பட்டியில் இயங்கிவரும் பராசக்தி ஆசிரியர் பயற்சி பள்ளியில் டி.எட்.படித்துவரும் ராமதேவி என்பது பின்னர் தெரிய வந்தது. இருவரும் காதலித்து வந்ததாகவும், காதலில் பிரச்சினை ஏற்பட்டதால், குளிர்பானத்தில் விஷத்தைக் கலந்து உயிர் நீத்திருக்கலாம் என்றும் தெரிகிறது. இருவரும் இரு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. போலீஸார் அவர்களது உடலைக் கைப்பற்றி செங்கோட்டை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

A love pair from Viruthunagar committed suicide in Gundaru forest. Police have filed a case and investigating.

Related posts