Huge Half-Ton Chunk of Russian Meteorite Lifted From Lakebed
விண்ணிலிருந்து விழுந்த மிகப்பெரிய விண்கல்லின் ஒரு பகுதி ரஷ்யாவில் உள்ள ஒரு ஏரியில் இருந்து கண்டெடுத்து மீட்கப்பட்டிருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யாவில் விண்ணிலிருந்து விழுந்த 11,000 டன் எடை உள்ள பெரிய விண்கல் ஒன்று செல்யாபின்ஸ்க் எனும் நகரத்தின் மேல் 30-வது கிலோ மீட்டர் தூரத்தில் சிதறடிக்கபட்டது.
இந்த விண்கல் வ்ழுந்ததால் அங்குள்ள சுமார் 1600 பேர் பாதிக்கப்பட்டனர். சிதறி விழுந்த விண்கல்லின் துண்டுகள் செல்யாபின்ஸ்க் நகர் மற்றும் அங்கு அருகில் இருக்கும் செபர்குல் ஏரியிலும் விழுந்தது. கடந்த ஏழு மாதங்களாக, ஆங்காங்கே சிதறிக்கிடந்த விண்கல் துண்டுகளை தேடும் பணி நடந்து வருகின்றன.
நீர் மூழ்கி வீரர் உதவியுடன் நவீன கருவிகளை கொண்டு நடைபெற்ற தேடுதல் வேட்டையில், ஒரு விண்கல் துண்டு செபர்குல் ஏரியில் சுமார் 20 மீ ஆழத்தில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 10 நாட்கள் தொடர்ந்து நடந்து வந்த இந்த தேடுதல் பணியில், மிகுந்த சிரமத்திற்கு பின் விழுந்து கிடந்த இந்த விண்கல் துண்டு ஏரியில் இருந்து எடுக்கப்பட்டது. சுமார் 570 கிலோ கொண்ட இந்த விண்கல்லை, விஜ்ஜானிகள் எடையை கண்டறிய முயன்றப்போது, அந்த கல் மூன்று துண்டுகளாக உடைந்தது.
சுமார் 12 விண்கல் பாகங்களை செபர்குல் ஏரியில் இருந்து இதுவரை மீட்கப்பட்டுள்ளது. இதில், இதுவரை கண்டறியப்பட்ட விண்கற்களை ஒப்பிடும்போது தற்போது எடுக்கப்பட்ட விண்கல் பாகம் தான் மிக பெரியதாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.