இன்று உலக சுற்றுச்சூழல் தினம்

Today is World Environment Day

Today is World Environment Day
Today is World Environment Day

உலகின் கடற்கரையோரங்களில் அமைந்துள்ள நகரங்களையும், கிராமங்களையும், புராதனச்சின்னங்களையும், அவற்றில் வாழும் மக்களையும், இயற்கை வளத்தையும் காக்கும் நோக்கோடு ஐநா ஆண்டு தோறும் ஜூன் 5ம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடி வருகிறது. ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் இதனைப் பொறுப்பேற்று நடத்தி வருகிறது. இவ்வாண்டில் “சிறு தீவுகளும், காலநிலை மாற்றமும்” கருப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டின் முழக்கமாக “குரலை உயர்த்துங்கள் – கடல்மட்டத்தை அல்ல” என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் – நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள் உள்ளிட்ட இந்தியாவின் மொத்த கடலோரத்தின் நீளம் 7517 கிலோ மீட்டர் ஆகும். உலகின் மிக அதிகமான கடலோரத்தைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். பூமி வெப்பமடைதலால் துருவங்களில் உள்ள பனிப்படிவங்கள் உருகுகின்றன. இதனால் கடல் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. கடல் நீர்மட்டம் உயர்வதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடல் அரிப்புகளும், கடல் ஊர்களுக்குள் நுழைவதும் அதிகரித்து வருகிறது.

மேற்கு வங்காளத்தில் பல தீவுகள் மூழ்கி விட்டன. தமிழகத்தின் அருகே உள்ள பல திட்டுகளைப் பற்றி அரசு கவலைப்படுவதில்லை. அவற்றில் பல மூழ்கி இருக்கக் கூடும். வடசென்னையில் திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் உள்ள பல மீனவர் குப்பங்களில் கடல் அரிப்பால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நல்ல தண்ணீர் ஓடை குப்பம், திருச்சினாங்குப்பம், திருவொற்றியூர் குப்பம், இந்திரா காந்தி குப்பம், சின்னகுப்பம், பெரிய குப்பம், தாழங்குப்பம், நெட்டுகுப்பம் என 21 மீனவர் கிராமங்கள் இப்பகுதியில் உள்ளன. இப்பகுதிகளில் வாழும் மக்களின் தொகை சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும். இங்கு பல ஆண்டுகளாக கடல் அரிப்பால் மக்கள் பலத்த சேதத்தைச் சந்தித்து வருகின்றனர்.

கடந்த பத்தாண்டுகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கடலில் மூழ்கியுள்ளன. கடல் அரிப்பைத் தடுக்க தடுப்பாகப் போடப்பட்ட பாறாங்கற்களையும் கடல் இழுத்துச் சென்று விட்டது. தரங்கம்பாடியில் உள்ள டேனிஷ் கோட்டை பொன்ற புராதனச்சின்னங்களும் கடல்மட்ட உயர்வால் பாதிப்படையக்கூடும். அங்குள்ள மாசில்நாதர் ஆலயம் ஏற்கனவே கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. கோடிக்கரை பல்லுயிர்பெருக்க காப்பகமும் அழியக்கூடும். நாம் செய்யவேண்டியதுசுற்றுச்சூழல் தினத்துடன் சுற்றுச்சூழலை நாம் மறந்து விடக்கூடாது என்பது நமது முதல் உறுதியாக இருக்க வேண்டும். சுற்றுச்சூழலை நாம் தனியாக பாதுகாக்க வேண்டியதில்லை. நாம் வாழும் வீடு, வசிக்கும் வீதி, குடியிருக்கும் நகரம், நம்மைச் சுற்றியுள்ள இயற்கை ஆதாரங்களை சுத்தமாக வைத்திருந்தால் போதுமானது.முதலில் தண்ணீரை வீணாக்காமல் பாதுகாப்போம். சொட்டும் குழாய்களை அகற்றிவிட்டு புது குழாய்களைப் பொருத்துவோம். ஒரு வினாடிக்கு ஒரு சொட்டு நீரைச் சொட்டும் குழாய் மூலம் ஆண்டொன்றுக்கு பத்தாயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகிறது. மேலைநாட்டு கழிப்பறையில் நீர் ஒழுகாமல் பார்த்துக்கொள்வோம்.பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்ப்போம்.

