கண்ணாடி இல்லாமல் 3டி திரைப்படம்: புதிய தொழில்நுட்ப தயாரிப்பு

New ‘Screen X’ technology offers 3D effect without special glasses

New ‘Screen X’ technology offers 3D effect without special glasses

மூன்று பரிமாணத்துடன் உள்ள ‘3டி’ திரைபடங்கள் சிறப்பு ஒலி, ஒளி அமைப்புகளோடு தயாரிக்கப்பட்டு வெள்ளிதிரைக்கு வருகிறது. இந்த ‘3டி’ திரைப்படங்களை சிறப்பு கண்ணாடி அணிந்து மட்டுமே காண முடியும். கண்ணாடி அணியாமல் பார்த்தால் அதற்குண்டான ஸ்பெஷல் எபெக்ட் இருக்காது.
அனால் புதிய தொழில் நுட்ப கண்டுபிடிப்பு மூலம் தற்போது, அதை விஞ்சும் வகையில் மிக பிரமாண்டமான திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைபடத்தை சிறப்பு கண்ணாடி அணியாமல் சாதாரணமாக கண்டு ரசிக்க முடியும். கடந்த வாரம் புசான் சர்வதேச திரைப்பட விழா நிகழ்ச்சியில் சினிமா தொடர் சி.ஜே. சிஜிவி உருவாக்கப்பட்ட 30 நிமிடம் ஓடக்கூடிய ஸ்க்ரீன் எக்ஸ் படம் வெளியிட்டுள்ளனர்.

இந்த திரைபடத்தை 270 டிகிரி கோணத்தில் பார்க்கலாம். இந்த திரைபடம் ‘ஸ்கிரீன் எக்ஸ்’ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஒரே காட்சியை 3 நவீன காமிராக்களில் பல்வேறு கோணங்களில் படம் எடுத்து அதை ஒருங்கிணைத்துள்ளனர்.

சிறப்பான பல அம்சங்களுடன் இந்த திரைபடத்தை தென்கொரிய டைரக்டர் கிம்ஜிவூன் உருவாக்கிஇருக்கிறார். இந்த திரைபடத்திற்கு ‘தி எக்ஸ்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படம் 30 நிமிடங்கள் ஓடக்கூடிய உளவாளி, ‘திரில்லர்’ கதை அம்சங்களுடன் கூடிய திரை படமாகும். கடந்த வாரம் புசானில் நடைபெற்ற தென்கொரியாவின் சர்வதேச படவிழாவில் ‘பிரீமியர் ஷோ’ ஆக இந்த திரைப்படம் திரையிடப்பட்டது.

தென் கொரியாவில் இருக்கும் 31 திரையரங்குகளில் இம்மாத இறுதியில் இந்த திரைப்படம் வெளியிட பட இருக்கிறது. அதற்கென கூடுதல் திரைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த திரைப்படம் உருவாக்கியது பற்றி டைரக்டர் கிம் ஜி வூன் பேசும் போது, ‘இந்த புதிய தொழில்நுட்பம் திரைப்படத்துறைக்கு மிகப்பெரிய பிரமாண்டத்தை அளித்திருக்கிறது என  கூறியுள்ளார்.

New ‘Screen X’ technology offers 3D effect without special glasses

A new format that gives movie-goers a panoramic 270 degree view will be rolled out by South Korea’s biggest cinema chain this month, using the walls of theatres as additional screens. Screen X, developed by cinema chain CJ CGV, was on show at the Busan International Film Festival last week in the premiere of a 30-minute spy thriller “The X”, directed by Kim Jee-Woon , a film commissioned to showcase the expanded three-screen format.Kim, who directed this year’s Arnold Schwarzenegger action adventure “The Last Stand”, said the technology brought a more immersive experience to the cinema.

Related posts