4393 animals, 1.7 lakh birds killed in cyclone-flood in Odisha
பாய்லின் புயலால் உண்டான ஒடிஷா மாநில வெள்ளத்தில் சிக்கி 4,393 கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகள் மற்றும் 1.72 லட்சம் பறவைகள் பலியாகியிருக்கிறது. அண்மையில் ஒடிஷா மாநிலத்தை பலம் வாய்ந்த பாய்லின் புயல் தாக்கியது. இந்தப் புயல் கரையை கடந்த போது பலத்த சூறாவளி காற்று மணிக்கு சுமார் 220 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது. பெருமழை பெய்து வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இந்த வெள்ளத்தின் பாதிப்பு பற்றி நேற்று புவனேஸ்வரில் ஒடிஸா மாநில சிறப்பு நிவாரண ஆணையர் மொஹாபாத்ரா பத்திரிக்கை நிருபர்களிடம் உரையாடுகையில், இந்த கடுமையான வெள்ளத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட 4,393 பெரிய விலங்குகள் மற்றும் கோழிகள் உள்ளிட்ட 1,70,970 பறவைகள் பலியாகியுள்ளன. பேரிடர் நிகழ்ந்த போது 31,062 ஆடு, மாடுகள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுபோகபட்டன. எனினும் எல்லா விலங்குகளையும் பறவைகளையும் கொண்டு செல்ல முடியவில்லை. இயற்கைச் சீற்றத்தால் பாதிப்படைந்த 17 மாவட்ட கால்நடைகளுக்கு 533.25 மெட்ரிக் டன் உணவு பொருட்கள் விநியோகிக்கப்பட்டிருக்கிறது என கூறினார்.
4393 animals, 1.7 lakh birds killed in cyclone-flood in Odisha
Apart from 44 human lives, the twin calamities of cyclone and floods had taken a toll on 4,393 animals and 1,70,970 birds including chickens in Odisha, official sources said today.