பிளாஸ்டிக் மக்காது என்பதால் பூமிக்குள் நீரை தடுத்து நிறுத்தி விடுவதுடன், மண்வளத்தையும் அழித்து விடுகிறது. ஆண்டு தோறும் ஐம்பதாயிரம் கோடி பிளாஸ்டிக் பைகள் விற்பனை ஆகின்றன. எனவே துணிப்பைகளுக்கு மாறுவோம். கடைக்குச் செல்லும் போது துணிப்பையைக் கொண்டு செல்லுவோம். உள்ளூரில் விளையும் பொருட்களை உண்போம், பயன்படுத்துவோம். இறக்குமதி செய்யப்படும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக எரிசக்தி வீணடிக்கப்படுகிறது. அவை கெடாமல் இருக்க பூச்சிக்கொல்லிகளும் அடிக்கப்படுவதால் அவை விஷமாக மாறுகின்றன.

வீட்டில் உள்ள குண்டு பல்பு, டியூப் லைட் ஆகியவற்றை அகற்றி விட்டு எல்.இ.டி; சி.எஃப்.எல். பல்புகளை பொருத்துங்கள். இவை கால் பங்கு மின்சக்தியை பயன்படுத்தி எட்டு மடங்கு அதிகம் உழைக்கும். பயன்படுத்தாத போது டிவி, ரேடியோ, கணினி, மின்விசிறி, விளக்கு ஆகியவற்றை அணைத்து விடுங்கள். இதன் மூலம் ஆண்டுக்கு ஆயிரம் கிலோ கார்பன் டை ஆக்சைடு வெளியீட்டைக் குறைக்கலாம். தனிநபர் வாகனம் ஒன்று ஒவ்வொரு ஐந்து கிலோ மீட்டருக்கும் ஒன்றரை கிலோ கார்பன்- டை – ஆக்சைடை வெளியேற்றுகின்றன. ஒரு டன் காகிதம் தயாரிக்க 11மீ உயரமுள்ள 17 மரங்கள் தேவையாகும். எனவே காகிதப்பயன்பாட்டை குறையுங்கள். ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு அரை கிலோ குப்பையை உருவாக்குகிறோம். இவை எங்கோ ஒரு இடத்தில் கொட்டப்பட்டு பின்னர் எரிக்கப்படுகின்றன.

இதனால் பூமி வெப்பமடைதல் அதிகரிக்கிறது. பிளாஸ்டிக், காகிதம் பொன்றவற்றை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவோம். குப்பைகளை 25 விழுக்காடு குறைத்தால், 500கிலோ கார்பன் டை ஆக்சைடு வெளியீட்டைக் குறைக்கலாம். கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி பயன்படுத்தும் பசுமைத்தாவரங்களை முடிந்த இடங்களில் நட்டு பராமரியுங்கள்இவையெல்லாம் நம்மால் செய்ய முடிந்தவைகள் தான். இவற்றைக் கையாளுவதின் மூலம் நாமிருக்கும் பூமியை பத்திரமாகப் பாதுகாத்து எதிர்கால சந்ததிக்கு சொத்தாக மாற்றுவோம்.

Today is World Environment Day

Today is World Environment Day
Today is World Environment Day

World Environment Day is held each year on June 5. It is one of the principal vehicles through which the United Nations (UN) stimulates worldwide awareness of the environment and enhances political attention and action. World Environment Day is celebrated in many ways in countries such as Kenya, New Zealand, Poland, Spain and the United States. Activities include street rallies and parades, as well as concerts, tree planting, and clean-up campaigns. In many countries, this annual event is used to enhance political attention and action towards improving the environment. This observance also provides an opportunity to sign or ratify international environmental conventions. World Environment Day was established by the United Nations General Assembly in 1972 to mark the opening of the Stockholm Conference on the Human Environment. Another resolution, adopted by the General Assembly the same day, led to the creation of UNEP. It is hosted every year by a different city and commemorated with an international exposition through the week of June 5. The main colors featured in many promotions for this event are natural colors depicting nature, the earth and its natural resources. These colors are often softer shades of green, brown and blue. Images of natural the earth’s features, such as snowy mountains, clean beaches, unpolluted rivers, and photos of natural flora and fauna, including fern leaves, are used to promote campaigns supporting the day.

Related posts