Supreme Court to examine curbs on news on private FM radio
இந்தியாவில் இருக்கும் தனியார் வானொலி நிறுவனங்களுக்கு செய்திகள் ஒளிபரப்ப அனுமதி கொடுக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்த பொது நலன் மனுவை ஒன்றை விசாரணை செய்த இந்திய உச்சநீதிமன்றம், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கும் அரசாங்கம், தனியார் வானொலிகளுக்கு மட்டும் செய்திகள் ஒளிபரப்ப கொடுக்க மறுப்பது ஏன் என இந்திய மத்திய அரசாங்கத்திற்கு கேள்வி எழுப்பி இருக்கிறது.
பொது நல மனு ஒன்றை எற்ற தலைமை நீதிபதி திரு.பி.சதாசிவம் அவர்களின் தலைமையில் உள்ள அமர்வு நீதிமன்றம், தனியார் தொலைகாட்சி நிறுவனங்கள், செய்தித்தாள் நிறுவனங்கள், சஞ்சிகைகள் உள்பட்ட மற்ற தனியார் ஊடகங்கள் அனைத்திற்கும் செய்திகள் ஒளிபரப்ப அனுமதி வழங்கியுள்ள போது, பண்பலை வானொலி நிறுவனங்களுக்கும், சமுதாய வானொலி நிறுவனங்களுக்கும் மட்டும் செய்திகள் ஒளிபரப்ப மத்திய அரசு அனுமதி வழங்க மறுப்பது ஏன்? என கேள்வி எழுப்பிஇருக்கிறது.
இந்தியாவில் உள்ள தனியார் தொலைகாட்சி நிறுவனங்கள் செய்திகள் ஒளிபரப்பி வருகிறது. இந்த நிலையில் பொதுமக்களை விரைவாகவும் எளிதிலும் சென்றடையும் ஊடகமான வானொலி நிறுவனங்களுக்கு செய்திகள் வழங்க அனுமதி அளிப்பதில் தவறு ஏதும் கிடையாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. இந்த நிலையில் இக்கோரிக்கை பற்றி மத்திய அரசு தனது பதில்மனுவை தாக்கல் செய்யும்படி உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறபித்துள்ளனர்.
இது பற்றி சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கையில் செல் போனில் கூட செய்திகள் பரிமாற அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் வானொலி நிறுவனங்களுக்கு மட்டும் செய்திகள் ஒளிபரப்ப இந்தியாவில் அனுமதி வழங்காமல் உள்ளது மிகவும் தவறான ஒரு அணுகுமுறை கூறுகிறார்கள். மேலும் அவர்கள், ஏழை எளிய மக்களுக்கு, அதிவேகமாக பிரபலமாகி வளர்ந்து கொண்டிருக்கும் ஊடகமான வானொலியில் செய்திகள் ஒளிபரப்புவது மிகவும் பயனுள்ளவையாக இருக்கும் என வாதாடுகின்றனர்.
எனினும் இந்த கருத்தை ஏற்று கொள்ள மறுக்கும் இந்திய அரசாங்க உள்துறை அமைச்சகம், வானொலி நிறுவனங்களுக்கு செய்திகள் ஒளிபரப்பும் உரிமையை தனியாருக்கு கொடுத்தால், இந்திய இறையாண்மைக்கு தொல்லை கொடுத்து பெரும் சவாலாக உள்ளதாக மத்திய அரசு கருதும் மாவோயிஸ்டுகள் உள்பட பல்வேறு பிரிவினைவாத மற்றும் தீவிரவாத குழுக்களுடைய பிரச்சாரம் தனியார் வானொலிகளில் கூடுதலாகும் எனவும் அதனை கண்காணித்து கட்டுக்குள் கொண்டுவருவது மத்திய அரசாங்கத்திற்கு கடுமையான தலைவலியாக உருவாகும் என வாதிடுகிறது.
தனியாருக்கு சொந்தமான வானொலி நிறுவனங்களுக்கு செய்திகள் ஒலிபரப்ப அனுமதியளிதால், இந்தியாவினுடைய இறையாண்மைக்கு தலைவலி உண்டாகும் எனும் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு கடந்த காலத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானாலும், முதல் முதலில் இந்த பிரச்சினையில் இந்தியாவின் உச்சநீதிமன்றம் தலையிட்டுள்ளது முக்கியமான ஒரு திருப்புமுனையாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.
Supreme Court to examine curbs on news on private FM radio
The Supreme Court, hearing a PIL by an NGO, on Thursday said it will examine the rules that bar private FM radio channels and community radios from broadcasting news and current affairs. It also issued notice on the issue to the central government, returnable in two weeks.